தீக்கதிர் முக்கிய செய்திகள்
1 hour before

மாணவர் விடுதிக்கு அமைச்சர் அடிக்கல்

சென்னை, ஜூலை 2 - எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சரும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான சி.டி.ஆர். நிர்மல்குமார், பல்கலைக்கழகத்தின் பெருங்குடி வளாகத்தில் புதிதாக அமையவுள்ள மாணவர் விடுதிக் கட்டடத்திற்கு ஜூலை 2 அன்று அடிக்கல் நாட்டினார். 240 மாணவர்கள் தங்கும் வசதியுடன் ரூ. 24.71 கோடி மதிப்பீட்டில் இந்த விடுதிக் கட்டடம் கட்டப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் குழுத் தலைவர் நீதியரசர் (ஓய்வு) வி. பாரதிதாசன், ஒருங்கிணைப்பாளர் குழு உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் எம். பிரகாஷ், பதிவாளர் பேராசிரியர் முனைவர் கவுரி ரமேஷ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இடைத்தேர்தல் நடத்த அதிமுக எதிர்ப்பு!

சென்னை, ஜூலை 2 - அதிமுக எம்எல்ஏக்கள் பதவி விலகிச் சென்று தவெகவில் இணைந்த விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்.பி. இன்பதுரை இந்தப் புகார் மனுவைத் தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளார். எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்றும், சட்டமன்ற உறுப்பினர்களை இழுத்துத் தவெக குதிரை பேரம் நடத்தப்பட்டு உள்ளதாகவும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த எம்எல்ஏ-க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. மேலும், குதிரை பேரக் குற்றச்சாட்டு தொடர்பாகத் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பொன்முடி மனு தள்ளுபடி

சென்னை, ஜூலை 2- 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் இளைஞர் அணியின் தலைமையகமான அன்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பொன்முடி, சைவம், வைணவம் மற்றும் பெண்கள் தொடர்பாகச் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தாக்கல் செய்தார். ஆனால், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், பொன்முடியின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ரூ.

30 லட்சம் லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர்கள் நியமனம்? தவெக நிர்வாகி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை, ஜூலை 2 - அமைச்சர் என். ஆனந்த் பரிந்துரையின் அடிப்படையிலேயே அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவதாகவும், ரூ. 5 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை லஞ்சம் பெற்றே இந்த நியமனங்கள் நடைபெறுவதாகவும் தவெக விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் எம். ஞானசௌந்தரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தவெக மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கூட்டுசேர்ந்தும், தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான என். ஆனந்த் பரிந்துரை அடிப்படையிலும், இந்த நியமனங்கள் நடந்துள்ளன. தங்கள் கட்சியின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய், தனது ஆட்சியில் லஞ்சம், ஊழல், விதிமீறல் ஆகியவற்றை அனுமதிக்க மாட்டேன் என்று கூறிவரும் நிலையில், சட்டத்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர், பொதுச் செயலாளர் ஆனந்த் ஆகியோர் அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு முதல்வர் விஜய்க்கு உள்ளது. எனவே, அரசு வழக்கறிஞர் நியமனத்தில் தனக்கு வாய்ப்பளித்து நியமனங்களை மேற்கொள்ள உத்தரவிடவும், அதுவரை அறிவிப்பா ணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

3 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு

சென்னை : வங்கக் கடலில் புதிதாக உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் ஜூலை 3, 4 தேதிகளில் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கும், மற்ற தமிழக பகுதிகளில் மிதமான, லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜூலை 6 வரை வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளது.

விலையில்லா வேட்டி, சேலைக்கு ரூ. 300கோடி

சென்னை : 2027 பொங்கல் பண்டிகைக்கான இலவசவேட்டி - சேலை உற்பத்திக்கு நிர்வாக அனுமதி அளித்து, முன்பணமாக ரூ. 300 கோடி ஒதுக்கீடுசெய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ரூ. 4 கோடி பறிமுதல் வழக்கு: நயினார் ஆஜர்

சென்னை : 2024 மக்களவைத் தேர்தலின்போது நெல்லை ரயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜரானார். நிறுவன ஊழியர்கள் ஆஜராகாததால் விசாரணை ஜூலை 16-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

‘உறுப்பினராக மட்டுமே தொடர்கிறேன்’: வேலுமணி!

சென்னை : அதிமுகவில் இருந்து விலகுகிறீர்களா என்ற கேள்விக்கு, உறுப்பினராக மட்டும் தொடர்வதாக எஸ்.பி. வேலுமணி பதிலளித்துள் ளார். அதிமுக மகளிரணி நடத்திய கூட்டத்தில் பங்கேற்க தன்னை பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமி அழைக்கவில்லை எனக் குறிப்பிட்ட வேலுமணி, அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே எடப்பாடிக்குக் கடிதம் எழுதியதாகத் தெரிவித்தார்.