தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

16 Aug 2026, 10:24 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

மயங்கி விழுந்த காவலர் உயிரிழப்பு:

ரூ.30 லட்சம் நிதியுதவி அறிவிப்புசென்னை: சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் காவலர் ஒருவர் மயங்கி விழுந்துஉயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் தேசியக் கொடி ஏற்றி வைத்தபோது, காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை வழங்கினர். அப்போது இசை வாத்தியக் குழுவில் இருந்த காவலர் தர்மராஜுக்குத்திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். எனினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பலனின்றி காவலர் தர்மராஜ் (56)உயிரிழந்தார்.தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், ஆவடி புதிய

காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல்படை இரண்டாம் பட்டாலியன்வளாகத்தில் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.காவலர் தர்மராஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துஉள்ள முதலமைச்சர் விஜய், அவரது குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

பட்டாசுத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதாக தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

சென்னை: சிவகாசி பட்டாசு தொழிலைப் பாதுகாக்க வேண்டும் எனக் கோரியும், தவெக அரசைக் கண்டித்தும்திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும்திருச்சுழிஎம்.எல்.ஏ.வுமான தங்கம் தென்னரசு தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் பேசிய தங்கம் தென்னரசு, தவெக அரசு பொறுப்பேற்று மூன்று மாதத்திலேயே சிவகாசி பட்டாசு தொழிலை அடியோடு நசுக்க முயற்சிப்பதாகவும், இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் குற்றம் சாட்டினார். தொழிற்சாலை

களில் ஏற்படும் விபத்துகளைக் காரணம் காட்டி முறையான அனுமதி பெற்று இயங்கும் தொழிற்சாலைகளையே முடக்க முயல்வது நியாயமற்றது என்றார்.

மேலும், பட்டாசு தொழிலாளர்களுக்கு விபத்துக் காப்பீடு மற்றும் தீயணைப்பு நிலையங்கள் அமைப்பது குறித்துத் தேர்தல் வாக்குறுதி அளித்த தவெக, அதை நிதிநிலைஅறிக்கையில் அறிவிக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பிய அவர், பட்டாசுக் கடைகளில் ஆய்வு என்ற பெயரில் சிறு வியாபாரிகளின் வயிற்றில் அடிப்பதாகவும் விமர்சித்தார்.

இன்று 3 ஆம் கட்ட கவுன்சலிங் தொடக்கம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 400-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு திங்கட்கிழமை (ஆக.17) தொடங்குகிறது.

நடப்பு 2026-2027 கல்வியாண்டுக்கான சேர்க்கையில், சிறப்பு மற்றும் முதற்கட்ட கலந்தாய்வில் 28,979 மாணவர்களுக்கும், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 60,508மாணவர்களுக்கும் ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, 1,31,094 முதல் 2,33,812 வரையிலான தரவரிசை பெற்ற மாணவர்களுக்கான விருப்பத் தேர்வு இணையதளம் மூலம் மூன்றாம் கட்டமாக ஆரம்பமாகிறது. மாணவர்கள் தங்கள் தேர்வுகளைச் சேமிக்காவிட்டாலும், ஆக. 19 ஆம் தேதி மாலை 5மணிக்கு விருப்பப் பட்டியல் தானாகவே பூட்டப்படும். மூன்றாம் கட்ட கலந்தாய்வுக்கான தற்காலிக இடஒதுக்கீடுமுடிவு ஆக.21 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.