தீக்கதிர் முக்கிய செய்திகள்
19 May 2026, 9:17 pm

‘இருமொழிக் கொள்கையில் சமரசம் இல்லை’

சென்னை: பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக மத்திய அரசு எந்தவிதமான அழுத்தங்களைக் கொடுத்தாலும் அதற்குத் தமிழ்நாடு அரசு அடிபணியாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தமிழகத்தின் இருமொழிக் கொள்கை நிலைப்பாட்டில் எந்தவிதச் சமரசத்திற்கும் இட மில்லை என்று தெரிவித்தார். மேலும், பள்ளிகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ள தாகவும் கூறினார்.

தலைமைச் செயலாளருக்குக் கடிதம்

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வேலை வாங்கித் தரும் பண மோசடி வழக்கில் அடுத்த கட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி கோரி, தமிழகத் தலைமைச் செயலாளர் சாய்குமா ருக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த 2011-2016 காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்ச ராக இருந்த போது நடைபெற்றதாகக் கூறப்படும் முறை கேடு தொடர்பான இவ்வழக்கில், விதிகளின்படி மாநில அரசின் முன் அனுமதி பெறுவது அவசிய என்பதால், ஆதாரங் களுடன் இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை

சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட அர சாணையின்படி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதி யர்களுக்கு உயர்த்தி அறிவிக்கப்பட்ட ஓய்வூதியத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பழனிச்சாமி, பொதுச் செயலாளர் பி.இராம மூர்த்தி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசாணை வெளியிடப்பட்டும் அதற்கான நிதி ஒதுக்கீடு முழுமையாகச் செய்யப்படாததால் கடந்த 3 மாதங்களாகப் புதிய ஓய்வூதி யம் வழங்கப்படவில்லை என்றும், முதலமைச்சர் விஜய் இதில் தலையிட்டு இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இன்று மருந்தகங்கள் வேலைநிறுத்தம்

சென்னை: அங்கீகாரமற்ற ஆன்லைன் மருந்தகங்கள் (E-Pharmacies) மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் அதீத விலைத் தள்ளுபடி முறையைக் கண்டித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் புதன்கிழமை (மே 20) ஒரு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. பொது மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் தடையின்றிக் கிடைப் பதை உறுதி செய்ய மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவிட்டுள்ளதுடன், அவசரத் தேவைக்காகச் சென்னை (9841477526), காஞ்சிபுரம் (9710313433), திருவள்ளூர் (9092504267) ஆகிய மாவட்டங்களுக்கான பிரத்யேக உதவி எண்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு 23 ஆண்டுகள் சிறை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே குமார் (48) என்பவர், கடந்த 2023 ஆம் ஆண்டு வீட்டில் தனி யாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி ஒருவ ருக்கு பாலியல் தொல்லை அளித்தது குறித்து சிறுமியின் தரப்பில் கமுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு இராம நாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், திங்களன்று நீதிபதி கே.கவிதா தீர்ப்பளித்தார். அதன்படி, குற்ற வாளி குமாருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

துரோகிகளை முறியடித்து ஒன்றிணைவோம்: எடப்பாடி

சென்னை: சட்டமன்றத் தேர்தல் தோல்வியையும் உட்கட்சிப் பூசல் களையும் தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் நடந்த அதிமுக புதிய மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உருக்கமாகப் பேசினார். பதவி ஆசைக்காக சிலர் தாய் இயக்கத்திற்குத் துரோகம் செய்து தவெக அரசுக்கு ஆதரவளித்துச் சென்றனர் என்றும், இக்கட்டான இந்தச் சூழலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறி னார். ஆதரவு தெரிவித்த மாவட்டச் செயலாளர்களை நீக்கி புதிய நிர்வாகி களை நியமித்த எடப்பாடி, கட்டுக்கோப்பை நிரூபிக்கும் வகையில் மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த உள்ளார். கூட்டத்தில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தனக்கு ஆதரவான கை யெழுத்துப் படிவங்களை சமர்ப்பித்தனர்.

அதிமுகவின் தோல்விக்கு காரணம் எடப்பாடி பழனிசாமி: சி.வி.சண்முகம் பேட்டி

சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக சந்தித்த தோல்விக்கு எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பாணியே காரணம் என்று அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிக, தவெக உட்பட வலிமை யான கூட்டணி அமைக்கும்படி தாங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்திய தாகவும், ஆனால் எடப்பாடி பழனிசாமி அதனை ஏற்க மறுத்ததாலேயே தோல்வி நேர்ந்தது என்றும் கூறினார். ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினராகக்கூட ஏற்கவில்லை என்றும், 31 மாவட்டச் செயலா ளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்றும் சண்முகம் சுட்டிக்காட்டி னார். கட்சியின் பொதுக் குழுவை உடனடியாக கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும், அதில் எந்த முடிவு எடுத்தாலும் தலைவணங்கி ஏற்கத் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதே தங்களின் ஒரே நோக்கம் என்றும் சண்முகம் வலியுறுத்தினார்.