தீக்கதிர் முக்கிய செய்திகள்
23 Sept 2026, 11:10 pm

உடல் உறுப்புகள் தானம்:குடும்பத்தினர் கவுரவிப்பு

சென்னை: ஹிதேந்திரனின் நினைவு நாளான செப்டம்பர் 23-ஐ மாநில அளவில் ஆண்டுதோறும் உடல் உறுப்புகள் தான விழிப்புணர்வு தினமாக கடைப்பிடிக்கும் வகையில், உடல் உறுப்புகள் தானம் வழங்கிய கொடையாளர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கு நினைவு பரிசு வழங்கிக் கவுரவிக்கப்பட்டனர். மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ் காணொலிக்காட்சி வாயிலாகப் பங்கேற்று கொடையாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஞானேஷ்குமார் பதவி விலகமு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எஸ்.ஐ.ஆர்.-க்குப் பிறகு நடந்த தேர்தல் முடிவுகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும்,தலைமைத் தேர்தல் ஆணையர் பொறுப்பில் தொடர ஞானேஷ்குமாருக்கு தகுதியோ உரிமையோ இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். தேர்தல் ஆணையத்தில் நடந்தது குறித்து முழுமையாக விசாரித்து, தவறு செய்தோர் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துஉள்ளார்.

ஆணையர்கள் ஆஜராக உத்தரவு

சென்னை: சொத்து வரி உயர்வு வழக்குகளில் மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி பதிலளிக்காததைக் கண்டித்து, சென்னை, கோவை, ஈரோடு மாநகராட்சி ஆணையர்கள் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. பலமுறை அவகாசம் அளித்தும் மாநகராட்சிகள் தரப்பில் யாரும் விளக்கமளிக்காததால் அதிருப்தி அடைந்த நீதிமன்றம், ஈரோடு ஆணையர் அர்பித் ஜெயின், சென்னை ஆணையர் ஜி.எஸ். சமீரன் ஆகியோர் செப்டம்பர் 29-ஆம் தேதியும், கோவை ஆணையர் கட்டா ரவி தேஜா 30-ஆம் தேதியும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குவிசாரணையை முடிக்க 3 மாதம்அவகாசம் கேட்கும் சிபிஐ!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை முடிக்க 3 மாத அவகாசம் தேவை என உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. முன்னதாக, வெளியில் இருப்பவர்களின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சிபிஐ கோரியுள்ளது. ஆனால், சாட்சிகளைக் கலைக்க முயற்சிக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பு மறுப்பு தெரிவித்த நிலையில், 2 வாரங்களில் நிலை அறிக்கை தரும்படி சிபிஐக்கும்,அதைத்தொடர்ந்து 2 வாரங்களில் பதிலளிக்கும்படி அனைத்துத் தரப்பினருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். குற்றம் சாட்டப்பட்டோரின் ஜாமீன் ரத்து உத்தரவுக்கான தடை தொடர்கிறது.

இளையராஜாவின் இசை மேதைமைஅஞ்சல் தலை வெளியிட்டுஆஸ்திரேலியா கவுரவம்!

சென்னை: இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தைப் போற்றி ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நாடாளுமன்றத்தில் அவருக்குச் சிறப்புக்கவுரவம் வழங்கப்பட்டதுடன், ஆஸ்திரேலியா அஞ்சல் துறை (Australia Post) சார்பில், இளையராஜா புகைப்படம் இடம்பெற்ற நினைவு அஞ்சல் தலைகளும் வெளியிடப்பட்டன. இதுகுறித்துப் பேசியிருக்கும் இளையராஜா, தமிழ்நாட்டின் தொலைதூர கிராமத்தில் பிறந்த தான், இசை மூலம் உலகம்முழுவதும் பயணித்திருப்பதாகவும், இந்த அங்கீகாரம் மிகுந்த நெகிழ்ச்சி தருவதாகவும் தெரிவித்து, தன்னைஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அன்பில் மகேஸ் நண்பர் விசாரணைக்கு ஆஜர்!

சென்னை, செப். 23 -தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 100 கோடி மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில், அமைச்சரின் முன்னாள் உதவியாளர் வாளாடி கார்த்திக் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். இதே வழக்கில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸின் சிறப்பு உதவியாளராக இருந்த அருள் முருகனிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வி.எஸ். பாபுவிடம் நலம் விசாரித்த முதல்வர்!

சென்னை, செப். 23 -தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தனியார்மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க ப்பட்டுஉள்ளார். இந்நிலையில், அவரை முதல்வர் நேரில் சென்று நலம் விசாரிக்காதது குறித்து சமூகவலைதளங்களில்பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், தொடர்ந்து, முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்புதனன்று மருத்துவமனைக்கு சென்று, வி.எஸ். பாபுவிடம் நலம் விசாரித்தார்.

நடிகை ராதாவுக்குப் போலீசார் சம்மன்!

சென்னை, செப். 23 -கையொப்பமிட்ட வெற்றுக் காசோலைகளை மோசடி செய்து ரூ. 49 கோடி அபகரிக்க முயன்றதாக, சகோதரி அம்பிகா, சகோதரர் மல்லிகார்ஜுனன் அளித்த புகாரில், செப்டம்பர் 24-அன்று விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகை ராதாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுஉள்ளது. இந்த காசோலைகள், தான் பெற வேண்டிய செட்டில்மெண்ட் காசோலைகள் என்றும், ராதா தந்த மூன்று காசோலைகளும் பவுன்ஸ் ஆனதால் தானே புகார் அளித்திருக்க வேண்டும் எனவும், பணமே சகோதரிகளிடையே பிரச்சனைக்குக் காரணம் அம்பிகா கூறியுள்ளார்.