தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

6,500 தொகுப்பூதிய செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை! நவ.12-இல் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

31 Oct 2026, 11:27 pm
6,500 தொகுப்பூதிய செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை! நவ.12-இல் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

6,500 தொகுப்பூதிய செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை! நவ.12-இல் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

மதுரை, அக். 31 -தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் மதுரை

மாவட்ட அரசு ஊழியர் சங்கக் கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாநிலத் தலைவர் கு. சசிகலா தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் இரா. தமிழ், மாவட்டப் பொருளாளர் ஆ. பரமசிவன், தமிழ்நாடு நகராட்சி மற்றும் மாநகராட்சி சுகாதார செவிலியர் சங்கமாநிலத் தலைவர் மு. பஞ்சவர்ணம், தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்புநர் சங்க மாவட்டப் பொருளாளர் ஜெ. சிவகுரும்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் நே. சுபின் கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்களை முன்மொழிந்தார்.இக்கூட்டத்தில், அரசு ஊழியர்களின் கருத்துரிமையைப் பறிக்கும் சுற்றறிக்கைக்குக் கண்டனம் தெரிவித்தும், சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 6,500 செவிலியர்களையும், நிரந்தர செவிலியர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்ற முழுமையான காலமுறை ஊதியத்துடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; தற்காலிக ஒப்பந்த முறையில் பணியாற்றும் அனைத்து செவிலியர்களை

யும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.) மூலம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; புதிதாக உருவாக்கப்படும் செவிலியர் பணியிடங்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்; அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு செவிலியர் கல்லூரிகளில் செவிலியர்கள், செவிலியப் போதகர்கள் ஆகியோரை நிரந்தர அடிப்படையில் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 2 முதல் 6-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் செவிலியர்களைச் சந்தித்து பிரச்சார இயக்கம் நடத்துவது, சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்துவது, கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 12ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.மாநிலப் பொருளாளர் ச. ஹேமச்சந்திரன் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.