6,600 தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் கோரிக்கை
9 Mar 2026, 4:24 pm<p><strong>6,600 தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் கோரிக்கை</strong></p>
<p>சென்னை, மார்ச் 9- தமிழகத்தில் உள்ள 6600 தொகுப்பூதிய செவி லியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செய லாளர் நெ.சபீன் திங்க ளன்று (மார்ச் 9) செய்தி யாளர்களிடம் கூறியதாவது: பணி நிரந்தரம், மகப் பேறு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்தாண்டு டிசம்பர் 18முதல் 24 ஆம் தேதி வரை தொடர் போராட்டத்தில் ஈடு பட்டோம். அதனைத் தொட ர்ந்து அமைச்சர் மா.சுப்பிர மணியன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சில கோரிக்கை களை ஏற்றுக்கொண்டார். அதன்படி, புதிய பணி யிடங்கள் உருவாக்கப்பட்டு ஆயிரம் தொகுப்பூதிய செவிலியர்கள் நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆறு மாதம் மகப்பேறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆயி ரம் செவிலியர்களுக்கு 14 ஆயிரத்திலிருந்து 18 ஆயி ரம் ரூபாயாக ஊதிய உயர்வு கிடைக்கும் நிலை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 260 பேர் கண்காணிப்பா ளர் நிலை-2, 44 பேர் நிலை-1என்ற முறையில் பதிவு உயர்வு பெற்றுள்ள னர். கொரோனா காலத் தில் பணிந்து நீக்கம் செய்யப்பட்ட செவிலி யர்களில் 660 பேர் மீண்டும் பணியை அமர்த்தப் பட்டுள்ளனர். செவிலியர்களின் போராட்ட வெற்றியை தொடர்ந்து பல்வேறு மருத்துவதுறை அமைப்பு கள் தொடர் போராட்டத்தை தொடங்கினர். இதன் காரணமாக 3 ஆயிரம் பேர் பணி நிரந்தரம் பெற்ற தோடு, 41 ஆயிரம் பேருக்கு ஊதிய உயர்வுக் கிடைத்துள்ளது. அரசு மருத்துவமனை யில் நிரந்தர ஊழி யர்களே இருக்கக் கூடாது என்ற ஒன்றிய அரசின் நிபந்த னையை மீறி தமிழ்நாடு அரசு இவற்றையெல்லாம் செய்துள்ளதை வரவேற்கி றோம். இந்நிலையில், எஞ்சியுள்ள 6600 தொகுப்பு செவிலியர்களை நிரந்தரம் செய்வது, மகப்பேறு விடுப்பு காலத்தை ஓராண்டாக நீட்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவர் அவர் கூறினார். இந்நிகழ்வின் போது சங்கத்தின் மாநிலத் தலைவர் சசிகலா, பொரு ளாளர் ஹேமச்சந்திரன், துணைத் தலைவர்கள் டெல்குயின், அஸ்வினி கிரேஸ் ஆகியோர் உடனி ருந்தனர்.</p>
