தீக்கதிர் விரைவு செய்திகள்
28 Oct 2026, 9:03 pm

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை

சென்னை, அக். 28 -தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 9 அன்று தமிழகம் முழுவதும் அரசுவிடுமுறை அளித்து அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. அரசு அலுவல கங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு இது பொருந்தும். இதை ஈடுசெய்யும் வகையில், நவம்பர் 28 (சனிக்கிழமை) பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்எல்ஏ நிதி: விதிகளில் திருத்தம்

சென்னை, அக். 28 -அங்கன்வாடி மையங் களுக்குத் தளவாடங்கள் வாங்க, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தலாம் என்று விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசுஅரசாணை வெளியிட்டுள்ளது.

கூட்டுறவு வங்கி வீட்டுக் கடன் வரம்பு உயர்வு

சென்னை, அக். 28 -நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களில் வீட்டுவசதிக் கடன்களுக்கான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் தெரிவித்துள்ளார்.

ரூ. 100 கோடிக்குக் குறை வான வைப்புத்தொகை கொண்ட நகரக் கூட்டுறவு வங்கிகளில் தனிநபர் ஒருவர் அதிகபட்சமாக ரூ. 60 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறலாம். ரூ. 100 கோடிக்கும் அதிகமான வைப்புத்தொகை கொண்டவங்கிகளில் இந்த உச்சவரம்பு ரூ. 1.40 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்களைப் பொறுத்த வரை, ரூ. 100 கோடிக்குக்குறைவான வைப்புத் தொகை கொண்ட சங்கங் களில் ரூ. 60 லட்சம் வரையிலும், அதற்கு மேல் வைப்புத்தொகை கொண்ட சங்கங்களில் ரூ. 1 கோடி வரையிலும் வீட்டுக் கடன் பெறலாம்.

அன்பில் மகேஷ் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

சென்னை, அக். 28 -தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்,ஜாமீன் கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வியாழக்கிழமை (அக். 29) விசாரணைக்கு வருகிறது.

வீரமணி மகளுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

சென்னை, அக். 28 -போக்சோ வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெம் வீரமணி சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்கு உதவும் வகையில் நடைபெற்றதாகச் சந்தேகிக்கப்படும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து,அவரது மகள் அர்ச்சனாவுக்குத் தெரிந்திருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர். அந்த வகையில், அர்ச்சனா வீரமணி, வெளிநாடு தப்பிச்செல்வதைத் தடுக்கும் வகையில் அவருக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ்பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

சென்னை, அக். 28 -அர்னாப் புயல் கரையை கடந்துள்ள நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே பகுதிகளில் உருவாக்கக் கூடும் என்றும், இந்த புயல் சின்னம் வட தமிழகத்தை நோக்கிநகர்ந்தால், சென்னைக்கு கனமழை மற்றும் புயல் ஆபத்தும் ஏற்படலாம் என்று கூறப் பட்டுள்ளது.