தீக்கதிர் விரைவு செய்திகள்
27 Sept 2026, 9:48 pm

ஒரே குடும்பத்தில் 4 பேர் உயிரிழந்த வழக்கு:மீண்டும் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வங்கி கடன் விவகாரத்தைத் தொடர்ந்து அண்ணாநகரைச் சேர்ந்த சுமதி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்துஉயிரிழந்த வழக்கை காவல்துறையினர் தற்கொலை என முடித்து வைத்திருந்தனர். இச்சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது எனக்குறிப்பிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அண்ணாநகர் காவல்துறை துணை ஆணையர் மீண்டும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி ஏரியில் அனுமதியின்றி ரூ.8 கோடி மதிப்புள்ள மண் சட்டவிரோதமாக அள்ளப்பட்டதாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரின்அடிப்படையில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.குமரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பான விசாரணைதற்போது தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

கரூர் : கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் முதலாமாண்டு நினைவேந்தல் ஞாயிறன்று அனுசரிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.“இழந்த உறவுகளை நினைத்துத் தவிக்கும் நமக்கு நாமே அரணாக இருப்போம்” எனத் தெரிவித்து முதலமைச்சர்ச.ஜோசப் விஜய் தன் இரங்கலைப் பதிவு செய்துள்ளார். மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டதலைவர்களும் அஞ்சலி தெரிவித்தனர்.

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை:

சென்னை - மும்பை சிறப்பு ரயில்கள் இயக்கம்சென்னை : ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளைக் முன்னிட்டுப் பயணிகளின் வசதிக்காகச் சென்னைகடற்கரை மற்றும் மும்பை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இச்சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட்முன்பதிவு திங்கட்கிழமை (செப். 28) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பட்டாசு விலை 25% உயரும் என அறிவிப்பு

சிவகாசி : மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள் காரணமாகச் சிவகாசியில் இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி சுமார் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகைக்குப் பட்டாசுகளின் விலை 25 சதவீதம் உயர்த்தப்படும் என உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

புதுச்சேரி - கேரளத்துக்கு விமான சேவை

புதுச்சேரி : புதுச்சேரி வில்லியனூரில் ரூ.2,000 கோடியில் ரயில் முனையம் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகத்துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார். மேலும், உடான் திட்டத்தின்கீழ் புதுச்சேரியிலிருந்துகோழிக்கோடு, கொச்சி மற்றும் கண்ணூர் பகுதிகளுக்கு விமான சேவைகள் தொடங்கப்பட இருப்பதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.