ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அரசாணையை திரும்பப் பெற வேண்டும் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்
2 Jul 2026, 9:48 pm

ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அரசாணையை திரும்பப் பெற வேண்டும் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 2 - ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கான அரசாணையை திரும்பப் பெற வேண்டுமென்று தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் ந. ஜெயச்சந்திரன், பொதுச்செயலாளர் கி. இளமாறன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உறுதி செய்யப்படாத காசு இல்லா மருத்துவம்?

1.7.26 முதல் 30.6.2031 வரையி லான ஐந்தாண்டுகள் செயல்படுத்தப் படும் வகையில் மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கான அரசாணை (எண்.123. நாள் 24.6.2026) வெளியிடப் பட்டு உள்ளது. ‘காசு இல்லா மருத்து வம்’ என அரசாணையில் தலைப்பிடப் பட்டாலும், ஓய்வூதியர்களுக்கு காசு இல்லா மருத்துவம் உறுதி செய்யப்பட வில்லை. கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் அனைவரும் இத்திட்டத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ளனர். சங்கங்களை கலந்தாலோசிக்காமல் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த காலங்களில் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டபோது, சிகிச்சை பெற்றோருக்கு முழுத்தொகை கிடைக்கவில்லை. திட்டத்தில் உள்ள குறைபாடுகளை பற்றி பலமுறை கரு வூலத்துறை இயக்குநரின் கவனத்திற்கு கொண்டுசென்றும் நடவடிக்கை இல்லை.

மருத்துவமனைகளின் கொள்ளைக்கு துணைபோவதா?

தற்போதைய அரசாணையில் சிகிச்சைக்கான பேக்கேஜ் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 992 சிகிச்சைகள், 46 சிறப்பு சிகிச்சைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது எவ்வளவு தொகை, என்னென்ன நோய்களுக்கு சிகிச்சை என வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. பிரிமியம் தொகையை 497 ரூபாயி லிருந்து 644 ரூபாயாக உயர்த்தி இருப்பது பொருத்தமற்றது. மருத்துவ மனைகள் ஏ1, ஏ2, பி, சி பிரிக்கப் பட்டுள்ளன. சி-பிரிவில் உள்ள மருத்துவ மனைகள் குறைந்த தரம் கொண்டதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கேற்ப தரம் வாரியாக மருத்துவ மனைகளுக்கான பேக்கேஜ் ரேட் அறிவிக்கப்படவில்லை. கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கொள்ளைக்கு துணைபோகும் வகையில் அரசாணை உள்ளது.

சங்கங்களுடன் கலந்து பேசாதது ஏன்?

அரசாணையில் குறிப்பிட்டுள்ள மருத்துவமனைகளைத் தவிர பிற மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் 60 சதவிகிதம் தொகை மட்டுமே தரப்படும் என்பது ‘கட்டண மில்லா மருத்துவம்’ என்ற நோக்கத்தையே நீர்த்துப் போகச் செய்கிறது. காப்பீட்டு நிறுவனத்தின் நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்று அரசாணையில் உள்ளது. ஓய்வூதியர் சங்கங்களைத் தவிர்த்துவிட்டு காப்பீட்டு நிறுவனத்தை மட்டுமே அழைத்து பேசியது அரசா ணை வெளியிட்டிருப்பது சட்டத்திற்கு புறம்பானது. உள் முரண்கள் அதிகம் உள்ள இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும். நீதிக்காக வீதிக்கும், நீதிமன்றத்திற்கும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் முரண்பா டுகளை களைந்திடவும், கட்டண மில்லா சிகிச்சை திட்டமாக செயல்படு வதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.