தீக்கதிர் முக்கிய செய்திகள்
10 Jul 2026, 8:55 pm

சிங்கப்பெண் அதிரடிப் படைக்கு சென்னையில் தலைமை அலுவலகம்

சென்னை, ஜூலை 10 - முதலமைச்சராக விஜய் பதவியேற்ற போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டிருந்தார். இதைத் தொடர்ந்து ஐ.ஜி. பவானீஸ்வரி தலை மையில் இப்படைப் பிரிவு உருவாக்கப்பட்டு, கடந்த ஜூன் 9 ஆம் தேதி முதலமைச்சர் விஜய்யால் தொடங்கி வைக்கப்பட்டது. இப்படைப் பிரிவு தொடங்கி ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பெண் களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட 120 பேர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணாமல் போன 36 குழந்தைகள் மீட்கப்பட்டு, பெற் றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், 16 குழந்தை திருமணங்கள் தக்க நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளன. இப்படைக்கென தனியாக அமைக்கப்பட்டு உள்ள கட்டுப்பாட்டு மையத்தில், 1091 என்ற அவசர உதவி எண்ணிற்கு ஒரு நாளைக்கு சுமார் 1,500-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சிங்கப்பெண் அதிரடிப்படைக்காக சென்னை அசோக் நகரில் தலைமை அலுவலகம் தொடங்கப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் செயல்படும் 70 சிங்கப் பெண் அதிரடிப் படைகளில் புதிதாக 2,545 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது.

நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி

தஞ்சாவூர், ஜூலை 10 - தஞ்சாவூர் அருகே நெல் சேமிப்புக் கிடங்கில் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் வியாழக்கிழமை ஆறுதல் கூறி ரூ. 3 லட்சம் நிதி யுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளி யிட்ட செய்திக்குறிப்பில், “தஞ்சாவூர் அருகே ஆர்சுத்திப் பட்டு திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் ஜூலை 6 ஆம் தேதி நெல் மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் காசிநாதன் மனைவி சின்னப்பொண்ணு (55) நிகழ்விடத் திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் லேசான காயம் அடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள முருகானந்தம் மனைவி சகுந்தலா (25) என்பவ ருக்குச் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறு தலையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது குடும்பத் தினருக்கு ரூ. 3 லட்சமும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ. 50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியி லிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவிக்கப் பட்டுள்ளது.

முட்டை கொள்முதல் விலை புதிய உச்சம்

நாமக்கல், ஜூலை 10- முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை புதிய உச்சமாக ரூ.6.55 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக ரூ.6.50 ஆக இருந்த விலை, 5 பைசா உயர்ந்து ரூ.6.55 ஆக உயர்ந்துள்ளது.

அரசுப் பள்ளியில் தவெக நிகழ்ச்சி ஒளிபரப்பு

சென்னை, ஜூலை 10- கரூரில் முதல்வர் விஜய் பங்கேற்ற நிகழ்ச்சி பள்ளி களில் மாணவர்களுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. விஜய் நிகழ்ச்சியைப் பள்ளி மாணவ, மாணவியர் பார்த்து ஆரவாரம் செய்யும் காணொலி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

காரிகள் இடமாற்றத்திற்கு தடை

சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக ஆகஸ்ட் 31 வரை அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பணி யிட மாற்றத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நிர்வாக சிக்கல்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்தக் காலகட்டத்தில் பணியிட மாற்றங்கள் செய்யக் கூடாது என உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக் கும் அறிவுறுத்தியுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து

சென்னை: ஊழலை ஒழிப்பதாகப் பேசுகின்ற னர்; ஆனால் எந்த நட வடிக்கையும் எடுப்ப தில்லை என உயர்நீதி மன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ள னர். அதிமுக ஆட்சி யில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலு மணி முறைகேடு செய்த தாகக் கூறப்படும் வழக்கு விசாரணையின்போது நீதிபதி ஆனந்த் வெங்க டேஷ் இக்கருத்தைத் தெரிவித்தார்.

தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: தமிழ்நாட் டில் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பா சமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கான சட்ட மன்ற இடைத்தேர்தலை அறிவிக்க தடை விதிக்கக் கோரி வெங்க டாஜலபதி என்பவர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடா மல் ஒத்திவைக்கப் பட்டது.

மாணவர்களுக்கு ஹெல்த் மிக்ஸ்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களில் எல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர் களுக்கு ராஜீவ் காந்தி காலை சிற்றுண்டி திட்டத் தின் கீழ் வழங்கப்படும் 100 மி.லி. சூடான பாலு டன் சாக்லேட் மால்ட் ஹெல்த் மிக்ஸ் கலந்து வழங்கப்பட உள்ளது. இதற்காக சத்யசாய் அன்னபூர்ணா அறக் கட்டளையுடன் புதுச்சேரி அரசு ஒப்பந்தம் செய்து உள்ளது.

எஸ்.சி,எஸ்.டி. வன்கொடுமைகளைக் கண்காணிக்க முதல்வர் தலைமையில் உயர்நிலைக் குழு சென்னை:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளைத் தடுக்கவும், தடுப்புச் சட்டம் திறம்பட அமல்படுத்தப்படுகிறதா எனத் தொடர்ந்து கண்காணிக்கவும், மாநில அளவிலான உயர்நிலை விழிப்பு மற்றும் கண்கா ணிப்புக் குழுவை மறுசீரமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கடந்த ஜூன் 18 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படி, 1989 ஆம் ஆண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் அதன் திருத்த விதிகளின் அடிப்படையில் இக்குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக முதலமைச்சர் விஜய் செயல்பட உள்ளார். நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன், சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். அமைச்சர்கள் ராஜ்மோகன், விஸ்வநாதன், காந்தி ராஜ் உட்பட ஏழு பேரும், மக்களவை உறுப்பினர்கள் தொல். திருமாவளவன், சசிகாந்த் செந்தில், மாநிலங்களவை உறுப்பினர் தனபால் உள்ளிட்ட 8 பேருடன் 37 சட்டமன்ற உறுப்பி னர்களும் குழுவில் இடம்பெற்றுள்ளனர். தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல் துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் அலு வல் சார் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைச் செயலாளர் குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார். ஆண்டுக்கு இருமுறை கூடும் இக்குழு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்வதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம், மறுவாழ்வு நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்தல், வழக்குகளின் விசாரணை முன்னேற்றம் ஆய்வு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்.

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

சென்னை, ஜூலை 10- கோவை, நீலகிரி, காஞ்சிபுரம், தருமபுரி, மதுரை, சேலம், திருவண்ணா மலை ஆகிய மாவட்டங் களில் டாஸ்மாக் ஊழி யர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பணிநிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இப்போராட்டத் தில் ஈடுபட்டுள்ள ஊழி யர்கள், பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கு வதால் தங்களைத் திரு டர்களாகக் கருதுவதை ஏற்க முடியாது எனவும், முறையான கட்ட மைப்பை உருவாக்கிக் கொடுத்தால் அச்சிட்ட விலைக்கே (எம்.ஆர்.பி) மதுபாட்டில் விற்கத் தயார் எனவும் தெரி வித்துள்ளனர்.