தீக்கதிர் முக்கிய செய்திகள்
18 Jul 2026, 9:43 pm

ஆகஸ்ட் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல்?

சென்னை: தவெக அரசின் முதல் முழுமை யான பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் சட்டப்பேர வையில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பட்ஜெட் தயாரிப்பிற்காக ஜூலை 2ஆம் தேதி முதல் துறை வாரியான ஆய்வுக் கூட்டங்களை முதலமைச்சர் தொடர்ந்து நடத்தி வருகிறார். ஜூலை 16ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தனித்தனியே தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேகதாது விவகாரத்தை விவாதிக்க கோரி நோட்டீஸ்

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற மக்களவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி திமுக நோட்டீஸ் அளித்துள்ளது. மேகதாது விவகாரம் தொடர்பாக திமுக நாடாளு மன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். கர்நாடகா நிறை வேற்ற முயலும் இந்தத் திட்டம் தமிழ்நாடு விவசாயி களின் நலன்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த முக்கியப் பிரச்சனையை அவையில் அவசர விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என டி.ஆர். பாலு வலியுறுத்தியுள்ளார். மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என திமுக எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை (ஜூலை 20) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க இருக்கும் நிலையில், திமுக சார்பில் இந்த ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு: தவெக வழக்கறிஞர் நீக்கம்

சென்னை, ஜூலை 18 - அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்த விழுப்புரம் வழக்கறிஞர் ஞான சௌந்தரி, தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து நீக்கப் பட்டுள்ளார். அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு லஞ்சம் கேட்ப தாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தி ருந்த ஞானசௌந்தரி, ஒரு அரசு வழக்கறிஞர் நியமனத் துக்கு 5 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முகமது ஷஃபிக், இந்த வழக்கில் இருந்து முதல்வர் விஜய், அமைச்சர் ஆனந்த், தவெக விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்.மோகன்ராஜ் ஆகியோரது பெயர்களை நீக்கி உத்தரவிட்டார். மேலும் சட்டத்துறை செயலாளர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை எதிர்மனுதாரராக சேர்க்க அனுமதி வழங்கினார். இந்நிலையில், தவெக விழுப்புரம் மாவட்டச் செய லாளர் மோகன்ராஜ் வெளியிட்ட அறிக்கையில், இணைய வழி முறையின் மூலம் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக இணைந்திருந்த சந்திரமோகன் மனைவி ஞானசௌந்தரி, அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவதாக தெரிவித்து உள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து களஞ்சியம் விலகல்

சென்னை, ஜூலை 18 - நாம் தமிழர் கட்சியில் இருந்து இயக்குநர் மு. களஞ் சியம், கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். சமீப காலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில பொறுப்பு முதல் ஒன்றியம் வரை பல்வேறு நிர்வாகி கள் தொடர்ந்து விலகி வருகின்றனர். கடந்த மாதம் 3 ஆயிரம் பேர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் 8 பேர் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து மாநில கொள்கை பரப்புச் செயலாளராகப் பணியாற்றி வந்த கோ. தமிழரசன் கடந்த ஜூன் 19 ஆம் தேதி வெளியேறி னார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகு வதாக அறிவித்துள்ள மு. களஞ்சியம், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எழுதிய கடிதத்தில், “கருத்து வேறுபாடுகளுடன் தொடர்ந்து பயணிப்பது ஆரோக்கியமானதாக இருக்காது. இயக்கத்தில் ஏற்பட்டு உள்ள மாற்றம், மாற்று அரசியல் தலைவர்கள் மீதான விமர்சனம் வருத்தம் தருகிறது. நாதக உறுப்பினர்களே சக கட்சியினர், ஆதரவாளர்கள் மீது வெறுப்பரசிய லைக் கையாள்வது வருத்தம் அளிக்கிறது. இழிவான விமர்சனங்கள் தாங்கள் முன்னெடுக்கும் தமிழ்த் தேசியப் பண்பாட்டிற்கு உகந்ததல்ல” என குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நாதக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டி யிட்டவர் மு. களஞ்சியம்.

‘திமுகவுக்கு ஆசை காட்டுகிறது பாஜக’

திருப்பத்தூர், ஜூலை 18- தொகுதி மறுவரையறையை ஏற்றுக் கொள்ளும் படி பாஜக, திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடங்கி யுள்ளதாகவும், ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் 2029-லேயே தேர்தலை நடத்தித் தருவதாக ஆசை காட்டுகிறது எனவும் காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். திமுக அந்தப் பாதையில் சென் றால் இந்த முறையை விட மோசமான தேர்தல் முடிவு கள் வரும் எனவும் தெரிவித்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நல உதவி பதிவு கட்டாயம்

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக சாதிச் சான்றிதழ், ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் ஆகிய விவரங்களை கல்வித்துறை இணைய தளத்தில் பதிவு செய்யு மாறு அனைத்து முதன்மை கல்வி அலுவ லர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.