தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

7 Jul 2026, 10:03 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள்

சென்னை: சமூக நீதி முன்னோடி இரட்டைமலை சீனிவா சனின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். “ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகத் திகழ்ந்த திராவிடமணி இரட்டைமலை சீனிவாசனின் உயரிய லட்சியங்களைப் பின்பற்றி, சமத்துவமும் மனிதநேயமும் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம்” என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு: முதலமைச்சர் விஜய்க்கு நோட்டீஸ்

சென்னை: கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் பெற்ற வெற்றிக்கு எதி ராகத் தொடரப்பட்ட வழக்குகளில் பதிலளிக்குமாறு முதல மைச்சர் விஜய்க்குச் சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருத யராஜ் மற்றும் பெரம்பூர் தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில், விஜய் தனது வேட்புமனுவில் சொத்து மற்றும் வருமான வரி விவரங்களை முறையாகக் குறிப்பிடாமல் மறைத்துள்ளதாகக் குற்றம் சாட்டி யுள்ளனர். மனுக்களில் உள்ள தொழில்நுட்பக் குறைபாடு களை நிவர்த்தி செய்ய ஒரு வார அவகாசம் வழங்கிய நீதி மன்றம், அதன் பின் 3 வாரங்களுக்குள் முதலமைச்சர் விஜய் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தவெக எம்.எல்.ஏவிடம் ரூ. 50 கோடி பேரமா? அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு

சென்னை: திருவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன் தன் மீது சுமத்தியுள்ள ரூ. 50 கோடி குதிரை பேரக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்று திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரி வித்துள்ளார். சரவணன் அண்மையில் வெளியிட்ட ஆடியோ முழுமை யாக இல்லை எனக் குறிப்பிட்ட அவர், “உயிருக்குக் கேடு என்று யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்ல லாம். தன்னிடம் யாரும் பேரம் பேசவில்லை; சரவணன் கூறும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. நான் லாட்டரி வியாபாரமோ, கஞ்சா வியாபாரமோ செய்யவில்லை” என்று ஆத்தூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின் செய்தி யாளர்களிடம் விளக்கமளித்தார்.

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு இல்லை: அமைச்சர்

சென்னை: தமிழகத்தில் மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என்றும், அனைத்தும் தகுதி மற்றும் விதிகளின் படியே நடப்ப தாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வழக்கறிஞர்கள் நிய மனத்திற்காகத் தவெகவினர் லஞ்சம் பெற்றதாகப் பரவும் தகவல் தவறானது. இதுவரை 3 மாவட்டங்களுக்கு மட்டுமே 6 மாத காலத் தற்காலிக நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் யாராவது பணம் பெற்றிருப்பது தெரிந் தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; பணம் அளித்தவர்கள் தாராளமாகப் புகார் அளிக்கலாம். தேவையின்றி அதிகாரிகள் ஆய்வுகள் நடத்தக் கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.

தவெக தலைமையில் கூட்டணி இன்னும் உருவாகவில்லை: திருமாவளவன்

: அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே இன் னொரு கூட்டணியில் சேர்ந்துவிட்டதாக அர்த்தமல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திரு மாவளவன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தவெக தலைமையில் இதுவரை இன்னொரு கூட்டணி அதிகாரப்பூர்வமாக உருவாகவில்லை; முதலமைச்சர் விஜய் தலைமையில் நடந்த கூட்டத்திலும் கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், மு.க. ஸ்டாலினி டம் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டே தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்தோம். அவரோடான நட்பு தொடர்கிறது. அதே நேரம், விசிகவிலிருந்து அதிருப்தியாளரைத் திமுகவில் இணைத்தது தமக்கு அதிர்ச்சி அளிக்கிறது” என்று கூறினார்.

இன்று 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு

சென்னை: 2026 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை 8 முதல் 15 வரை 240 மையங்களில் நடை பெறுகிறது. இதில் 74,592 தேர்வர்கள் எழுதுகின்ற னர். சந்தேகங்களுக்கு 9498383075 / 94983 83076 எண்களிலும், வினாத்தாள் புகார்களை dgequestion paper queries@gmail.com முகவரியிலும் தெரிவிக்க லாம் எனப் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

ஹிட்டாச்சியுடன் ரூ. 1,000 கோடி முதலீட்டு ஒப்பந்தம்

சென்னை: செங்கல் பட்டில் உள்ள ஹிட்டாச்சி இந்தியா நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 1,000 கோடி முத லீட்டில் விரிவாக்கம் செய்யப் படவுள்ளது. முதலமைச் சர் முன்னிலையில் கை யெழுத்தான இந்த ஒப்பந் தம் மூலம் 1,000 தொழில் நுட்ப வல்லுநர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பு உரு வாகும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

5 போக்குவரத்து டெண்டர்கள் ரத்து

சென்னை: கடந்த திமுக ஆட்சியில் போக்கு வரத்துக் கழகத்திற்காகப் போடப்பட்ட 60 ஆயிரம் டயர்கள், மினி பேருந்து அடிச்சட்டம், பேருந்து கூடு கட்டுதல் மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் வாங்குவது உள்ளிட்ட 5 டெண்டர் களைத் தவெக அரசு ரத்து செய்துள்ளது. இவற்றுள் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி ரத்து செய்யப்பட்டுள்ள தாகவும், விரைவில் புதிய டெண்டர்கள் அறிவிக்கப் படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

காவல் ஆய்வாளர் கைது

சென்னை: குறைந்த விலைக்குத் தங்கக் காசு கள் தருவதாகக் கூறி, சக காவலர்கள் உட்பட நூற்றுக் கும் மேற்பட்டோரிடம் ரூ. 20 கோடிக்கும் மேல் மோ சடி செய்த வழக்கில், ராய புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வா ளர் ஷீலா மேரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பொருளாதார குற்றப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.