ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
13 Jul 2026, 10:44 pm

ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கடலூர், ஜூலை 13- தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதி யர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஓய்வூதியர்களின் நீண்டகால கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்திக் கடலூர் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழக அரசு அறிவித்துள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஓய்வூதியர்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால், அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். மேலும், விருப்பமின்றி கட்டாயப் பிரிமிய மாக ரூ. 644 பிடித்தம் செய்யக் கூடாது என்றும், வெளிப்படைத்தன்மையற்ற ‘பேக்கேஜ்’ முறையை கைவிட வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். ஓய்வூதியர் சங்கங்களைப் புறக்கணிக்கும் தமிழக அரசைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் டி. புருஷோத்தமன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆர். மனோகரன் தொடக்க உரையாற்றினார். மாநில அமைப்புச் செயலாளர் பாஸ்கரன், மாநிலத் துணைத் தலைவர்கள் எம்.மருதவாணன், சு. சண்முகம், ஆர். நட ராஜன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திப் பேசினர். இந்நிகழ்ச்சியில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் சங்கம், ஆசிரியர், மின்சாரம், ஊரக வளர்ச்சி, வேளாண்மை, வங்கி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி உள்ளிட்ட பல்வேறு துறை ஓய்வூதியர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநிலச் செயலாளர் ஜி. பழனி நிறைவுரையாற்ற, மாவட்டப் பொரு ளாளர் சி. குழந்தைவேலு நன்றி கூறினார்.