தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

25 Sept 2026, 10:20 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வரவு

சென்னை: செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். மேலும் அக்டோபர் தொடக்கத்தில் தொடர் விடுமுறை வருவதால் வங்கிப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனைத் கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உரிய ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், செப்டம்பர் மாதச் சம்பளம் வெள்ளிக்கிழமையன்றே (செப். 25) வரவு வைக்கப்பட்டது.

அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றுகளை டிஜிட்டல் முறையில் மட்டுமே வழங்குவதற்கான அரசாணையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில்,தமிழக அரசு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழலைத் தடுக்கவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, ஸ்மார்ட் போன் இல்லாதவர்களுக்காக அச்சிட்ட ஆவணங்களை வழங்கும் நடைமுறையையும் தொடர வேண்டும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

உதயநிதி, கனிமொழி கண்டனம்

சென்னை: சென்னை வண்டலூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் மாணவி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், முதலமைச்சரின் மதுராந்தகம் தேர்தல் பிரச்சாரத்துக்காகக் காவல்துறையினர்சம்பவத்தை மூடி மறைக்க முயல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், திமுக எம்.பி கனிமொழியும் குற்றம் சாட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சையும் நீதியும் வழங்கப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முதல்வர் விஜய் ரோடு ஷோ

சென்னை: மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் மதுராந்தகத்தில் பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தி வாக்குச் சேகரித்தார். முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின் அவர் மேற்கொள்ளும் முதல் இடைத்தேர்தல் பிரச்சாரம் இதுவாகும். முதல்வரின் வருகையையொட்டி மதுராந்தகம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னை: ஜெம் வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற முந்தைய திமுக ஆட்சியில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், “சிறுமிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள வீரமணி உள்பட, உடந்தையாக இருந்தவர்கள், காப்பாற்ற முயன்றவர்கள் என எவரும், எந்தப் பொறுப்பில் இருந்தவராக இருந்தாலும் தப்பிக்கக் கூடாது.அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தரப்பட வேண்டும் என்பதே திமுக நிலைப்பாடு. இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் எண்ணம் யாருக்குமே வராத வகையில், இந்த வழக்கின் முடிவு அமைய வேண்டும் என்பதே தனது விருப்பம். இந்த வழக்கில் தேவையில்லாமல் திமுக மீது பொய்யான அவதூறுகளைப் பரப்பி ஒரு கூட்டம் அரசியல் லாபம் தேடுவதுகண்டிக்கத்தக்கது.

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாரபட்சமின்றி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, குற்றப்

பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தரப்பட்டது. எவரையும் காப்பாற்ற வேண்டிய தேவை திமுக ஆட்சிக்கு இல்லை. தற்போதைய தவெக ஆட்சியில் நடப்பது போல் பாதிக்கப்பட்ட பெண்களின் புகார்களுக்குப் பின்னரும், கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் சமரசம் பேசி வழக்கை முடிக்கும் நிலை திமுக ஆட்சியில் இருந்ததில்லை.

சிறுமிகளுக்கு ஏற்பட்ட துயரத்தை இடைத் தேர்தலுக்கான கருவியாகப் பயன்படுத்தும் செயலை ஆளும் கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி பெற்றுத் தருவதே அனைவரின் நோக்கமாக இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஞானேஷ்குமார் பதவி விலக சிபிஐ வலியுறுத்தல்

சென்னை: தேர்தல் ஆணையத்தில் நிலவும் நெருக்கடிகள்காரணமாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனே பதவி விலக வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இதர தேர்தல் ஆணையர்களின் எழுத்துப்பூர்வ எதிர்ப்புகளை மீறி கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் கருவியாகச் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.