தீக்கதிர் முக்கிய செய்திகள்
2 Jun 2026, 9:37 pm

சட்டப்பேரவை முதன்மை செயலாளர் சீனிவாசன் பதவி விலகல்

சென்னை, ஜூன் 2- தமிழக சட்டப் பேரவையின் செயலாளராக பணியாற்றி வந்த கி. சீனிவாசன் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். 2018 ஆம் ஆண்டு சட்டப்பேரவை செயலாளராக நிய மிக்கப்பட்ட அவர், நீண்ட கால சட்டப்பேரவை அனுபவம் கொண்டவர். ஓய்வு பெற்ற பின்னரும் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது. சமீபத்தில் அவருக்கு மேலும் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு, சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் அந்தஸ்தும் வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர் திடீரென பதவி விலகியிருப்பது அதிகார வட்டாரங் களில் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது ராஜினாமாவிற் கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக வில்லை.

பெண்கள் பாதுகாப்பு விவகாரம்: தமிழக அரசை விமர்சித்த கனிமொழி

தூத்துக்குடி, ஜூன் 2- திருவைகுண்டம் அருகே பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்ப வம் தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனி மொழி தமிழக அரசை விமர்சித்துள்ளார். வேலை வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தமிழக வெற்றிக் கழகத் தைச் சேர்ந்த இரு நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த கனிமொழி, பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி யாக உள்ள சூழலில் ஆளுங்கட்சி தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். தேர்தல் காலத்தைப் போல எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டு களை முன்வைப்பதை விட, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை தகவல் பலகையில் காட்சிப்படுத்த உத்தரவு

சென்னை, ஜூன் 2 - தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் பள்ளிகளும் கல்விக் கட்டண விவரங்களை தகவல் பலகையில் வெளிப்படையாகக் காட்சிப்படுத்த வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்கு நர் சுகன்யா உத்தரவிட்டுள்ளார். வரும் கல்வியாண்டை முன்னிட்டு மாநில தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. பள்ளிகளில் நிர்ணயிக்கப் பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கப் படுவதாகப் பல்வேறு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, நர்சரி, மெட்ரிக், சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து வகை தனியார் பள்ளிகளும் வகுப்பு வாரியான கல்விக் கட்டண விவரங்களை பெற்றோர்களும் மாணவர்களும் எளிதில் அறியும் வகையில் தகவல் பலகையில் வெளியிட வேண்டும். மேலும், அந்த விவரங்களை பள்ளிகளின் இணையதளங்களிலும் பதிவேற்ற வேண்டும். கல்விக் கட்டணத்தைத் தவிர வேறு கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்றும், பள்ளிகள் இந்த உத்தரவை கட்டாயம் பின் பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் கட்டண விவரங்கள் முறை யாக வெளியிடப்பட்டுள்ளனவா என்பதை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்யவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இளையராஜா பிறந்தநாள்: முதலமைச்சர் விஜய், மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, ஜூன் 2- பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா தனது 83 ஆவது பிறந்தநாளையொட்டி அரசியல் தலை வர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது சமூக வலை தளப் பதிவில், “தமிழ்நாட்டின் பெருமையாக விளங்கும் இளையராஜா, தனது இசையின் மூலம் பல தலை முறைகளுக்கு ஊக்கமாகத் திகழ்ந்து வருகிறார்” என்று குறிப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். ‘அன்னக்கிளி’ முதல் சிம்பொனி வரை அவரது இசைப் பயணம் தொடர்ந்து புதிய சாதனைகளைப் படைக்கட்டும்” என்று தெரிவித்து உள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “இளைய ராஜாவின் இசை காலத்தைக் கடந்தும் வாழும் என்றும், அவர் நீண்ட ஆயுளுடன் இசைப் பணியைத் தொடர்ந்து மேற் கொள்ள வேண்டும்” என்றும் வாழ்த்தியுள்ளார்.

அமைச்சர்களின் சீனியாரிட்டி பட்டியல் வெளியீடு

சென்னை, ஜூன் 2- தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையி லான அமைச்சரவையின் அமைச்சர்களுக்கான சீனியாரிட்டி வரிசைப் பட்டியல் மற்றும் துறைகள் ஒதுக்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் முதலமைச்சர் ஜோசப் விஜய் முதலி டத்தில் இடம்பெற்றுள்ளார். பொது நிர்வாகம், உள்துறை, காவல்துறை, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற குடிநீர் வழங்கல் உள்ளிட்ட முக்கியத் துறைகள் அவரிடம் ஒதுக்கப் பட்டுள்ளன. அவரைத் தொடர்ந்து என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே.ஏ. செங்கோட்டையன், பி.வெங்கட ரமணன், ஆர். நிர்மல்குமார், ராஜ்மோகன் உள்ளிட்டோர் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 35 அமைச்சர்களின் சீனியாரிட்டி வரிசையும், அவர்களுக்கான துறைப் பொறுப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய்குமார் உத்தரவின் பேரில் இந்தப் பட்டியல் வெளியிடப் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்?

சென்னை: பாஜகவின் அனைத்து பொறுப்புகளி லிருந்தும் அண்ணா மலை விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. இது தொடர்பாக ஐந்து பக்க கடிதம் ஒன்றை அவர் கட்சியின் தேசிய தலைமையிடம் வழங்கி யுள்ளார். எனினும், இந்த தகவல் தொடர்பாக பாஜக தரப்பிலோ அல்லது அண் ணாமலை தரப்பிலோ இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளி யிடப்படவில்லை.

எந்த இடைத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்!

தொல்.திருமாவளவன் திட்டவட்டம் சென்னை: திருச்சி கிழக்கு தொகுதி உள்பட எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிடப் போவ தில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமா வளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அரசியல் நிலவரம் தொடர்பாக தனது முக நூல் நேரலையில் பேசிய அவர், தமக்கு பதவி ஆசை இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சரவை அழைப்பை ஏற்றிருப்பேன் என்றார். சட்டமன்ற உறுப் பினராக இல்லாவிட்டா லும் அமைச்சரவையில் சேரலாம் என அழைப்பு வந்ததாகவும், ஆனால் கட்சியின் கொள்கை முடி வுக்கு மாறாக எந்தப் பதவி யையும் ஏற்க விரும்ப வில்லை என்றும் கூறினார். திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடுவ தாக பரவி வரும் தகவல் களை மறுத்த அவர், எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிடும் வாய்ப்பே இல்லை எனத் தெரிவித் தார். இந்த முடிவை ஏற்கனவே முதலமைச்சர் விஜய்யிடம் தெரிவித்து விட்டதாகவும் கூறினார். மேலும், தமிழகத்தில் அரசியல் நிலையற்ற சூழல் உருவாகி குடிய ரசுத் தலைவர் ஆட்சி வரக் கூடாது என்ற காரணத்தி னாலேயே தமிழக வெற்றிக் கழக அரசுக்கு விசிக ஆத ரவு அளித்ததாகவும், அதற்கு முன் கூட்டணித் தலைவர் மு.க.ஸ்டாலி னின் ஒப்புதலையும் பெற்ற தாகவும் அவர் தெரிவித் தார்.