தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

30 May 2026, 9:39 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

இரண்டு வாரத்தில் வெள்ளை அறிக்கை!

நிதியமைச்சர் சென்னை, மே 30 - தமிழக வெற்றிக் கழக அரசு பதவி ஏற்று இரண்டு வாரங்களைக் கடந்த நிலையில், புதி தாக அமைச்சர் பதவியை ஏற்றிருக்கும் மரிய வில்சன் செய்தியாளர் களைச் சந்தித்தார். அப்போது, இரண்டு வாரத் திற்குள் தமிழ்நாடு அர சின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்தார். மக்க ளுக்குத் தெரிய வேண்டிய பல்வேறு முக்கியமான விஷயங் கள் அந்த வெள்ளை அறிக்கையில் இடம்பெ றும் என்றும் அவர் தெரி வித்தார்.

முதலமைச்சர் விஜய் செய்தியாளர்களைச் சந்திக்காதது ஏன்?: அமைச்சர் விளக்கம்

சென்னை: முதலமைச்சர் ஏன் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை என்ற கேள்விக்கு, வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் “முதலமைச்சருக்குப் பல்வேறு அரசுப் பணிகள் இருக்கின்றன; அவரைப் பற்றி என்னிடம் கேட்கக் கூடாது” என்று பதிலளித்தார். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நடத்திய ஆய்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச் சர், ஆண்டுதோறும் சுமார் 13.78 லட்சம் பேர் வருகை தரும் இந்தப் பூங்கா நஷ்டமின்றி இயங்கி வருவதாக தெரி வித்தார். ஊழியர்கள் போராட்டத்தால் பூங்காவின் அன்றாட பணிகள் பாதிக்கப்படவில்லை என்றும், புதிய அரசு பொறுப் பேற்று ஒரு மாதமே ஆன நிலையில் கோரிக்கைகள் படிப் படியாக நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார். ஈரோடு அருகே யானை மிதித்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த அமைச் சர், காப்புக்காட்டுப் பகுதிகளில் பொதுமக்கள் நுழைவதைத் தடுக்கத் தவறிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். மேலும் திமுக ஆட்சியில் விட்டுச் செல்லப்பட்ட ரூ.10 லட்சம் கோடி கடன் சுமையை முத லமைச்சர் திறம்படக் கையாண்டு வருவதாகவும் அவர் தெரி வித்தார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 5 ஆண்டு முதுகலை சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான ஐந்தாண்டு ஒருங்கி ணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு மற்றும் முதுகலை தமிழ் பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற வுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது நேரிலும் பெற்றுக் கொள்ளலாம். தேர்வின் அடிப்படையில் 15 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இருபாலருக்கும் தனித்தனி கட்டண மில்லா தங்கும் விடுதி மற்றும் உணவு வசதிகளும் கிடைக்கும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, கடைசி யாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழ் நக லுடன் இணைத்து இயக்குநர் (கூ.பொ.), உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 என்ற முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஒருங்கிணைந்த முதுகலை படிப்புக்கு ஜூன் 15 ஆம் தேதிக்கும், முதுகலை தமிழ் படிப்புக்கு ஜூன் 30 ஆம் தேதிக்கு உள்ளாகவும் விண் ணப்பிக்க வேண்டும்.

நீட் தேர்வு கட்டணம் திரும்பப் பெற ஜூன் 22 வரை அவகாசம் நீட்டிப்பு

சென்னை: நீட் நுழைவுத் தேர்வுக் கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஜூன் 22 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக் கான நீட் தேர்வு மே 3 ஆம் தேதி நடைபெற்றது. எனினும் வினாத்தாள் கசிவு குறித்த புகார்களை அடுத்து மே12 ஆம் தேதி தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21 ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் செலுத்திய கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது. கட்டணம் திரும்பப் பெறுதலுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாளான மே 27 ஆம் தேதிக்குள் சுமார் 13 லட்சம் மாணவர்கள் விண் ணப்பித்துள்ளனர். தற்போது அந்த கடைசி நாள் ஜூன் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளையில் சிபிஎஸ்இ தனது அறிக்கையில், விடைத்தாள் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டுக்கான இணைய தளம் ஜூன் 1ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று அறிவித்துள்ளது.

பிரேமலதா வலியுறுத்தல்

சென்னை: சென்னையில் சிறுவனுக்கு வன்கொடுமை, மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை என தொடர்ச்சியாக நிகழும் குற்றச் சம்பவங்கள் மிகுந்த வேதனையையும் பொது மக்களிடையே பாதுகாப்பின்மை உணர்வையும் ஏற்படுத்தி யுள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய காந்த் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்தி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.