தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

5 Oct 2026, 11:09 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

‘வெற்றிப் பயணம்’ திட்டத் தடை வழக்கு தள்ளுபடி

சென்னை: அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்கும் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம்தெரிவித்துள்ளது. திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட ‘விடியல் பயணம்’ திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் அக்டோபர் 2ஆம் தேதி முதலமைச்சர் விஜய்யால் தொடங்கி வைக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 12,600-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்க இத்திட்டம் வழிவகுக்கிறது. இதற்கிடையில், இத்திட்டத்தால் தனியார் பேருந்துஉரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி ஈரோட்டைச் சேர்ந்த கலாமணி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வெளியான அறிவிப்பின் அடிப்படையில் திட்டம் தொடங்கப்பட்டதாக அரசுத் தரப்பு வாதிட்டது. இரண்டு வழித்தடங்களில் மட்டுமே பேருந்து இயக்கும் மனுதாரர், மாநிலம் முழுவதும் செயல்படும் திட்டத்தை எதிர்த்து வழக்குத்தொடர முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனுவைத் திரும்பப் பெற அனுமதித்து வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம்: எதிரான வழக்கு தள்ளுபடி

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தைக் கைவிட உத்தரவிடக் கோரிய பொதுநல வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சட்டமன்றக் கூட்டத் தொடரில், விதி 110-இன் கீழ் புதிய தலைமைச் செயலகமும் சட்டமன்ற வளாகமும் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். சுமார் ரூ.1,200 கோடி செலவில் 26 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் அமையவுள்ள இத்திட்டத்திற்கு மீனவர்களும் அரசியல் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இதற்கிடையே, திட்டத்தைக் கைவிடக் கோரி வழக்கறிஞர்ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு வழக்கை விசாரித்தது. அரசுப் பணம் வீணடிக்கப்படுவதாகக் கூறி புதிய தலைமைச் செயலகம் கட்டக் கூடாது என உத்தரவிட நீதிமன்றத்துக்கு எந்தச் சட்டத்தில் அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்றும், எந்த ஆய்வும் செய்யாமல் விளம்பரத்துக்காக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர்கள், மனுதாரரின் விருப்பத்தின் பேரில் வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

பதக்கம் வென்றோருக்கு முதல்வர் விருந்து

சென்னை: ஜப்பானில் நடைபெற்ற 20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்குச் சென்னை நேரு உள்விளையாட்டுஅரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பதக்கம் வென்றவர்களுக்கு முதலமைச்சருடன் விருந்து ஏற்பாடு செய்யப்படும் என்றார். விளையாட்டு விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களும் இதில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், தமிழகத்தில் குறைந்தது நான்கு ஆண்டுகளுக்குள் அனைத்து விளையாட்டு நகரங்களும் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். எட்டு வயது முதல் ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் வரை தமிழ்நாடு அரசு வீரர்களுக்குத் துணை நிற்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடன் உயர்வு

சென்னை: கூட்டுறவு சங்கங்களில் ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை நகைக் கடன் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நகையின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் வரை கடன் கிடைக்கும். இது புதிய கடன்களுக்கும், புதுப்பிக்கப்படும் பழைய கடன்களுக்கும் பொருந்தும்.

வழக்கு தொடர திமுகவுக்கு அனுமதி

சென்னை: திமுக மற்றும் அதன் நிர்வாகிகள் குறித்து அவதூறு பரப்பியதாகக் கூறி, தவெக அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் மற்றும் தவெக ஐ.டி. பிரிவு மீது ரூ.1.1 கோடி நஷ்டஈடு கோரி வழக்கு தொடர திமுகவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. “ஜெம் வீரமணி வழக்கு” தொடர்பான கருத்துகளும் இதில் அடங்கும்.

