70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் 10 சதவீத ஓய்வூதியம் வழங்க வேண்டும் அனைத்து துறை ஓய்வூதியர் சங்க பேரவை கோரிக்கை
26 May 2026, 10:15 pm

70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் 10 சதவீத ஓய்வூதியம் வழங்க வேண்டும்

அனைத்து துறை ஓய்வூதியர் சங்க பேரவை கோரிக்கை

திருவில்லிபுத்தூர், மே 26- தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூ தியர் சங்கத்தின் திருவில்லிபுத்தூர் கிளை யின் ஆண்டு பேரவை நடைபெற்றது. பேரவைக்கு கிளைத் தலைவர் கருப் பையா தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் சரஸ்வதி, வட்டக் கிளை இணைச் செயலாளர் சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டக் கிளை துணைத் தலைவர் காளீஸ்வரன் வர வேற்புரை நிகழ்த்தினார். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன் பேர வையை தொடங்கி வைத்தார். கிளைச் செயலாளர் ராஜமாணிக்கம், பொருளாளர் ரத்தினம் ஆகியோர் அறிக்கை சமர்ப்பித் தனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூ தியர் சங்க மாவட்டச் செயலாளர் ராம. சீனி வாசன், முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் இளங்கோ, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் புளூ காண்டி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலச் செயலாளர் குருசாமி நிறைவு ரையாற்றினார். வட்டக்கிளை துணைத் தலைவர் புஷ்பம் நன்றி கூறினார். பேரவையில், ஓய்வூதிய நிதி திருத்த மசோதா–2025ஐ மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், எட்டாவது ஊதியக்குழு பயன்களை 31.12.2025க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்க வேண்டும், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் 10 சதவீத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.