தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

24 Jun 2026, 11:40 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

அமைச்சர் ராஜ்மோகன் அலுவலகத்தில் டிஜிட்டல் மனு முறை அமைப்பு!

சென்னை: தலைமைச் செயலகத்தில் கல்வி மற்றும் செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் ராஜ்மோகனின் அறைக்கு வெளியே டிஜிட்டல் முறையில் மனுக்களைப் பெறும் புதிய அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. க்யூஆர் (QR) குறியீடு பொருந்திய இந்த கருவியை தொலைபேசியில் ஸ்கேன் செய்தால் மனு விவரங்களை பதி வேற்றும் பகுதி திறக்கிறது. மொபைல் எண்ணை உள்ளிட்டு, ஓடிபி (OTP) மூலம் சரிபார்ப்பு செய்த பின்னர், அமைச்சரை எப்போது சந்திக்கலாம் என்ற அப்பாயின்மெண்ட் விவரங்கள் குறுந்தகவலாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையை ஏவி அச்சுறுத்துவதா? அரசுக்கு உதயநிதி கண்டனம்

சென்னை: திமுக இளைஞர்கள் அமைப்பை சேர்ந்த அன்பானந்தன் அரியப்பன் என்பவரை கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து காவல்துறை கைது செய்ய முயற்சித்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், கனி என்பவர் மீது தவெக தொண் டர்கள் சைதாப்பேட்டையில் தாக்குதல் நடத்தியதுடன், தாக்கிய வர்கள் மீது வழக்கு பதிவு செய்யாததுடன், மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருந்த கனியை மிரட்டி காவல்துறை டிஸ்சார்ஜ் செய்ய வைத்ததையும் அவர் கண்டித்துள்ளார்.

முதல்வர் விஜய் பேச்சுக்கு கீதா ஜீவன் கண்டனம்

சென்னை: சட்டமன்றத்தில் ஆளுநர் உரைமீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் விஜய் ஆற்றிய உரை குறித்து முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் விமர்ச னம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மின்வெட்டு, விவசாயிகள் பிரச்சனை மற்றும் சட்டம் - ஒழுங்கு சீரழிவு உள்ளிட்ட நியாயமான கேள்விகளை எழுப்பிய போதும், முதல்வர் அவற்றுக்கு பதிலளிக்காமல் ஸ்டாண்ட்-அப் காமெடிய னைப் போல் உளறிக் கொட்டியதாக கீதா ஜீவன் சாடியுள்ளார். 50 ஆண்டுகளுக்கும் மேல் பொது வாழ்வில் உள்ள மு.க. ஸ்டாலின் குறித்து சட்டமன்றத்தில் இதுவரை இவ்வளவு அநாகரிகமாக பேசப்பட்டதில்லை என்று அவர் கூறியுள்ளார். சட்டமன்றத்தை பொழுதுபோக்கு மன்றமாக மாற்றிய முதல்வர், தனது வசனங்களை சினிமா ஷூட்டிங்கோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கீதா ஜீவன் கண்டித்துள்ளார்.

கரூரில் உற்பத்தியை தொடங்கும் அடிடாஸ்! 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னை: உலகப் புகழ்பெற்ற அடிடாஸ் நிறுவனத்தின் காலணிகள், ஜூலை 10 முதல் கரூரிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளன. சென்னையைச் சேர்ந்த கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் மற்றும் தைவானின் எவர்வான் குழுமத்தின் கூட்டு முயற்சியான ஃபீனிக்ஸ் கோத்தாரி ஃபுட்வேர் நிறுவனத்தின் தொழிற்சாலையில் இந்த உற்பத்தி நடைபெறவுள்ளது. இந்த நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை மேற்கொண்டு மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கத் திட்டமிட்டுள்ளது. கரூர் தொழிற்சாலை மட்டும் கட்டம் கட்டமாக 15,000 வேலைகளை உருவாக்கும் என தெரி விக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவின் மொத்த காலணி உற்பத்தியில் 32 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்களிப்பை தமிழ்நாடு வழங்கி வருகிறது. நாட்டின் காலணி ஏற்றுமதியில் 48 சத விகித பங்கையும் மாநிலம் வகிக்கிறது. சமீப ஆண்டுகளில் மட்டும் தோல் அல்லாத காலணித் துறையில் ரூ. 12,000 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

குன்னூரில் கார் பார்க்கிங் திட்டம் ரத்து!

சென்னை: குன்னூர் விநாயகர் கோவிலில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப் பட்ட மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டுமானப் பணியை ரத்து செய்து இந்து சமய அறநிலையத்துறை, செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் தற்போதைய அமைச்சர் ரமேஷ் ஆகியோரிடையே இதுதொடர்பாக நடை பெற்ற கடுமையான விவாதத்திற்குப் பிறகு, இத்திட்டம் இன்னும் தொடங்கப்படாத சூழலில் மறுபரிசீலனை செய்யப் பட்டு தற்போது முழுமையாக கைவிடப்பட்டுள்ளது.

மின்துறை வெள்ளை அறிக்கை இன்று வெளியீடு

சென்னை, ஜூன் 24 - மின்துறை தொடர் பான வெள்ளை அறிக்கை வியாழக்கிழமை வெளி யிடப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்து உள்ளார். மின்வாரியத்தில் 15,000 பணியாளர்களை நியமிக்க முதல்வர் 30 நிமி டத்தில் ஒப்புதல் அளித்தா ரென்றும், கடந்த ஆட்சிக் காலத்தில் மின்துறை உருக்குலைந்து போனது என்றும் அவர் கூறியு உள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.