தீக்கதிர் முக்கிய செய்திகள்
24 Sept 2026, 9:46 pm

2026 சட்டமன்றத் தேர்தல்கட்சிகளின் செலவு கணக்கு வெளியீடு!

சென்னை, செப். 24 -தமிழகத்தில் ஏப்ரல் 23 அன்றும், புதுச்சேரியில் ஏப்ரல் 9 அன்றும் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களும் தங்களது தேர்தல் பிரச்சாரச் செலவுகளைத் தாக்கல் செய்துள்ளனர்.இதன்படி, தேர்தல் செலவு அறிக்கையில் திமுக ரூ. 197.88 கோடி, அதிமுக ரூ. 109.62 கோடி, நா.த.க. ரூ.1.37 கோடி, பாஜக தமிழ்நாட்டிற்கான பிரச்சாரச் செலவாக ரூ.51.56 கோடி என கணக்கு தாக்கல் செய்துள்ளன.

யானைகள் வழித்தடங்களில் கட்டுமானப் பணி கூடாது! ‘ஜி ஸ்கொயரு’க்கு உத்தரவு

சென்னை, செப். 24 -யானைகள் வழித்தடத்தைப் பாதிக்கும் வகையில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ‘ஜி-ஸ்கொயர்’ நிறுவனம்எந்தவிதக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பான வழக்கில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் 150 முதல் 200 மீட்டர் வரை யானைகள் உலாவும் பகுதியில் எந்தக் கட்டுமானப்பணியும் மேற்கொள்ளக் கூடாது என்றும், கண்டறியப்பட்ட யானைகள் வழித்தடங்களில் கட்டுமானம் கூடாதுஎனவும் நீதிபதிகள் என். சதீஷ்குமார்,கே. ராஜசேகர் அமர்வு உத்தரவிட்டது. மேலும், வனப்பகுதியில் மின்வேலிகள் அமைக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளதை மாவட்ட வனத்துறை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

நாளை முதல் காலாண்டு விடுமுறைமாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தத் தடை!

சென்னை, செப். 24 -அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள், செப்டம்பர் 17 அன்று துவங்கிய நிலையில்,இன்றுடன் (செப்.25) நிறைவடையவுள்ளன. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரைமாணவர்களுக்குக் காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பருவத்திற்காக, பள்ளிகள்மீண்டும் அக்டோபர் 5-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள்நடத்துவதற்கும், மாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்வதற்கும் பள்ளிக்கல்வித் துறை தடை விதித்துள்ளது.

தவெக வேட்பாளர் டெபாசிட் இழக்க வேண்டும்: பழனிசாமி

சென்னை, செப். 24 -மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் டெபாசிட் இழக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். குதிரை பேரத்தில் விலை போய்விட்டதால் மதுராந்தகத்தில்இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளதாகவும், ஓட்டுப்போட்ட மக்களை மறந்து தவெகவில் சேர்ந்தவர்க ளுக்குப் பாடம் புகட்ட வேண்டும் எனவும், அதிமுகவில் வெற்றிபெற்றவர்களை ராஜினாமா செய்யவைத்துத் தவெகவில் சேர்த்தது வெட்கக்கேடு எனவும் அவர் கூறினார்.

2 ரயில்களில் கூடுதலாக 2 ஏ.சி. பெட்டிகள் இணைப்பு

சென்னை, செப். 24 -பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மங்களூரு சென்டிரல் - இராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண் 16622/16621) கூடுதலாக 2 ஏ.சி. 3-ஆம் வகுப்பு பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படவுள்ளன. இந்த மாற்றம் மங்களூரு சென்டிரலில் இருந்து அக்டோபர் 3-ஆம் தேதி முதலும், இராமேஸ்வரத்தில் இருந்து அக்டோபர் 4 ஆம் தேதி முதலும் அமலுக்கு வரும்.இதேபோல், தாம்பரம் - இராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண் 16103/16104) ஒரு ஏ.சி. 2 ஆம் வகுப்பு பெட்டியும், ஒரு ஏ.சி. 3ஆம் வகுப்பு பெட்டியும் நிரந்தரமாக இணைக்கப்படும். இது தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 1 முதலும், இராமேஸ்வரத்தில் இருந்து அக்டோபர் 2 முதலும் அமலுக்கு வரும்.

நீட் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு!

சென்னை : ‘மருத்துவ மேற்படிப்புக்கான நீட் முதுநிலை- 2026’ தேர்வு முடிவுகள் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இத்தேர்வின் மூலம் எம்.டி., எம்.எஸ். மற்றும் பி.ஜி, டிப்ளமோ மேற்படிப்புகளுக்குச் சேர்க்கை நடைபெறும்.

அருண் ஐபிஎஸ் பதவி பறிப்பு

சென்னை : போலீஸ் அகாடமி இயக்குநராக இருந்த அருண் ஐபிஎஸ்-ஸை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை மண்டல ஐஜி கண்ணனும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தவெக பணம் விநியோகம்: அதிமுக புகார்!

சென்னை, செப். 24 -மதுராந்தகம் மற்றும்தாராபுரம் தொகுதி களில் தவெக சார்பில் வாக்குக்குப் பணம் விநியோகிக்கப்படு வதாக அதிமுக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் புகார் அளிக்கப்ப ட்டுள்ளது. அதிமுக வழக்க்கறிஞர் பிரிவு செயலா ளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இன்ப துரை இக்கடிதத்தை அளித்துள்ளார். செப்டம்பர் 22 அன்று, அச்சரப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ரெட்டிபாளை யத்தில் வாக்குக்குத் தவெக சார்பில் பணம்விநியோகிக்கப்பட்டசெய்தியை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை, செப். 24 -தமிழகத்தில் செப்டம்பர் 29 வரை பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.தமிழகத்திலும், புதுவைமற்றும் காரைக்காலி லும் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.