தீக்கதிர் முக்கிய செய்திகள்
7 Jun 2026, 11:07 pm

ஆசிய செஸ்: தங்கம் வென்ற சவிதா ஸ்ரீ பாஸ்கருக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: மங்கோலியாவின் தலைநகர் உலான் பத்தாரில் நடைபெற்ற 21 ஆவது ஆசிய மகளிர் தனிநபர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த வீராங்கனை சவிதா ஸ்ரீபாஸ்கர் 7.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இந்த வெற்றி யின் மூலம் 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டிக்கும் அவர் தகுதி பெற்றுள்ளார். இந்தச் சாதனையை பாராட்டி முதல்வர் விஜய் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள சவிதா ஸ்ரீ பாஸ்கரின் அனைத்து முயற்சிகளுக் கும் இந்த அரசு எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார். பொதுப் பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் தனது எக்ஸ் தளப் பதிவில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். தமிழ்நாட்டு இளைஞர்கள் உலக சாதனைகள் புரிய அரசு என்றும் பக்கபலமாக இருக்கும் என்று அவர் உறுதியளித் தார்.

விசிக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு திமுகவில் இணைந்தார்

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளரும் செய்யூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான பனையூர் பாபு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். 2021 தேர்தலில் செய்யூர் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற பனையூர் பாபு அண்மையில் விசிகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்நிகழ்வில் திமுக மூத்த தலைவர்களான டி.ஆர்.பாலு, எ.வ.வேலு, கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் பழைய நடைமுறையே தொடர வேண்டும்

அமைச்சர் வன்னி அரசு கருத்து சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் விசிக துணைப் பொதுச் செய லாளர் வன்னி அரசு தனது நிலைப்பாட்டை தெளிவு படுத்தியுள்ளார். பெரும்பாலான மக்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய நிலைமையே தொடர வேண்டும் என விரும்பு கிறார்கள் என்று குறிப்பிட்ட வன்னி அரசு, மதவாத சக்தி கள் எந்த வகையிலும் இந்த விவகாரத்தை தங்கள் அரசிய லுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார். ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்படும் உச்சிப்பிள்ளை யார் கோவிலில் தீபம் ஏற்றும் நடைமுறையை தொடர்வதற் கான சட்ட போராட்டத்தை அரசு நடத்த வேண்டும் என்று வலி யுறுத்தினார். மதவாத சக்திகளுக்கு எதிரான அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் உறுதி யளித்தார்

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் வசூல் கூடாது!

அமைச்சர் எச்சரிக்கை சென்னை: டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை தாண்டி மதுபானங்கள் விற்பனை செய்வது ஜூன் மாத இறுதிக்குள் முற்றிலுமாக தடுக்கப்படும் என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் எச்சரித்து உள்ளார். ஊழியர்கள் மதுபானங்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதை தவிர்க்க வேண்டும்; மீறினால் கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். டாஸ்மாக்கை தனியார்மயம் ஆக்கும் எந்த நோக்கமும் அரசுக்கு இல்லை என்றும், போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதே அரசின் இலக்கு என்றும் குறிப்பிட்ட அமைச்சர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் தெரிவித் தார்.

ஸ்மார்ட் மீட்டர்’ திட்டம் நிறுத்தமா?

சென்னை: ரூ.20 ஆயிரம் கோடி ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிறுத்தும் வகையில் தமிழக அரசு முடிவு எடுத்துள்ள தாக கிடைத்த தகவல் குறித்து மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிறுத்தும் முடிவை தற்போது வரை அரசு எடுக்கவில்லை. நிதி அதிக அளவில் தேவைப்படுவதால் அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறோம்” என்றார்.

கம்பம் மெட்டு சாலை இன்று முதல் மூடல்

தேனி: கம்பத்தில் இருந்து கேரளத்திற்குச் செல்லும் கம்பம் மெட்டு சாலை பராமரிப்பு பணி களுக்காக திங்கட் கிழமை (ஜூன் 8) முதல் ஒரு மாதத்திற்கு மூடப் படும் என அறிவிக்கப்பட் டுள்ளது. மாற்று ஏற்பா டாக குமுளி மலைச் சாலையை வாகன ஓட்டி கள் பயன்படுத்த நெடுஞ் சாலைத் துறை அறி வுறுத்தியுள்ளது.

ஆன்-லைனில் சிறப்பு தரிசன டிக்கெட்

சென்னை: தரிசனத் திற்கு பக்தர்களிடம் லஞ்சம் வாங்குவதை தடுக்க, தமிழ்நாடு முழு வதும் கோவில்களில் ஆன்-லைனில் சிறப்பு தரிசன டிக்கெட் முறையை கொண்டு வர திட்டம் உள்ளதாக என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.