தீக்கதிர் முக்கிய செய்திகள்
10 Oct 2026, 12:27 am

இமானுவேல் சேகரன் பிறந்த நாள் : முதலமைச்சர் புகழாரம்

சென்னை: தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்த நாளையொட்டி, முதலமைச்சர் விஜய் தமது எக்ஸ் தளப் பதிவில், “சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காகவும் சமூக நீதிக்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் இமானுவேல் சேகரனார். சமத்துவத்துக்கும் சுயமரியாதைக்கும் குரல் கொடுத்ததுடன், விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காகவும் பிரதிநிதித்துவத்துக்காகவும் போராடிய அவரது தியாக வரலாறு என்றும் போற்றத்தக்கது. அவர் காட்டிய வழியில் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தைப் படைத்து, சமத்துவமும் சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்க இந்நாளில் உறுதியேற்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இடைத்தேர்தல் முடிவு: தலைவர்கள் கருத்து

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். மக்கள் மனதில் தவெகவுக்கு முதலிடம் இருப்பதும், மனசாட்சி உள்ள மக்களாட்சி மீதான விருப்பம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதற்கிடையே, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத் தேர்தல் முடிந்த ஐந்தே மாதத்தில் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டதாகவும், இது “துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி” என்றும் விமர்சித்துள்ளார். தவெகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் பெற்ற வாக்குகள் ஆட்சிக்கு எதிரானவையே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், விசிக தலைவர் திருமாவளவன், “கூட்டணி அரசு” என்ற விஜய்யின் நிலைப்பாட்டை மக்கள் ஏற்றுள்ளதாகக் கூறியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், விஜய் தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கையை வாக்காளர்கள் வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கோவில் பணியாளர்களுக்குத் திருமணக் கடன் உயர்வு

சென்னை: திருக்கோவில் பணியாளர்களுக்கான திருமணக் கடன் தொகையை உயர்த்தித் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளின் திருமணத்துக்கு இதுவரை ஆண் பணியாளர்களுக்கு ரூ.6,000, பெண் பணியாளர்களுக்கு ரூ.10,000 திருமணக் கடனாக வழங்கப்பட்டு வந்தது. இனி முதுநிலைக் கோவில்களின் பணியாளர்களுக்கு ரூ.2 லட்சமும், முதுநிலை அல்லாத கோவில்களின் பணியாளர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும்.இந்த உயர்த்தப்பட்ட கடன், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்துத் திருக்கோவில் பணியாளர்களுக்கும் பொருந்தும். அரசு ஊழியர்களுக்கான விதிகளின்படி, கடன் தொகை 36 மாதத் தவணைகளில் பிடித்தம் செய்யப்படும்.ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புக்கான பணப்பலன், மகப்பேறு விடுப்பு, திருமணக் கடன் உயர்வு உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்பட்டுஉள்ளதாகவும், இதன் மூலம் பணியாளர்களின் நலன் உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் அரசாணை தெரிவிக்கிறது.

டி.எஸ்.பி. ஜாபர் சித்திக் கைது

சென்னை: மனைவி அளித்த புகாரின் பேரில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பரமக்குடி டி.எஸ்.பி. ஜாபர் சித்திக்கை சிபிசிஐடி போலீசார் வியாழனன்று இரவு கைது செய்தனர். அவர் வேலூர் மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.

ஜாபர் சித்திக்கின் மனைவி ஷோபனா, கடந்த ஆக.4 ஆம் தேதி வேலூர் போலீசில் புகார் அளித்தார். கணவர் தன்னைத் தாக்கியதாக அவர் குறிப்பிட்டிருந்தார். வழக்குப் பதிந்து விசாரித்த வேலூர் போலீசார், குற்றச்

சாட்டு உண்மை எனக் கண்டறிந்தனர். இதையடுத்து வேலூர் சிபிசிஐடி போலீசார் பரமக்குடிக்கு வந்து ஜாபர்சித்திக்கிடம் விசாரணை நடத்தி, அவரது அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டனர். இதற்கிடையே, தமிழக உள்துறை செயலாளர் அவரைப் பணியிடை நீக்கம் செய்தார். பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், தன்னைச் சித்ரவதை செய்ததாகவும் ஷோபனா டி.ஜி.பி.யிடம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்துறை செயலாளர் உட்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை, அக்.9 -தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உள்துறைச் செயலாளர் மணிவாசன் நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, தமிழ்நாடு சிறுதொழில் மேலாண் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த கார்த்திக் உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.மின்வாரிய நிர்வாக இயக்குநர் அருண் ராய், நிதித்துறை செலவினங்கள் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அப்பதவியில் இருந்த வெங்கடேஷ் வேளாண் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். நில நிர்வாக ஆணையராக இருந்த ராஜேஷ் லக்கானி, மின்வாரிய நிர்வாக இயக்குநராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மின் உற்பத்திக் கழகத் தலைவராகவும் செயல்படுவார்.

ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா, தாம்பரம் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். செய்யாறு சார் ஆட்சியர் அம்பிகா ஜெயின், ஆவடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநர் சிவகிருஷ்ணமூர்த்தி, தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.தேனி ஆட்சியர் வைத்தியநாதன், குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.என். நேரு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை, அக். 9 –முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தொடர்பான வழக்கில் அக்டோபர் 9 அன்று வழங்கப்பட இருந்த தீர்ப்பு, தலைமை நீதிவிடுப்பில் இருந்ததால் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறையில் அதிகாரிகள் நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்ட

தாகக் கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி நேரு மனுத் தாக்கல் செய்திருந்தார். தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு இவ்வழக்கை விசாரித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்ததுடன், தீர்ப்பு வரும் வரை நேருவுக்கு எதிரான வழக்கில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற இடைக்காலத் தடையையும் நீட்டித்தனர். இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தலைமை நீதிபதி விடுப்பு காரணமாக அது அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள்

ராஜினாமா வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்புசென்னை: அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களைச் சபாநாயகர் ஏற்றதை எதிர்த்து, அதிமுக கொறடாவும், தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவியும் தனித்தனியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. தீர்ப்புக்காகப் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், தலைமை நீதிபதி விடுப்பில் இருந்ததால் தீர்ப்பு அக்.12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கே.என். நேரு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை, அக். 9 –முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தொடர்பான வழக்கில் அக்டோபர் 9 அன்று வழங்கப்பட இருந்த தீர்ப்பு, தலைமை நீதிபதி விடுப்பில் இருந்ததால் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறையில் அதிகாரிகள் நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்ட

தாகக் கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி நேரு மனுத் தாக்கல் செய்திருந்தார். தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மா திகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு இவ்வழக்கை விசாரித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்ததுடன், தீர்ப்பு வரும் வரை நேருவுக்கு எதிரான வழக்கில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற இடைக்காலத் தடையையும் நீட்டித்தனர். இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தலைமை நீதிபதி விடுப்பு காரணமாக அது அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.