தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

24 May 2026, 10:30 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

மேகதாது அணை விவகாரம்: திமுக கண்டனம்

சென்னை: மேகதாதுவில் அணை கட்ட ஒன்றிய அரசிடம் புதிய திட்டம் வழங்குவதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியதை திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு வன்மையாக கண்டித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமையில்லை என்று சிவகுமார் கூறி யது ஆணவப் போக்கை காட்டுவதாகவும், தமிழ்நாட்டில் புதிய ஆட்சி பலவீனமானது என்ற எண்ணத்தில் அவர் இப்படி பேசுவதாகவும் சுட்டிக்காட்டினார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கீழ்ப்படுகை மாநிலங்களின் முன் அனு மதியின்றி மேகதாதுவில் கட்டுமானம் மேற்கொள்ளக் கூடாது என்றும் நினைவூட்டினார். கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதை பயன்படுத்தி, கர்நாடகம் இத்திட்டத்தை முன் னெடுக்க முயல்வதை தமிழ்நாடு முதல்வர் கண்டித்து, அணை கட்டும் முயற்சியை துவக்கத்திலேயே முறியடிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு: சுமார் 8 லட்சம் பேர் பங்கேற்பு

சென்னை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணை யம் நடத்தும் சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (மே 24) நாடு முழுவதும் நடை பெற்றது. காலை 9.30 முதல் 11.30 மணி வரையிலும், மதியம் 2.30 முதல் மாலை 4.30 மணி வரையிலுமாக இரண்டு அமர்வுகளாக தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் ஏறத்தாழ 933 காலிப் பணியிடங்களுக்கு சுமார் 8.19 லட்சம் தேர்வர் கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் சுமார் 8 லட்சம் பேர் தேர்வை எழுதினர். சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வரலாற்றிலேயே, முதன்முறையாக தேர்வு முடிந்த உடனேயே தற்காலிக விடைக்குறிப்புகளை தேர்வாணையம் வெளியிடவுள்ளது. இதுவரை இறுதி முடிவுகள் வெளியான பின்னரே விடைக் குறிப்பு வெளியிடப்பட்டதால், தேர்வர்கள் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மெயின் தேர்வுக்கு அழைக்கப் படுவார்கள்.

விமான நிலையத்தில் பாதுகாவலர் மர்ம மரணம்

சென்னை: சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் இயக்குநர் மற்றும் நிர்வாக அலுவலகத்திற்கு மேல் இரண்டாவது தளத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளுக்கு பாதுகாப்பு வழங்க தனியார் ஒப்பந்த நிறு வனம் காவலர்களை நியமித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் காந்தி கன்னியப்பன் (57), கடந்த 7 ஆண்டுகளாக அந்நிறுவனம் மூலம் காவலராக பணியாற்றி வந்தார். மே 23 அன்று மாலை 6 மணிக்கு இரவுப் பணிக்காக விமான நிலையம் வந்த கன்னியப்பன், தனக்கு ஒதுக்கப்பட்ட பணித்தளத்தில் உள்ள அறையில் தங்கியிருந்தார். ஞாயிறன்று காலை 6 மணிக்கு பணி மாற்றத்திற்காக வந்த மற்றொரு காவலர் அவரைக் காணா மல் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றார். அழைப்பை ஏற்காததால் அறைக்குச் சென்று பார்த்தபோது, கன்னியப்பன் மின்விசிறியில் உயிரற்ற நிலையில் காணப் பட்டார். தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தாம்பரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலையா அல்லது கொலையா என்பது உடற்கூறாய்வு அறிக்கைக்குப் பின்னரே தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

காதர் மொகிதீன் கருத்துக்கு திமுக பதில்

சென்னை: திமுக மீது நன்றி செலுத்த வேண்டாம், சேற்றை வாரி இறைக்காமல் இருங்கள் என ஐ.யூ.எம்.எல். தலைவர் காதர் மொகிதீனுக்கு திமுக செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் ஹஃபீசுல்லா வேண்டுகோள் விடுத்து உள்ளார். இஸ்லாமியர்கள் வாக்குகளால்தான் திமுக வெற்றி பெற்றது என காதர் மொகிதீன் கூறியதற்கு பதிலளித்த ஹஃபீசுல்லா, 2016 தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றதை யும், 2021 தேர்தலில் ஒதுக்கப்பட்ட மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெறவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக ஆட்சியைக் கைப்பற்றியபோது முஸ்லிம் லீக் தோல்வி யடைந்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

