தமிழ்நாடு மருந்து, விற்பனை பிரதிநிதிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
15 Dec 2025, 5:05 pm
<p><strong>தமிழ்நாடு மருந்து, விற்பனை பிரதிநிதிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருச்சிராப்பள்ளி, டிச, 15, 29 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொகுப்பு சட்டங்களாக அமல்படுத்தியதை திரும்பப் பெற வேண்டும். மருந்து மற்றும் மருந்து உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில், சங்க திருச்சி மாவட்டக் குழு சார்பில், நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் சத்யநாராயணன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி பொதுச் செயலாளர் விவேகானந்தன், துணை பொதுச் செயலாளர் திலீப் மேனன், சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
