முந்தய பக்கம்

காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை

18 Jul 2026, 11:42 pm
காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை
<p><strong>காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை</strong></p><p>ராணிப்பேட்டை, ஜூலை 18- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் வாலாஜா ஒன்றிய 6-வது பேரவை கூட்டம், ராணிப்பேட்டை வி.ஆர்.வி. பள்ளி வளாகத்தில் ஒன்றியத் தலைவர் வனிதா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 5 முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. முக்கியமாக, ஊழியர்களுக்குக் கால முறை ஊதியம் மற்றும் குடும்ப நல ஓய்வூ தியத்தை விரைந்து வழங்க வேண்டும்; அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவி யாளர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப பதவி உயர்வு அளிக்க வேண்டும்; சத்துணவு மையங்களில் காலி யாக உள்ள பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்நிகழ்வில் ம.எழில் இளம்வழுதி, வே.பர்சிலா வானசாஸ்திரி, ஜெ.மகேஸ்வரி, இரா.பூபதி, உமாபதி, ச.சரவணன், பி.ரகுபதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும், செல்வம், அருணகிரி, பாலசுந்தரம், கீதா, ஜீவா, பிரேமா உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். ஒன்றியச் செய லாளர் ஜீவா, பொருளாளர் ரேகா, மைதிலி, கலைச்செல்வி, கலைவாணி, விஜய லட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகளும், ஏராள மான சத்துணவு ஊழியர்களும் திரளாகக் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram