தீக்கதிர் முக்கிய செய்திகள்
29 Jun 2026, 9:59 pm

தமிழகத்தில் தீவிரமெடுக்கும் ‘வாஷிங் மெஷின்’ அரசியல் உதயநிதி விமர்சனம்

சென்னை: தவெக ஆட்சி அமைந்த பிறகு அதிமுக-வின் ஆறாவது எம்எல்ஏவாக எம்.ஆர். விஜயபாஸ்கர் பதவி விலகியிருப்பது ஆளுங்கட்சியின் ‘ஆள் பிடிக்கும் அரசியல்’ எந்த அளவுக்கு தீவிரமாகியுள்ளது என்பதைக் காட்டுவதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக் கையின்றி எம்எல்ஏக்களை இழுக்கும் செயல் மக்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் என்று அவர் கூறியுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன் என்று கேள்வி எழுப்பியிருக்கும் அவர், ‘சோபா மாடல்’ (‘Sofa Model’) அரசின் இந்த வாஷிங் மெஷின் அர சியலை தமிழ்நாடு கவனிக்கிறது என தெரிவித்துள்ளார்.

41 பேர் பலியானதற்குப் பின் விஜய் கரூர் செல்கிறார்!

சென்னை: கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில், 41 பேர் நெரிசலில் சிக்கி பலியாகினர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவிக்காத தவெக தலைவர் விஜய், 41 பேர்களின் குடும்பத்தினருக்கும் மாமல்ல புரம் வரவழைத்து ஆறுதல் கூறினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது விஜய் தமிழக முதல மைச்சராகி விட்ட பின்னணியில், 41 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க ஜூலை 2 ஆம் வாரத்தில் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 41 பேர் பலி யான வழக்கில், சிபிஐ விசாரணை மீண்டும் துவங்கியுள்ளது. தேர்தல் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட விசாரணை ஜூன் 11 அன்று துவங்கியது. 10 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, நான்கு போலீசார் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.

பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து பரிசீலனை!

சென்னை: உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான விலையை உயர்த்துவது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். விழுப்புரம் ஆவின் பால் பண்ணையில் திடீர் ஆய்வு மேற் கொண்ட பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, பாலின் தரம், பரிசோதனை முறை, அதிநவீன இயந்திரங்கள் மூலம் பால் பாக்கெட் தயாரிப்பு மற்றும் விநியோக வாகனங்களில் பால் ஏற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டார். தற்போது ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ. 32 முதல் ரூ. 36 வரை மட்டுமே வழங்குவதால் விவசாயி களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. மாட்டுத் தீவன விலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ. 50 ஆகவும், எருமைப் பாலுக்கு லிட்டருக்கு ரூ. 70 ஆகவும் கொள் முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்; மானியத் தொகையை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் ஆவின் நிலையங்களின் எண்ணிக்கைய ையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன்! சென்னை: ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி

ஒருவர் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை அளித் திருந்தார். அதில், தனது மகனுக்கு போக்குவரத்துத்துறையில் வேலைகேட்டு, இளஞ்செழியன் என்பவரின் ஏற்பாட்டில் தலை மைச் செயலகத்தில் அமைச்சர் சிவசங்கரைச் சந்தித்து பேசிய தாகவும், அப்போது, போக்குவரத்துத் துறையில் வேலை வழங்குவதாக சிவசங்கர் நம்பிக்கை கொடுத்ததாகவும் கூறி யுள்ளார். அத்துடன், தான் கொடுத்த ரூ. 23 லட்சம் பணம் தன் னிடம் வந்து சேர்ந்து விட்டதாகவும் சிவசங்கரே உறுதிப் படுத்தியதாகவும், ஆனால், பணம் வாங்கிக்கொண்டு வேலை கொடுக்காமல் இருவரும் ஏமாற்றி விட்டனர் என்றும் தெரி வித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், இளஞ்செழி யனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஜூன் 24 அன்று கைது செய்தனர். விசாரணைக்குப் பின் சிவசங்கரின் பெய ரும் வழக்கில் சேர்க்கப்பட்டு, தற்போது நேரில் ஆஜராகுமாறு சிவசங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மனமகிழ் மன்றங்கள்: கட்டணம் 2 மடங்கு உயர்வு

சென்னை: தமிழ்நாட் டில் செயல்பட்டு வரும் எஃப்எல்-2 வகை மன மகிழ் மன்றங்களுக் கான சிறப்புக் கட்ட ணத்தை இரண்டு மடங்காக உயர்த்தி தமி ழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை ரூ. 15 லட்சமாக இருந்த புதிய மன்றங்கள் தொடங்கு வதற்கான சிறப்புக் கட்ட ணம், இப்போது ரூ. 30 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது. மதுபான உரிமத்திற்கான விண் ணப்பக் கட்டணம் ரூ. 10,000 ஆகவும், உரிமக் கட்டணம் ரூ. 30,000 ஆகவும் நிர்ணயிக்க ப்பட்டுள்ளது. மக்கள்தொகை மற்றும் உள்ளாட்சி அமைப்பின் அடிப்ப டையில் கட்டண விகி தங்கள் வகுக்கப்பட்டு அரசிதழில் வெளியிட ப்பட்டுள்ளன. சென்னையிலும் 10 லட்சத்திற்கும் அதிக மான மக்கள்தொகை கொண்ட மாநகராட்சிப் பகுதிகளிலும் சிறப்புக் கட்டணம் முறையே ரூ. 30 லட்சம் மற்றும் ரூ. 25 லட்சமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட மாநக ராட்சிப் பகுதிகளுக்கு ரூ. 20 லட்சமாகவும், நக ராட்சிப் பகுதிகளுக்கு ரூ. 15 லட்சமாகவும், ஏனைய பகுதிகளுக்கு ரூ. 10 லட்சமாகவும் சிறப்பு சலுகைக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

மு.க. ஸ்டாலின் ஜூலை 5-இல் லண்டன் செல்கிறார்!

சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலி னின் பேரனும், எதிர்க் கட்சித் தலைவர் உதய நிதி ஸ்டாலினின் மகனு மான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான பட்டப்படிப்பை முடித்து உள்ளார். இந்நிலை யில், ஜூலை மாதம் நடைபெறவுள்ள பட்ட மளிப்பு விழாவில் கலந்து கொள்ள மு.க. ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதய நிதி ஸ்டாலின் மற்றும் இன்பநிதி ஆகியோர் ஜூலை 5 அன்று லண் டன் புறப்படுகின்றனர்.