தீக்கதிர் முக்கிய செய்திகள்
14 May 2026, 9:44 pm

கமிஷன், ரெக்கமண்டேஷன் இருக்கக்கூடாது என விஜய் உத்தரவு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

சென்னை, மே 14 - எந்த விதமான டெண்டர்களிலும் கமிஷன் மற்றும் ரெக்கமண்டேஷன் இருக்கக்கூடாது என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த ஆட்சியில் 40 முதல் 50 சதவிகிதம் கமிஷன் வழங்கப்பட்டது என்றும், தற்போது த.வெ.க. அரசில் கமிஷன் பூஜ்யம் என்றும் அவர் தெரிவித்தார். த.வெ.க. தொண்டர்கள் யாரும் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்யவோ, டெண்டர் எடுக்கவோ கூடாது என்றும், மீறினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். டாஸ்மாக் கடைகளுக்கான நேரக்கட்டுப்பாடு குறித்து முதல்வர் விரைவில் முடிவெடுப்பார் என்றும், தொகுதி மக்கள் பிரச்சனைகளை ஆய்வு செய்யவும், காவல் நிலையங்களில் 24 மணி நேரமும் வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பயன்பாட்டில் உள்ள வங்கி கணக்கில் ஊதியத்தை செலுத்த வேண்டும் செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் கோரிக்கை

சென்னை, மே 14 - ஊழியர்களின் பயன்பாட்டில் உள்ள வங்கி கணக்கில் ஊதியத்தை செலுத்த வேண்டுமென்று தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் கோரியுள்ளது. இது தொடர்பாக அமைப்பின் பொதுச் செயலாளர் நே.சுபீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய சுகாதார குழும (என்.எச்.எம்.) திட்டத்தில் ஆரம்ப மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பயணியாற்றுகின்றனர். இவர்களுக்கு பொது நிதி மேலாண்மை அமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கான ஒற்றை முனைய முகமை (எஸ்என்ஏ-எஸ்பிஏஆர்எஸ்எச்) எனும் புதிய முறையில் மே மாதம் ஊதியம் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதில் சில ஊழியர்களின் வங்கி கணக்கு பயன்பாட்டில் இல்லாததால் ஊதியத்தை எடுக்க முடியவில்லை. ஏற்கெனவே, 15 நாள் காலதாமதத்துடன் ஊதியம் வழங்கப்பட்ட நிலையில், இந்தச் சூழல் ஊழியர்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குளறுபடிகளை சரி செய்து பயன்பாட்டில் உள்ள வங்கி கணக்கில் ஊதியத்தை வரவு வைக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

சென்னை, மே 14 - தமிழ்நாட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி தற்போதைய 58 சதவிகிதத்திலிருந்து 60 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இந்த உயர்வு 2026 ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வரும். கடந்த ஆண்டு நவம்ப ரில் 55 சதவிகிதத்திலிருந்து 58 சதவிகிதமாக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 2 சதவிகிதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை சேலம் மாநகரில் அமைப்பு

சேலம், மே 14 - முதலமைச்சர் விஜய்யின் உத்தரவைத் தொடர்ந்து சேலம் மாநகரில் சிங்கப்பெண் அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர், சிறப்பு காவல் ஆய்வாளர், தலைமை காவலர், ஓட்டுநர் என நான்கு பேரை கொண்ட இந்தப் படையில் ஓட்டுநரைத் தவிர மூவரும் பெண் காவலர்களே. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் புகார்களை விசாரிக்கும் பொறுப்பு இந்தப் படைக்கு வழங்கப்பட்டுள்ளது. சேலம் ஆணையர் அனில் குமார் கிரி இந்தப் படையின் பணியை தொடங்கி வைத்தார்.

அரசுக்கு எதிராக விமர்சனம் செய்ய உரிமையுண்டு : நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மே 14- தமிழக அரசுக்கு எதிரான விமர்சனங்கள் மற்றும் அரசியல் நையாண்டி பதிவுகளை வெளியிட்டதற்காக, யூடியூபர் மாரிதாஸ் உள்ளிட்டோரின் 18 ‘எக்ஸ்’ சமூகவலைதள கணக்குகளை முடக்கு மாறு சைபர் கிரைம் பிரிவு மே 8-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வன்முறையைத் தூண்டாத பதிவுகளும் முடக்கப்பட்டுள்ளன என்றும் இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் வாதிடப்பட்டது. இந்நிலையில், சைபர் கிரைம் பிரிவின் அந்த நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து, அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கையும் ஜூன் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

சபாநாயகர் இடத்தில் அப்பாவு பெயர் எப்படி? தமிழக அரசு விளக்கம்

சென்னை, மே 14- திருச்சி கிழக்கு சட்ட மன்றத் தொகுதி காலி யானதாக அறிவிக்கப் பட்டு, இது தொடர்பான அரசிதழ் அறிவிப்பு வியாழனன்று வெளி யானது. ஆனால் அந்த அறி விப்பில் தற்போதைய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பெயருக்குப் பதிலாக முன்னாள் சபா நாயகர் அப்பாவு பெயர் இடம்பெற்றிருந்தது. இது கவனக்குறைவா, அலட்சியமா என்று பலர் கேள்வி எழுப்பி னர். இதற்கு விளக்க மளித்துள்ள அரசு, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பதவி ஏற்பதற்கு முன்பே உத்தரவு பிறப்பிக்க ப்பட்டதால் முன்னாள் சபாநாயகர் அப்பாவு வின் பெயர் அதில் இடம் பெற்றதாக தெரிவித்துள்ளது.

‘சோஃபா’ சர்ச்சைக்கு திருமாவளவன் பதில்

சென்னை, மே 14 - விசிக அலுவல கத்திற்கு சோஃபா வேண்டி ஏற்கெனவே ஆர்டர் செய்திருந் தோம், அது பத்திரிகை யாளர்கள் இருந்த நேரத்தில் டெலிவரி செய்யப்பட்டது என்று விசிக தலைவர் திருமா வளவன் விளக்கமளித்தார். மறைந்த விசிக பொருளாளர் முகமது யூசப் நினைவு நாளை யொட்டி சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலு வலகத்தில் செய்தி யாளர்களை சந்தித்த அவர், மகளிர் உரிமைத் தொகை தொடரும் என முதலமைச்சர் உறுதி யளித்திருப்பதால் விரை விலேயே அது நடை முறைப்படுத்தப்படும் என நம்பிக்கை தெரி வித்தார். தன்னை முதல மைச்சராக ஆக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக நண்பர்கள் தெரிவித்தனர் என்றும், ஆனால் அது தொடர் பாக தனக்கு நேரடி யாக விவரம் தெரியாது என்றும் அவர் தெரி வித்தார். திமுக கூட்ட ணியில் இருப்பதால் திமுகவினர் அவ்வாறு பேசியிருப்பார்கள், அது அவர்களின் உத்தி யாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார். த.வெ.க.வுக்கு ஆதரவு தருவதில் எந்தக் காலதாமதமும் செய்ய வில்லை என்றும், கட்சி யில் கலந்தாய்வு செய்த பிறகே முடிவெடுத் தோம் என்றும் அவர் கூறினார்.