தீக்கதிர் முக்கிய செய்திகள்
1 Nov 2026, 9:22 pm

தமிழ்ச் சங்கத் தலைவராக முதல்வர்: அமைச்சர் தகவல்

சென்னை: சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவைத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், வன்னி அரசு ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய அவர், ஜூலை 18-ஐ தமிழ்நாடு நாளாகக் கொண்டாடி வந்த நிலையில், நவ.1-ஐயும் அவ்வாறு முதல்வர் விஜய் அறிவித்துள்ளார் என்றார்.

வாரத்தில் ஒரு நாள் வேட்டி-சட்டை அரசு அலுவலர்கள் வாரம் ஒருநாள் வேட்டி, சட்டை அணிந்து வரும் ‘மரபாடை தினம்’ கொண்டு வரப்படும் என்றும், இது நெசவாளர்களுக்கும் பயனளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். தலைமைச் செயலகத்தில் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு, ஏற்கெனவே உள்ள சங்கங்கள் ஒருங்கிணைக்கப்படும் என்றும், அதன் தலைவராக முதல்வரே இருப்பார் என்றும், உலகத் தமிழ் மாநாடு மீண்டும் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

குரூப்-2 முதல்நிலைத் தேர்வு 4.89 லட்சம் பேர் போட்டி

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு, 38 மாவட்டங்களில் 1,647 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 846 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில், 1.84 லட்சம் ஆண்கள், 3.05 லட்சம் பெண்கள், 35 மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட 4,89,885 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் 173 மையங்களில் 51,720 பேர் தேர்வெழுதினர். தேர்வு மையத்தில்ஆய்வு செய்த தேர்வாணையத் தலைவர் பிரபாகர், முடிவுகள் இரண்டு மாதங்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

92,595 பேர் ஆப்சென்ட்

குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வில் பங்கேற்க 4,89,885 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில், 3,97,290 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 92,595 பேர் தேர்வுக்கு வரவில்லை.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது

இராமநாதபுரம்: இராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.நவம்பர் 1 அன்று அதிகாலை, கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் தங்களின் படகுடன் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ அமைப்புகளும் தமிழக அரசும் தொடர்ந்துவலியுறுத்தி வருகின்றன.

செஞ்சி சிறுமியின் தந்தையிடம் விசாரணை

சென்னை: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது 7 வயது மகள் கடந்த அக்.11 அன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். பின்பு, மறுநாள் அதிகாலை வீட்டில் இருந்து திடீரென சிறுமி மாயமானார்.

இதுகுறித்த வழக்கு அக்.21 அன்று சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், சிறுமியின் தந்தை வடிவேலுவை ஞாயிறன்று தற்காலிக விசாரணை மையத்திற்கு வரவழைத்து, அவரிடம் சிபிசிஐடி டிஎஸ்பி கீதா தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்றது. மேலும், கிராமத்தில் உள்ள பொது மக்களிடமும் மீண்டும் விவரங்களை கேட்டறிந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.தரைவழி தேடுதலில் பலன் இல்லாததால், சிபிசிஐடியு போலீசார் டிஜிட்டல் தேடலிலும் இறங்கியுள்ளனர்.

சென்னை-சேலத்திற்கு கூடுதல் விமானம்

சென்னை: உதான் திட்ட ஒப்பந்தம் முடிந்ததால், சேலத்திலிருந்து பெங்களூரு, கொச்சி, ஐதராபாத்துக்கு இயக்கப்பட்ட இண்டிகோ விமான சேவைகள் அக்.31 ஆம் தேதியுடன்நிறுத்தப்பட்டன. அதேநேரம், சென்னைக்கு தினமும் ஒன்றாக இருந்த சேவை நவ.1 முதல் இரண்டாகியுள்ளது. சென்னையிலிருந்து காலை 11.10, மாலை 3.50 மணிக்கும், சேலத்திலிருந்து மதியம் 12.30, மாலை 5.10 மணிக்கும் விமானங்கள் புறப்படும்.

தீபாவளி பண்டிகைஅலைமோதும் மக்கள் கூட்டம்:

ரயில், பேருந்துகள் நிரம்பினசென்னை: நவ.8 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், வார விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பிராட்வே உள்ளிட்ட பகுதிகளில் குவிந்த மக்களால் நெரிசல் ஏற்பட்டது; திருட்டைத் தடுக்கவும் போக்குவரத்தைச் சீரமைக்கவும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தீவுத்திடல் உள்ளிட்ட இடங்களில் பட்டாசுக் கடைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றனசொந்த ஊர் செல்வோருக்காக, வியாழன் முதல் ஞாயிறு வரை சென்னையிலிருந்து செல்லும் அனைத்து ரயில்களிலும் இடம் இல்லை; சிறப்பு ரயில்களிலும் காத்திருப்புப் பட்டியலே நீள்கிறது. வெள்ளிக்கிழமைக்கான பேருந்துகளும் நிரம்பியுள்ளதால், கூடுதல் ரயில்களையும் பேருந்துகளையும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

உதகை மலை ரயில் சேவை மேலும் 4 நாட்கள் ரத்து!

நீலகிரி: உதகை - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவைமேலும் 4 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. உதகை மலை பாதையில் மண் சரிவால் கடந்த 9 நாட்களாக ரயில் சேவை ரத்து செய்யப்ப ட்டதையடுத்து, சீரமைப்புப் பணிகள் முடிவடையவில்லை. இதனால் மேலும் 4 நாட்கள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி வழக்கு

சென்னை, நவ.1 -சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி செப்டம்பரில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கக் கோரி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுஉள்ளது.சங்கத்தின் செயலாளர் எஸ். அறிவழகன் தாக்கல் செய்துள்ள இந்த மனு, தலைமை நீதிபதி அமர்வில் திங்கட்கிழமை (நவ.2) விசாரணைக்கு வர உள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளிலும் தமிழை கட்டாயமாக்க வேண்டும்: அமைச்சர்

சென்னை, நவ.1 -தமிழ்நாடு நாள் விழாவில் பேசிய அமைச்சர்ஆதவ் அர்ஜுனா, சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளி

லும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை தமிழ்ப் பாடத்தைக் கட்டாயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மாநிலத்தின் பண்பாட்டையும் தாய்மொழியையும் இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்க இது அவசியம் என்றார்.

முட்டை கொள்முதல் விலை ரூ.6.20 ஆக நிர்ணயம்

நாமக்கல், நவ.1-நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் கோழி முட்டை கொள்முதல் விலை அக்.31 அன்று நிலவரப்படி 610 காசுகளாக (ரூ.6.10) இருந்து வந்தது.

இதற்கிடையே நவ.1 அன்று முட்டை கொள்முதல் விலை ரூ.6.20 ஆக (620 காசுகள்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் முட்டை கொள்முதல் விலை 50 காசுகள் உயர்ந்துள்ளது.