தீக்கதிர் முக்கிய செய்திகள்
29 Oct 2026, 10:52 pm

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பேராசிரியர் கலையரசன் கைது: மு.க. ஸ்டாலின் கண்டனம்

சென்னை, அக். 29 -சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் கலையரசன் காவல் துறையினரால்அலைக்கழிக்கப்பட்டதற்குத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘The Dravidian Model’நூலின் ஆசிரியர்களில் ஒருவரான கலையரசனைக் கைது செய்தது சட்டவிரோதமானது என்றும், காவல் துறையும்முதலமைச்சரும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தமது அறிக்கையில்வலியுறுத்தியுள்ளார்.

ரூ. 200-க்கு 10 மளிகைப் பொருட்கள் தொகுப்பு!

சென்னை, அக். 29 -தீபாவளியை முன்னிட்டு, பொதுமக்கள் அத்தியாவசிய மளிகைப் பொருட்களைக் குறைந்த விலையில் பெறும்வகையில், தமிழ்நாடு கூட்டுறவு அங்காடிகளில் 10 மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு ரூ.200-க்குவழங்கப்பட உள்ளது. கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, மிளகாய், கடுகு, சீரகம் உள்ளிட்ட 10 பொருட்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெறும். இத்திட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை (அக். 30) தொடங்கப்படுவதாகத் தமிழக அரசுஅதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மின்வாரியத்தில் 8,000 பணியிடங்களை நிரப்ப அனுமதி

சென்னை, அக். 29 -தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 8,000 பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையம் (TNPSC) மூலம் நேரடியாக நிரப்பத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. முதல் கட்டமாக2027-ஆம் ஆண்டில் 5,000 பேரும், இரண்டாம் கட்டமாக 2028-ஆம் ஆண்டில் 3,000 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.மின் தேவை கடுமையாக அதிகரித்துள்ள சூழலில் இந்த நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின் தேவை 21 ஆயிரம் மெகாவாட்டைத் தாண்டியது!

சென்னை, அக். 29 -‘எல் நினோ’ தாக்கம் காரணமாக வெப்பம் நீடிப்பதால், கடந்த செப்டம்பரில் தமிழகத்தின் அதிகபட்ச மின் தேவை 21,083 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இதுகடந்த ஆண்டு செப்டம்பரில் பதிவான 18,386 மெகாவாட்டைவிட 15 சதவிகிதம் அதிகமாகும். மேலும், மத்திய மின்துறை வெளியிட்ட விவரங்களின்படி, தென் மாநிலங்களின் மொத்த மின் தேவை 62,274 மெகாவாட்டிலிருந்து 76,747 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இது 23.24 சதவீத உயர்வாகும். கர்நாடகத்தில் அதிகபட்சமாக38.71 சதவீதமும், தெலுங்கானாவில் 25 சதவீதமும், கேரளத்தில் 21.80 சதவீதமும், ஆந்திரத்தில் 17.62 சதவீதமும்,புதுச்சேரியில் 7.85 சதவீதமும் மின் தேவை உயர்ந்துள்ளது.

அகவிலைப்படியை உயர்த்த வேண்டும்ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!

சென்னை, அக். 29 -ஒன்றிய அரசைப் போன்று மாநில அரசும் 3 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரியுள்ளது.

இதுதொடர்பாக கூட்டணியின் பொதுச்செயலாளர் ச. மயில் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு 1.7.2026 முதல் கூடுதலாக 3 சதவீத அகவிலைப்படி உயர்வை அக்டோபர் 28 அன்று அறிவித்துள்ளது. இதனால் ஒன்றிய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 60-லிருந்து 63 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோன்று தமிழ்நாடு அரசும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 1.7.2026 முதல் கூடுதலாக 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். அந்த தொகையை தீபாவளி பண்டிகைக்கு முன்பு ரொக்கமாக வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறைத் துறை டி.ஜி.பி. சந்தீப் ராய் இடமாற்றம்!

