தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

15 Jun 2026, 8:50 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

மகளிர் உரிமை தொகை ரூ. 1,000 வரவு வைப்பு!

சென்னை, ஜூன் 15- ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 திங்களன்று (ஜூன் 15) பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின்போது இத்தொகையை ரூ. 2,500 ஆக உயர்த்துவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆட்சிக்கு வந்துவிட்ட நிலையில், திட்டத்தை மறு சீரமைப்பு செய்ய கால அவ காசம் தேவை என்று குறிப்பிட்டிருந்தார். எனி னும், முந்தைய நடைமுறை யின்படி மே மாதத்திற்கு ரூ. 1000 வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில், ஜூன் மாதத் திற்கும் ரூ. 1000, குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப் பட்டுள்ளது.

தயார் நிலையில் 46 ஆயிரம் புதிய ரேசன் அட்டைகள்!

சென்னை, ஜூன் 15 - தேர்தல் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குடும்ப அட்டை சேவைகள் தற்போது மீண்டும் தொட ங்கியுள்ளன. உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் விரைவாக அட்டைகள் வழ ங்குமாறு அறிவுறுத்தியதை அடுத்து அச்சிடும் பணி கள் முடிந்துள்ளன. ஜன வரி மாதம் முதல் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் புதிய அட்டைக்கு விண்ணப்பித்தி ருந்த நிலையில், முதற்கட்ட மாக 46,000 அட்டைகள் தயார் நிலையில் உள்ளன.

அடுத்த சில நாட்களில் விநி யோகம் தொடங்கும் என் றும், தகுதியான அனை வருக்கும் படிப்படியாக வழங்கப்படும் என்றும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கால்நடை மருத்துவப் படிப்பு: விண்ணப்பிக்க கால அவகாசம்

சென்னை, ஜூன் 15- தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்க லைக்கழகத்தில் 2026-27-ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலை கால்நடை மருத் துவம் (பிவிஎஸ்சி) மற்றும் பி.டெக். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை (https://adm.tanuvas.ac.in) விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது.

இது வரை 10,678 விண்ணப்பங் கள் பிவிஎஸ்சி படிப்பிற்கும், 5,356 விண்ணப்பங்கள் பி.டெக் படிப்பிற்கும் பதிவாகியுள்ளன. இந்நிலை யில், மாணவர்களின் வசதிக் காக, தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு காலக்கெடு, தற் போது ஜூன் 23 மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மிதமான மழை நீடிக்கும்!

சென்னை, ஜூன் 15 - தமிழகத்தில் ஒரு வாரத் திற்கு மிதமான மழை தொட ரும் என்று சென்னை வானி லை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. செவ்வாயன்று (ஜூன் 16) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங் கள், டெல்டா மாவட்டங் கள், தெற்கு தமிழகம், திருச்சிராப்பள்ளி, பெரம்ப லூர், அரியலூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.