மருந்தகக் கட்டமைப்பை வலுப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க மருந்தாளுநர் சங்கம் கோரிக்கை
19 Aug 2026, 9:49 pm

மருந்தகக் கட்டமைப்பை வலுப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க மருந்தாளுநர் சங்கம் கோரிக்கை

சென்னை, ஆக. 19-அரசு மருத்துவமனைகளில் மருந்தகக் கட்டமைப்பை மேம்படுத்தி, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மாநிலத் தலைவர் வெ. விஜயகுமரன் மற்றும் பொதுச்செயலாளர் உ. சண்முகம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை அறிக்கையையும், மருந்து மற்றும் அறுவை சிகிச்சை பொருட்கள் கொள்முதலுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீட்டையும் சங்கம் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் அறிவிக்கப்பட்ட 1090 மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்பும் பணியினை விரைந்து செயல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் முறையான இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றிப் பணிய மர்த்தப்பட்டு, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொகுப்பூதியத்தில் பணி யாற்றி வரும் 39 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர்களை அரசாணை களின்படி உடனடியாகப் பணி வரன்முறைப்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மருந்தியல் சட்டத்தின்படி, அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருந்து கிடங்குகளுக்குக் கூடுதலான இடவசதி வழங்க வேண்டும் என்றும், மருந்துகளை உரிய வெப்பநிலையில் முறையாகப் பராமரிக்கக் குளிர்பதன வசதியுடன் கூடிய கட்டடங்களை அமைக்க அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.