விசிக முன்னாள் எம்எல்ஏ விலகல்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு விலகி யுள்ளார். தலைமையின் நிலைப்பாட்டில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களும் கொள்கை மழுங்கடிப்பும் தன்னால் ஏற்றுக்கொள்ள இயலாது என்று அவர் தனது விலகல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். பெரியார் மற்றும் அம்பேத் கர் வகுத்த கொள்கைகளே நிலையான ஆயுதங்கள் என்றும், சித்தாந்தங்களை விட கவர்ச்சியின் பின்னால் ஈர்க்கப்படுவது ஆபத்தானது என்றும் வலியுறுத்திய அவர், கட்சியிலிருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்து உள்ளார்.

தொடர் மின்வெட்டு புகார்: அமைச்சர் விளக்கம்

சென்னை: தமிழகத் தில் பரவலாக அறிவிக் கப்படாத மின்வெட்டு தொடர்வதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். சென்னை பெருங்குடி யில் உள்ள தனியார் மருத்துவமனையில் நள்ளிரவில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட் டது. அவசரகால ஜென ரேட்டர் இயக்கப்படாத தால் ஆக்சிஜன் கருவி கள் முடங்கி, உயிருக் குப் போராடிய நோயாளி களுக்கு மருத்துவப் பணியாளர்கள் கை களால் இயக்கும் பம்பு பேக் மூலம் ஆக்சிஜன் செலுத்த நேர்ந்தது. இதுகுறித்து அமைச் சர் நிர்மல் குமார், “கேபிள் வயர்கள் எரிந்த தால் மின்வெட்டு ஏற்பட் டது. மெத்தனமாக இருந்த மின்வாரிய ஊழி யர்கள் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மின்வெட்டு தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு!

சென்னை: மருத்துவ மனைகளுக்கு தடை யில்லா மின்சாரம் வழங்க ஊழியர்களுக்கு மின்வாரியம் உத்தர விட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மருத்துவ மனைகளும் மின்வெட் டால் பாதிக்கப்படுவ தாக புகார் எழுந்து உள்ளது; நோயாளிகள் பாதிக்கப்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மின் வாரியம் அறிவுறுத்தி யுள்ளது.

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி. வேணுகோபால் விலகல்

சென்னை, மே 24 - அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்றக் குழுத் தலைவர் வேணுகோபால் கட்சியில் இருந்து விலகியுள்ளார். தற்போதைய தலைமை அனைவரையும் அனுசரித்துச் செல்லவில்லை என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமை மீது பட்டியலின மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டி அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். திருவள்ளூர் தொகுதியில் 2009 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இருமுறை மக்களவை உறுப்பின ராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வேணுகோபால், கட்சியின் மருத்துவ அணிச் செயலாளர், ஆட்சிமன்றக் குழு உறுப்பி னர், 2017-இல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் உள்ளடக்கிய அதிமுக குழுவின் தலைவர் என பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். தனது விலகல் கடிதத்தில் வேணுகோபால், “எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காலத்தில் அதிமுக அனைத்து சமூகங் களையும் ஒருங்கிணைத்துச் சென்றது என்றும், தற்போது அந்த தோற்றம் குறைந்ததால் பட்டியலின மக்கள் கட்சியில் இருந்து விலகி நின்றதே தொடர் தேர்தல் தோல்விகளுக்கு முதன்மைக் காரணம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தமிழ் மக்களின் நலனையும் தொண்டர்களின் நலனையும் கருதாமல் தற்போதைய தலைமை செயல்படுவதால், கட்சியில் இருந்து விடுவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

மூடப்பட்ட டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு மாற்றுப் பணி

சென்னை, மே 24 - தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய், 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார். இந்நிலையில் மூடப்படும் கடைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி ஏற்படுத்த வேண்டும் என பணியாளர்கள் சார்பில் கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து, மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களை காலி பணியிடங்களின் அடிப்படையில் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளிலும் மற்றும் மாவட்ட நிர்வாக அலுவலகங்களிலும், டாஸ்மாக் கிடங்குகளிலும் பணியமர்த்த டாஸ்மாக் மேலாண் இயக்கு நர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அனைத்து முதுநிலை மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு அவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.