தீக்கதிர் முக்கிய செய்திகள்
16 Jun 2026, 10:41 pm

‘6% மின் கட்டண உயர்வு கொள்கை முடிவு தவறு’

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் வரை மின்கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என முந்தைய அரசு எடுத்த கொள்கை முடிவு முற்றிலும் தவறானது என்று மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் தொழில்துறையினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்களுக்குப் பாதிப்பில்லாத வகையில் இதற்குத் தீர்வு காண அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக அவர் கூறினார். மேலும், பல்வேறு துறைகளில் மூன்று ஆண்டுகள் முடிவதற்குள் நிர்வாகக் காரணங்களைக் கூறிச் செய்யப்பட்ட தேவையற்ற ஊழியர் இடமாற்றங்களை உடனடியாக நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இனி தனி வாரியம் அமைக்கப்பட்டு, காலிப் பணியிடங்கள் வெளிப்படையாகப் பட்டியலிடப்பட்டு, தகுதியின் அடிப் படையில் மட்டுமே இடமாற்றங்கள் வழங்கப்படும் என அமைச்சர் விளக்கமளித்தார்.

வாகை சந்திரசேகருக்குச் சங்கீத நாடக அகாடமி விருது

சென்னை: நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மேடை நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் முத்திரை பதித்த மூத்த கலைஞர் வாகை சந்திரசேகருக்கு, கலைத்துறை யின் மிக உயரிய தேசிய அங்கீகாரமான ‘சங்கீத நாடக அகாடமி விருது’ (அகாடமி புரஸ்கார்) அறிவிக்கப்பட்டு உள்ளது. 2024-25 ஆம் ஆண்டுகளுக்கான இவ்விருதை இந்தியக் கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது.

விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சம் ரொக்கம், தாமிரப் பட்டயம் வழங்கப்படும். குடியரசுத் தலைவரால் இவ்விருது வழங்கப்படவுள்ளது. 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், ஏற்கனவே தேசிய விருது மற்றும் கலைமாமணி விருதுகளைப் பெற்றுள்ளார். தற்போது தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவராகவும் உள்ளார்.

231 புதிய துணை மின் நிலையங்கள்

சென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற எரிசக்தித் துறை ஆய்வுக் கூட்டத்தில், மின் விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.15,032 கோடியில் 231 புதிய துணை மின் நிலையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகரப் பகுதியில் நிலத்தடி கேபிள் பழுதுகளால் ஏற்படும் மின்தடையைத் தடுக்க ரூ.2,275 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன. மின் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்ய 15,058 புதிய மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்கவும், 125 ரோந்து குழுக்களைச் சுற்றுப்பணியில் ஈடுபடுத்தவும் முதல்வர் உத்தரவிட்டார். ‘மின்னகம்’ (9498794987) புகார் எண்ணுடன் விரைவில் வாட்ஸ்அப் சேவையும் இணைக்கப்படவுள்ளது.

திருச்சி கிழக்கு வெற்றியை எதிர்த்து வழக்கு

சென்னை: கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதிப் பதவியை ராஜினாமா செய் தார். இந்நிலையில், அத்தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், விஜய்யின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். வேட்புமனுவில் வருமான வரி வழக்கை மறைத்தது, பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் மனுவில் கூறப்பட்டுஉள்ளன.

இதேபோல், கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து அதிமுக பிரபு வும், லால்குடியில் அதிமுக லீமா ரோஸ் வெற்றியை எதிர்த்து திமுக பாரிவள்ளலும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: 2026-27 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வரவேற்கிறது. 15 இளங்கலை பட்டப் படிப்புகள், 14 முதுகலை பட்டப்படிப்புகள், 48 சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகள் உள்ளன விண்ணப்பங்களை www.tnou.ac.in என்ற இணையதளம் வழியாக சமர்ப்பிக்க லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.100 கோடி

சென்னை: நடப்பாண் டில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தீபாவளி விற்பனை இலக்கு 100 கோடி ரூபாயாக நிர்ணயி க்கப்பட்டுள்ளதாகக் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அமைந்த கரையில் உள்ள ஒரு தனி யார் வணிக வளாகத்தில், கோ-ஆப்டெக்ஸ் நிறு வனத்தின் 146-ஆவது புதிய விற்பனை மை யத்தை அவர் திறந்து வைத்தார். முதல்முறை யாகத் தனியார் வணிக வளாகத்தில் இக்கிளை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு 52 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு விற்ப னையை அதிகரிக்கப் புதிய வடிவமைப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு, தொழில்நுட்ப வல்லு நர்களுடன் ஆலோச னைகள் மேற்கொள்ளப் படவுள்ளதாக அமைச்சர் கூறினார்.

காலிப் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு பகுதிநேர ஆசிரியர்கள் அதிர்ச்சி

சென்னை: தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் கடந்த 15 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் 3,843 பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்கள் தங்களை நிரந்தரப்படுத்த வேண் டும் என நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்ற னர். தவெக தேர்தல் அறிக் கையிலும் 5 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரி யர்கள் நிரந்தர மாக்கப்படு வார்கள் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பள்ளிக் கல்வி த்துறையில் உள்ள 1,328 காலி உடற்கல்வி ஆசிரியர் பணியிடங் களை ஆசிரியர் தேர்வா ணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப் புதிய அறிவிப்பு வெளியாகி யுள்ளது. இந்த அறிவிப்பு பகுதிநேர ஆசிரியர்களி டையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களை நிரந்தரமாக்கிய பின்னரே காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண் டும் என பகுதிநேர ஆசிரி யர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பா ளர் செந்தில்குமார் வலி யுறுத்தியுள்ளார்.

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

சென்னை: அரசுப் பள்ளிகளில் நடைமுறையில் உள்ள முதல்வரின் காலை உணவுத் திட்டம், தற்போது 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதி இத்திட்டத்தைத் தொடங்க சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தர விட்டார். தற்போது 1-5 ஆம் வகுப்பு வரை 17.55 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வரும் நிலையில், இந்த விரி வாக்கத் திட்டம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களில் அமல்படுத்தப்படுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். கூட்டத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி, தலைமைச் செயலர் சாய்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

‘குதிரை பேரத்திற்கு ஆதாரங்கள் எங்கே?’

தீர்ப்பை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம்

சென்னை: அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததில் குதிரை பேரம் நடந்துள்ளதாகக் கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கடந்த மே 13 நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் தவெகவில் இணைந்தது சட்டவிரோதம் எனக் குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, போதிய ஆதாரங்கள் இல்லாமல் வெறும் ஊகங்களின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று கூறி, தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.