தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வருகிற சட்டமன்றக் கூட்டத் தொடரில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியத்தை அறிவிக்க கோரிக்கை

13 Jun 2026, 11:11 pm
வருகிற சட்டமன்றக் கூட்டத் தொடரில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை  ஊதியத்தை அறிவிக்க கோரிக்கை

வருகிற சட்டமன்றக் கூட்டத் தொடரில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியத்தை அறிவிக்க கோரிக்கை

தூத்துக்குடி, ஜூன் 13 - தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத் தின் மாநிலச் செயற்குழு கூட்டம் தூத்துக்குடி யில் மாநிலத் தலைவர் பி.செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது.

மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.ஜெஸ்ஸி, மாவட்டச் செயலாளர் ஜெயபாக்கியம், மாவட்டத் தலைவர் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின் மாநிலத் தலைவர் செல்லத்துரை செய்தியாளர்களிடம் கூறுகை யில், “வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரில் சத்துணவு ஊழியர்களின் முக்கிய கோரிக்கை களான காலமுறை ஊதியம் வழங்குதல், அக விலைப்படியுடன் கூடிய ரூ.7,850 ஓய்வூதி யம் வழங்குதல் ஆகியவற்றை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

காலை உணவுத் திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே ஒப்படைத்து, அவர்கள் மூலமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள 60 சதவீத காலிப் பணியிடங்களை உடனடி யாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சத்துணவு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான காலமுறை ஊதியம் உள்ளிட்ட நிலுவை கோரிக்கைகள் மற்றும் ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. த

மிழக அரசு, சத்துணவு ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே கோரிக் கைகள் குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும்” என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.