தீக்கதிர் முக்கிய செய்திகள்
23 Jun 2026, 11:00 pm

கேள்விகளுக்கு பதிலில்லை! ஜவாஹிருல்லா எம்எல்ஏ விமர்சனம்

சென்னை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் வழங்கிய பதிலுரை முழுவதுமே பொத்தாம் பொதுவாக இருந்ததாக, மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா விமர்சித்து உள்ளார். எதிர்க்கட்சிகள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு பதிலு ரையில் திருப்திகரமான விளக்கங்கள் எதுவும் இல்லை என்றும், மேட்டூர் அணை திறக்கப்படாததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் அச்சத்தைப் போக்க எந்தத் தீர்வும் கூறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்திலும் விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என்று ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

மாணவர்களின் கனவுகளை நனவாக்க துணை நிற்போம்! சி.டி.ஆர். நிர்மல் குமார் பேச்சு

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் நடத்தும் 2026-27 ஆம் கல்வியாண்டுக்கான ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான கட்-ஆப் தரவரிசையில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு சேர்க்கைக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் நேரடியாக வழங்கினார். இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், தரமான சட்டக் கல்வி அனைவருக்கும் எளிதில் சென்றடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும், மாணவர்களின் கனவு களை நனவாக்க தொடர்ந்து அரசு துணை நிற்கும் என்றும் உறுதியளித்தார். தமிழ்நாட்டிலுள்ள 26 சட்டக் கல்லூரிகளில் (15 அரசு, 11 தனியார்) ஐந்தாண்டு பி.ஏ.எல்.எல்.பி., பி.பி.ஏ.எல்எல்.பி., பி.காம்.எல்எல்.பி. மற்றும் பி.சி.ஏ.எல்.எல்.பி. ஆகிய சிறப்பு சட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை நடத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

கத்தார் விபத்தில் 3 பேர் பலி; தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்

சென்னை: கத்தார் நாட்டில் ராஸ் லஃபான் தொழிற்பேட் டையில் கடந்த ஜூன் 21 அன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் சிதம்பராபுரம் யாக் கோபுரத்தைச் சேர்ந்த பபித் (26), பணகுடி சிவகாமிபுரத்தைச் சேர்ந்த சஜித்குமார் (25) மற்றும் அழகியநம்பியாபுரத்தைச் சேர்ந்த சுவின் (24) ஆகியோர் ஆகிய மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், 3 இளைஞர்களின் உயிரிழப்புக்கு ஆழ்ந்த வேதனையும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இரங்கலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், இளை ஞர்களின் உடல்களை விரைவில் இந்தியா கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதாகவும் கூறியுள்ளார். மேலும், உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கும் தலா பத்து லட்சம் ரூபாய் வீதம் முதல்வரின் பொது நிவாரண நிதி யிலிருந்து வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பம்

சென்னை: சாதிப் பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தை கடைப்பிடிக்கும் ஊராட்சிகளை கவுரவிக்கும் நோக்கில் தமிழ் நாடு அரசு ஆண்டுதோறும் 10 ஊராட்சிகளுக்கு தலா ஒரு கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய சமூக நல்லி ணக்க ஊராட்சி விருதுகளை வழங்கி வருகிறது. 2026-27ஆம் ஆண்டுக்கான இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஊராட்சிகள் தங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் நாடு ஆதிதிராவிடர் நல இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவை ஒத்திவைப்பு!

சென்னை: 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவை யின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 18 அன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானம் மீது எதிர்க்கட்சித் தலைவர்கள் உரையாற்றினர். நிறைவு நாளான ஜூன் 23 ஆண்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்கி னார். அதைத் தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்ப தாக அறிவித்தார். 2026-27ஆம் நிதியாண்டிற் கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக ஜூலை மாதம் சட்டப்பேரவை மீண் டும் கூட உள்ளது.

குரூப்-1 தேர்வு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-1 நிலையிலான 26 காலிப் பணியிடங்களுக் கான தேர்வை அறிவித் துள்ளது. இதில் 12 துணை ஆட்சியர், 8 மாவட்டப் பதி வாளர்கள், 3 கூட்டுறவுத் துறை துணை பதிவாளர் கள், 2 வணிக வரி உதவி ஆணையர்கள் மற்றும் 1 தொழிலாளர் துறை உதவி ஆணையர் பணியிடங் கள் அடங்கும். விண்ணப்ப தாரர்கள் ஜூன் 30 முதல் ஜூலை 29 வரை விண்ணப் பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 6 அன்று நடைபெறும். அங்கீகரிக்கப் பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்று தமிழில் போதுமான அறிவு கொண்டவர்கள் விண்ணப் பிக்கத் தகுதியுடையவர்கள். மேலும் விவரங்களுக்கு டிஎன்பிஎஸ்சியின் அதி காரப்பூர்வ இணையதளத் தைக் காணலாம்.

இடைக்கால அறிக்கை தாக்கல்!

சென்னை: திருவள் ளூர் மாவட்டம், பெரிய பாளையம் அருகே உள்ள ‘செயிண்ட் பீட்டர்ஸ் பால் சீஃபுட்ஸ்’ என்ற தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு வெளி மாநிலத் தொழிலாளர்கள் உள்பட 9 பேர் உயிரி ழந்தனர். 80-க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் காரண மாக சென்னை மற்றும் திருவள்ளூர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்நிலையில், தொழில் பாதுகாப்பு, சுகாதார இயக்குநரகம், மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் மற்றும் பொது சுகாதாரத்துறை ஆகியவற்றை உள்ளடக்கிய 3 பேர் கொண்ட விசார ணைக் குழு தனது இடைக் கால அறிக்கையை முதல்வ ரிடம் செவ்வாயன்று தாக்கல் செய்தது.