தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

23 May 2026, 9:50 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளில் அமலாக்கத் துறை தீவிரம்

சென்னை, மே 23 - முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கில் விசாரணை நடத்த அனுமதி கோரி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு அம லாக்கத் துறை கடிதம் எழுதியுள்ளது. புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில் அமலாக்கத் துறை பல்வேறு பழைய வழக்குகளில் தீவிரம் காட்டி வரு கிறது. ஏற்கெனவே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் விசாரணை அனுமதி கோரி கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது அனிதா ராதா கிருஷ்ணன் மீதான வழக்கிலும் அதே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் 2001 முதல் 2006 வரை கால்நடை பராமரிப்பு மற்றும் வீட்டு வசதி துறைகளில் அமைச்சராக பதவி வகித்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்திற்கு அதிகமாக சுமார் 2 கோடியே 7 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த முதன்மை வழக்கின் அடிப்படையில் 2020 டிசம்பரில் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அம லாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசார ணையில் உள்ள நிலையில், மேலும் விசாரணை நடத்த அனுமதி கோரி மீண்டும் கடிதம் எழுதப்பட்டுள்ளது

அரசு துறைகளில் குறுகிய கால டெண்டர்கள் ரத்து

சென்னை, மே 23 - கடந்த மே 13 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை வெளியிடப்பட்ட குறுகிய கால டெண்டர்களை தமிழக வெற்றிக் கழக அரசு ரத்து செய்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித் துறையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடந்து வருவதாகவும், அதனால் டெண்டர்களை நிறுத்தி வைத்திருப்பதாகவும் அந்தத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். ஊரக வளர்ச்சித் துறை, போக்குவரத்துத் துறை, பொதுப் பணித்துறை, மின்சாரத் துறை, சென்னை மாநக ராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் போடப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் நிர்வாக காரணங்களுக் காக ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே குறுகிய கால டெண்டர்கள் மூலம் பணி களை மேற்கொள்ளக் கூடாது என்ற அறிவுறுத்தல் அதி காரிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில், சென்னை மாநக ராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் குறுகிய கால டெண்டர் வெளியிட்ட அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப் பட்டிருந்தனர்.

அரசு காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப அறிவுறுத்தல்

சென்னை, மே 23 - அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங் களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் விரைந்து நிரப்ப வேண்டும் என மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார் உயர் அதி காரிகளை அறிவுறுத்தியுள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மனிதவள மேலாண்மை துறை ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர், அனைத்து தரப்பின ருக்கும் அரசு பயிற்சி மையங்கள் மூலம் போட்டித் தேர்வு பயிற்சி வழங்க வேண்டும் என்றும், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும் என்றும் அறிவுறுத்தி னார். அரசு அலுவலகங்களில் ஊழலற்ற, வெளிப்படை யான முறையில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குநர் கோபால சுந்தர ராஜ், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் துரைக்குமார் உள்ளிட்ட துறை தலைவர்களும் உயர் அலு வலர்களும் கலந்து கொண்டனர்.

முதலமைச்சரை தொடர்பு கொள்ள மின்னஞ்சல் முகவரிகள் வெளியீடு

சென்னை: தமிழகத்தின் புதிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை பணி களைத் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் முதலமைச்சர் அலுவலகத்தை எளிதாகத் தொடர்புகொள்ள ஏதுவாக மூன்று அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரை நேரில் சந்திக்க அனுமதி கோருவோர் office.tncm@gmail.com என்ற முகவரியிலும், குறை கள் மற்றும் கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்க விரும்புவோர் cmo@tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்கள் சார்ந்த அலுவல் ரீதியான கடிதப் பரிமாற்றங்களுக்கு tncmosection2026@gmail.com என்ற முகவரி தெரி விக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நிர்வாகத் தேவைகளை விரைந்து பூர்த்தி செய்யும் நோக்கிலேயே இந்தத் தகவல் தொடர்பு முக வரிகள் வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்ராஜுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன்

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் தொண் டர்களைப் பற்றி இழிவான கருத்துகளை தெரிவித்ததாக பதி வான வழக்குகளில் அரசியல் விமர்சகர் பொன்ராஜுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் தரப்பி லிருந்தும், கடலூர் மாவட்ட த.வெ.க அமைச்சர் பி. ராஜ்குமார் தரப்பிலிருந்தும் தனித்தனியே புகார்கள் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் சென்னை சைபர் குற்றப்பிரிவிலும், கடலூர் புதுநகர் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. இந்த வழக்குகளில் முன்பிணை கோரி பொன்ராஜ் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆர். சக்திவேல் இரு வழக்குகளிலும் நிபந்தனையுடன் முன்பிணை வழங்கி யுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களுக்கு உத்தரவு

சென்னை: முதல மைச்சர் விஜய் தலைமை யிலான புதிய அரசு, பணி ஒழுக்கத்தை வலியு றுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனை வரும் காலை 10 மணிக்கு முன்னதாகவே அலு வலகம் வந்துவிட வேண்டும் என்று துறை யின் சார்பு செயலாளர் ராமச்சந்திரன் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அலு வலக உதவியாளர்கள் மற்றும் பதிவேடு எழுத்தர் கள் காலை 9.30 மணிக்கே அலுவலகம் வந்துவிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பலரும் சரியான நேரத் திற்கு வருவதில்லை என்று சுட்டிக்காட்டிய சார்பு செயலாளர், தலை மைச் செயலகத்தில் எடுத்த நடவடிக்கையை பின்பற்றியே இந்த அறிவுறுத்தல் வழங்கப் படுவதாக தெரிவித்து உள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.