சென்னை, அக். 29 -தேனி மாவட்டச் சிறையிலிருந்து 17 சிறைவாசிகள் தப்பியோடிய நிலையில், சிறைத் துறை டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனுடன்,காவல் துறையைச் சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிறைத் துறைத் தலைவராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (டான்ஜெட் கோ) தலைமை லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப்பதிலாக, கூடுதல் டி.ஜி.பி. கே. சங்கர், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் தலைவராகபபொறுப்பேற்க உள்ளார்.

சஞ்சய் மாத்துர், மாநிலக் குற்றப் பதிவுப் பணியகத்தின் டி.ஜி.பி.யாகவும், சோனல் சந்திரா, சென்னை டி.ஜி.பி. அலுவலகத் தலைமையக ஐ.ஜி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பி. ரகுபதி கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாள ராகவும், டாக்டர் ஆர். ஸ்டாலின் தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப் பட்டு உள்ளனர். எஸ். அசோக் குமார்,மதுரை பயங்கரவாத எதிர்ப்புப் படையின் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கே.என். நேரு தொடர்புடைய 25 இடங்களில் சோதனை!

சென்னை, அக். 29 –திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்குத் தொடர்புடைய திருச்சி, சென்னை, வேலூர் உள்ளிட்ட 25 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வியாழக்கிழமை சோதனை நடத்தினர். திருச்சி தில்லை நகரிலுள்ள நேரு வீட்டில் காலை 7 மணிக்குத் தொடங்கிய சோதனையில் 15-க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டனர். அவரது சகோதரர் கே.என். ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. நந்தகுமார் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. 2,538 பொறியாளர் பணியிட நியமனங்களில் ரூ.634 கோடி லஞ்சம் கைமாறியதாக எழுந்த புகாரில், செப்டம்பர் 5-ஆம் தேதியும் சோதனை நடந்தது. இந்நிலையில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையைத் திசைதிருப்பவே சோதனை நடந்ததாகவும், இரண்டு மடிக்கணினிகள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் நேரு தெரிவித்துள்ளார். இந்தச் சோதனைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அன்பில் மகேஸ் ஜாமீன் மனு: விசாரணை ஒத்திவைப்பு

சென்னை, அக். 29 -ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமீன் மனு,வியாழனன்று நீதிமன்றத்தில் விசார ணைக்கு வந்தது. அப்

போது, பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கோரியதை அடுத்து, ஜாமீன் மனுமீதான விசாரணை நவம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்கஅனுமதி கோரும் மனுவும் அன்றைய தினமேவிசாரிக்கப்படஉள்ளது.

சரணடைந்த முன்னாள் எம்.எல்.ஏ. சிறையில் அடைப்பு

சென்னை, அக். 29 -தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்திற் காக லஞ்சம் பெற்ற வழக்கில் தலைமறை வாக இருந்த முன்னாள்எம்.எல்.ஏ. முத்துக் குமார், சென்னை ஊழல்தடுப்பு சிறப்புநீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார். அவரை நவம்பர் 12-ஆம் தேதி வரை சிறையில்அடைக்க நீதிபதிசத்தியமூர்த்தி உத்தரவிட்டார். முத்துக்குமா ரிடம் நீதிமன்ற அனுமதியுடன் விசாரணை நடத்தப் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மரிய வில்சன் மீதான வழக்கு ஒத்திவைப்பு

புதுச்சேரி, அக். 29 -2022 ஆகஸ்ட் 8 அன்று, சகோதரர் மரிய குளோத் (45), அவரது மனைவி கெரோலின் (42) ஆகியோரைத் தாக்கியதாக தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன்மீது லாஸ் பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு, புதுச்சேரி நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசேகரன் முன்னிலையில் புதன ன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் நேரில் ஆஜராகவில்லை. இதை யடுத்து விசாரணை நவம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு முன்பு செப்டம்பர் 9, அக்டோபர் 21 ஆகிய தேதிகளிலும் வழக்கு ஒத்திவைக்கப் பட்டிருந்தது.