தீக்கதிர் முக்கிய செய்திகள்
27 Jun 2026, 10:12 pm

அண்ணா நூலகத்தில் கட்டண உயர்வா?: தகவல் சரிபார்ப்பகம் மறுப்பு

சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூல கத்தின் கலையரங்கம் மற்றும் திறந்தவெளி கலையரங்கில் நூல் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக வெளி யான செய்தியை தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் முற்றி லும் தவறானது என்று நிராகரித்துள்ளது. இது தொடர்பாக அண்ணா நூற்றாண்டு நூலகம் அளித் துள்ள விளக்கத்தில், கலையரங்கம், நூல் வெளியீட்டுக் கூடம், மாநாட்டுக் கூடம் மற்றும் திறந்தவெளியரங்கம் ஆகியவை அரசாணை (நிலை) எண்.152, பள்ளிக் கல்வித்துறை (பொது.நூ), நாள் 04.07.2017 படி நிர்ணயிக்கப்பட்ட வாடகைக் கட்டணத்தின் அடிப்படையிலேயே இன்றைய தேதி வரை எந்த மாற்றமும் இன்றி வாடகைக்கு விடப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவல்களை பரப்பாமல் இருக்குமாறு தகவல் சரிபார்ப்பகம் வேண்டு கோள் விடுத்துள்ளது.

தில்லி பிரதிநிதி நியமனம் சர்ச்சை தவெக அரசிடம் கனிமொழி எம்.பி., கேள்வி'

சென்னை: ‘ஜனநாயகன்’ திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணனை தமிழ்நாட்டின் தில்லி சிறப்புப் பிரதி நிதியாக தவெக அரசு நியமித்திருப்பது சர்ச்சையை கிளப்பி யுள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கனி மொழி தமிழ்நாடு அரசிடம் இரண்டு கேள்விகளை எழுப்பி யுள்ளார். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக தில்லியில் குரல் கொடுக்க வேண்டிய அமைச்சர் நிலைக்கு நிகரான பொறுப்பில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை நியமித்திருக்கும் தவெக அரசில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியானவர் யாரும் இல்லையா என்பது முதல் கேள்வி. மேகதாது அணை விவ காரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்சனை களில், கர்நாடகாவைச் சேர்ந்த இந்நபர் தமிழ்நாட்டின் பிரதி நிதியாக செயல்படுவாரா அல்லது தன் சொந்த மாநிலத்தின் பிரதிநிதியாக செயல்படுவாரா என்பது இரண்டாவது கேள்வி என்று கனிமொழி கேட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரானார் மாணிக்கம் தாகூர்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலை வராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். முன்னதாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கு மாறு கு.செல்வப்பெருந்தகை காங்கிரஸ் தலைமையை நேரில் சந்தித்து வலியுறுத்தி இருந்தார். அவரது வேண்டு கோளை ஏற்று புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நிய மிக்கப்பட்டுள்ளார்.

தேசிய தடகளத்தில் தங்கம் கோவை காவல் வீராங்கனை ஆசிய போட்டிக்கு தகுதி கோவை:

கோவை மாநகர காவல் துறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றும் கெளதமி, ஒடிசா மாநிலம் புவ னேஷ்வரில் நடைபெற்ற 64 ஆவது தேசிய அளவிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் தமிழ்நாடு தடகள அணி சார்பில் பங்கேற்று அசத்தியுள்ளார். 800 மீட்டர் ஓட்டப்போட் டியில் 2 நிமிடம் 04.17 விநாடிகளில் இலக்கை எட்டி முத லிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் வரும் செப்டம்பர் மாதம் ஜப்பான் நகோயா நகரில் நடைபெற உள்ள 20 ஆவது ஆசியப் போட்டிகளில் இந்திய தடகள அணி சார்பில் பங்கேற்கும் தகுதியை கெளதமி பெற்றுள்ளார். கோவை மாநகர காவல்துறை சார்பில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியப் போட்டிக்கான பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வரும் கெளதமிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.'

இன்று ஆலோசனைக் கூட்டம்

சென்னை: ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாட்டையொட்டி, ஜூன் 28 (ஞாயிறு) அன்று சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் தலைமைச் செயலாளர் சாய்குமார் அனைத்து மாவட்ட ஆட்சி யர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் துவக்கம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஜூன் 28 ஆம் தேதி (ஞாயிறு) தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமை முதல மைச்சர் விஜய் ஞாயி றன்று காலை 8 மணிக்கு சென்னை பாலவாக்கத் தில் உள்ள அரசு ஆதிதிரா விடர் பள்ளியில் தொடங்கி வைக்கிறார். பூஜ்ஜியம் முதல் 5 வய திற்குட்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முகாம் நடைபெறும் நாளில் முக்கியப் பேருந்து நிலை யங்கள், ரயில் நிலையங் கள், சுங்கச்சாவடிகள் மற்றும் விமான நிலையங் களில் தற்காலிக மை யங்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கப் படுகிறது. முதல் நாளான ஜூன் 28 ஆம் தேதி அனைத்து முகாம்களிலும், அடுத்த ஜூன் 29, 30 ஆம் தேதி களில் தற்காலிக மையங் களிலும் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. நடமா டும் மருத்துவக் குழுக்கள் மூலம் தொலைதூர மற்றும் மலைவாழ் மக்க ளின் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.