தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாட்டில் ஆமை இறப்புகள் 50% குறைவு

1 Jun 2026, 11:58 pm
தமிழ்நாட்டில் ஆமை இறப்புகள் 50% குறைவு
<p><strong>தமிழ்நாட்டில் ஆமை இறப்புகள் 50% குறைவு</strong></p><p>​​​​​​​சென்னை, ஜூன் 1- கடுமையான மீன்பிடி விதிகள், ‘டெட்’ கருவிகள், தீவிரக் கண்கா ணிப்பு, விழிப்புணர்வுப் பேரணிகள் கார ணமாக, ஆலிவ் ரிட்லி ஆமைகளின் இறப்பு எண்ணிக்கை கடந்த பரு வத்தில் 1,575 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 786 ஆக குறைந்துள் ளது. இது கடந்த ஆண்டை விட 50% குறைவு ஆகும். கடந்த ஆண்டு ஆலிவ் ரிட்லி ஆமைகளின் இறப்பு எண்ணிக்கை அபாயகரமாக அதிகரித் திருந்த நிலையில், நடப்பு 2025-26 முட்டையிடும் பருவத்தில் அவற்றின் இறப்பு விகிதத்தை பாதியாகக் குறைக்க தமிழ்நாடு அரசு வெற்றிகர மாக நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக அரசு மீன்பிடி விதிமுறை களைத் தீவிரமாகக் கண்காணித்தது, ‘ஆமை தவிர்ப்பு கருவிகளை’ (TEDs - Turtle Excluder Devices) அதி களவில் பயன்படுத்தியது, விரிவான ரோந்துப் பணிகள் மற்றும் மீனவ சமூகத்தினரிடையே நடத்தப்பட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் ஆகியவையே இதற்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடப்புப் பருவத்தில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவியுள்ள 52 பொரிப்பகங்களின் மூலம் 1,986 கூடுகள் பாதுகாக்கப்பட்டு, 2,29,668 முட்டைகள் சேகரிக்கப்பட்டு, 1,91,560 ஆமைக் குஞ்சுகள் கடலில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை யின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு கூறுகையில்,”பல அரசு முகமைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கு கிடைத்த வெற்றி இது. வனத்துறை, மீன்வளத்துறை, இந்திய கடலோரக் காவல்படை, கடலோரப் பாதுகாப்புப் குழுமம், உள்ளாட்சி அமைப்புகள், பாதுகாப்பு நிறு வனங்கள் மற்றும் மிக முக்கியமாக மீனவ சமூகத்தின் கூட்டு முயற்சியால் இது சாத்தியமாகியுள்ளது. இந்த உன்னதமான கடல்வாழ் உயிரினத்தின் நீண்டகால வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக, அறிவியல் பூர்வமான பாதுகாப்பு மற்றும் சமூகப் பங்கேற்பை வலுப்படுத்துவதில் தமிழ்நாடு தொடர்ந்து உறுதியுடன் செயல்படும்” என்று அவர் கூறினார். முதலிடத்தில் சென்னை இந்தப் பருவத்தில் ஆமை முட்டை யிடும் முக்கிய மையமாக சென்னை உருவெடுத்துள்ளது. சென்னை வனவிலங்கு கோட்டத்தில் 656 கூடுகள் கண்டறியப்பட்டு, 74,143 முட்டைகள் சேகரிக்கப்பட்டு, 51,569 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக கடலூரில் 458 கூடுகள், 55,348 முட்டைகள், 50,019 ஆமைக் குஞ்சுகளும்; நாகப்பட்டி னத்தில் 267 கூடுகள், 30,499 முட்டைகள், 25,762 ஆமைக் குஞ்சுகளும் கடலில் விடுவிக்கப்பட்டுள்ளன. சென்னையின் வடக்குப் பகுதியில் பழவேற்காடு நோக்கிய பகுதிகளிலும் ஆமைகள் முட்டையிடும் நடவடிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. </p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.