தீக்கதிர் முக்கிய செய்திகள்
14 Jun 2026, 10:17 pm

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் தற்காலிக மாற்றம்

சென்னை: நெல்லை ரயில் நிலையத்தில் நடைபெறும் தண்டவாள சீரமைப்பு பணியின் காரணமாக தென் மாவட்ட ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் (வ.எண். 16128) ஜூன் 20, 21, 22, 24 முதல் 29 வரையிலான தேதிகளில் வழக்க மான திருச்சூர்-எர்ணாகுளம்-நாகர்கோவில்-நெல்லை-மதுரை பாதையில் செல்லாமல், பாலக்காடு-பொள்ளாச்சி-திண்டுக்கல் வழியாக திருச்சி செல்லும். இந்த நாட்களில் பாலக் காடு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய நிலையங்களில் ரயில் நிற்கும். சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் மறுமார்க்க ரயில் ஜூன் 27 முதல் 29 வரை திண்டுக்கல்-பழனி-பொள்ளாச்சி-பாலக்காடு-சொர னூர் வழியாக செல்லும். தாம்பரம்-செங்கோட்டை வாராந்திர எக்ஸ்பிரஸ் (வ.எண். 20683) ஜூன் 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நெல்லை செல்லாமல் சிவகாசி-ராஜபாளையம்-சங்கரன்கோவில் வழியாக செங்கோட்டை செல்லும். மறுமார்க்கத்தில் (வ.எண். 20684) தென்காசி-சங்கரன்கோவில்-இராஜபாளையம்-சிவகாசி வழியாக விருதுநகர் வரும். திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (வ.எண். 22627) ஜூன் 24 ஆம் தேதி விருதுநகர்-தென்காசி-செங்கோட்டை-புனலூர்-கொல்லம் வழியாக திருவனந்தபுரம் செல்லும்

அண்ணா தொழிற்சங்க பேரவைக்கு புதிய செயலாளர்

சென்னை: அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாள ராக பெல் இரா. தமிழரசன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் அந்தப் பதவியில் இருந்த கமலக்கண்ணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தமையால் இந்த காலியிடம் நிரப்பப்பட்டு உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், “அண்ணா தொழிற் சங்கப் பேரவைச் செயலாளராக பெல் இரா. தமிழரசன் ஜூன் 14 அன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்” என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

அறங்காவலர் குழு நியமனம் சென்னை:

பழனி, சமயபுரம் உள்பட தமிழ்நாடு முழு வதும் 214 கோவில்களுக்கு அறங்காவலர் குழு நியமனத்திற் கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பரம்பரை வழி சாரா அறங்காவலர்களாக நியமிக்கப்பட விரும்பும் தகுதியுள்ள வர்கள் ஜூலை 22 வரை விண்ணப்பிக்கலாம். கோவில்களின் விவரங்கள், தகுதி நிபந்தனைகள் உள்ளிட்ட தகவல்கள் www.hrce.tn.gov.in இணையதளத்தில் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளன.

அதிமுகவிலிருந்து நடிகை கவுதமி விலகல் சென்னை: நடிகை கவுதமி அதிமுகவிலிருந்து விலகுவ தாக அறிவித்துள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ள கவுதமி, “14.6.2026 முதல் நான் வகித்து வரும் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியிலிருந்து, தற்போது உள்ள அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, சமூக சேவை செய்ய ஏதுவான வகையில் கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முட்டை விலை 620 காசாக உயர்வு நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை கடந்த ஒரு வாரமாக உயர்ந்து வருகிறது. என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ், வெள்ளிக்கிழமை முட்டை விலையில் மேலும் 10 காசுகள் உயர்த்தினார். இதைத்தொடர்ந்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 620 காசாக நிர் ணயம் செய்யப்பட்டது. முட்டையின் தேவை நாடு முழு வதும் அதிகரித்துள்ளதால், அனைத்து மண்டலங்களிலும் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மின்வாரிய கள உதவியாளர் பணி: உடல் தகுதித் தேர்வு விதிகளில் திருத்தம்

சென்னை, ஜூன் 14 - தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 1,850 கள உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த நவம்பர் 16 அன்று வெற்றிகர மாக நடைபெற்றது. தேர்வு முடிவுகள் மற்றும் சான்றிதழ் சரி பார்ப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உடல் தகுதித் தேர்வு விதிமுறைகளில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை வெறும் காலில் மின் கம்பம் ஏற வேண்டும் என்ற விதி இருந்தது. இந்த விதி இப்போது மாற்றப்பட்டு, ஷூ அணிந்த நிலை யில் 30 அடி உயர மின் கம்பத்தை 8 நிமிடங் களுக்குள் ஏற வேண்டும் என்று புதிய விதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திருத்தம் விண்ணப்பதாரர்களுக்கு ஆறுதல் அளிக்கும் மாற்றமாக கருதப்படு கிறது.