வள்ளலார் பிறந்த நாள்: முதலமைச்சர் புகழாரம்

சென்னை, அக். 5 –திருவருட்பிரகாச வள்ளலாரின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவரது உயரிய சிந்தனைகளை நினைவுகூர்ந்து போற்றியுள்ளார். அருட்பெருஞ்ஜோதியாய், தனிப்பெருங்கருணையாய்த் திகழ்ந்த வள்ளலார் பிறந்த இந்நன்னாளில் அவரது உயரிய

சிந்தனைகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்குவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பசித்த உயிர்க்கு உணவளிப்பதே இறைப்பணி என்பதும், சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து

அனைத்து உயிர்களையும் தம்முயிர்போல் நேசிப்பதே சன்மார்க்கம் என்பதும் வள்ளலாரின் கொள்கைகள் என்றார். ஜீவகாருண்யமே வாழ்வியல் நெறி என்ற வள்ளலாரின்

கொள்கைகள் மனிதநேயத்தின் மாபெரும் விழுமியங்களாகத் திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: வெளி மாநிலத்தவருக்குப் பொருந்தாது

சென்னை, அக். 5 –தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் பிற மாநிலத்தில் வசிப்பவர்களுக்குப் பொருந்தாது என்று பொது சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி, கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துள்ளார். இரண்டாவதுபிரசவத்துக்காகக் காரைக்குடியில் தங்கி அரசு தலைமை மருத்துவமனையில் ஆண் குழந்தை பெற்றெடுத்த அவருக்கு இத்திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்க டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால், அவரது ஆதார் அட்டையில் முகவரி மைசூர் என இருந்ததால் கணினியில் பதிவு செய்ய முடியவில்லை. இதுகுறித்து விளக்கமளித்த பொது சுகாதாரத் துறை, ஆவணங்களின்படி அவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது என்று தெளிவுபடுத்தியுள்ளது.

வள்ளலார் பிறந்த நாள்: முதலமைச்சர் புகழாரம்

சென்னை, அக். 5 –திருவருட்பிரகாச வள்ளலாரின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் அவரது உயரிய சிந்தனைகளை நினைவுகூர்ந்து போற்றியுள்ளார். அருட்பெருஞ்ஜோதியாய், தனிப்பெருங்கருணையாய்த் திகழ்ந்த வள்ளலார் பிறந்த இந்நன்னாளில் அவரது உயரிய சிந்தனைகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்குவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பசித்த உயிர்க்கு உணவளிப்பதேஇறைப்பணி என்பதும், சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து அனைத்து உயிர்களையும் தம்முயிர்போல் நேசிப்பதே சன்மார்க்கம் என்பதும் வள்ளலாரின் கொள்கைகள்என்றார்.

ஜீவகாருண்யமே வாழ்வியல் நெறி என்ற வள்ளலாரின் கொள்கைகள் மனிதநேயத்தின் மாபெரும் விழுமியங்களாகத் திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: வெளி மாநிலத்தவருக்குப் பொருந்தாது

சென்னை, அக். 5 –தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் பிற மாநிலத்தில் வசிப்பவர்களுக்குப் பொருந்தாது என்றுபொது சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி, கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துள்ளார். இரண்டாவது பிரசவத்துக்காகக் காரைக்குடியில் தங்கி அரசு தலைமை மருத்துவமனையில் ஆண் குழந்தை பெற்றெடுத்த அவருக்கு இத்திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்க டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால், அவரது ஆதார் அட்டையில் முகவரி மைசூர் என இருந்ததால் கணினியில் பதிவு செய்ய முடியவில்லை. இதுகுறித்து விளக்கமளித்த பொது சுகாதாரத் துறை, ஆவணங்களின்படி அவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது என்று தெளிவுபடுத்தியுள்ளது.

அக்.11 பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை

சென்னை, அக்.5 -பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11 ஆம் தேதி தமிழகம் வரு

கிறார். காலை 10.55 மணிக்குச் சென்னை வரும் அவர், விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பூந்தமல்லி செல்கிறார். நண்பகல் 12.25 மணிக்குச் சென்னை ஐஐடி வளாகத்தில் மூளை அறிவியல் மையத்தைப் பார்வையிடும் அவர், 10 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நிறுவனர்களுடன் கலந்துரையாடுகிறார்.

இடைத்தேர்தல் இன்று பொது விடுமுறை

சென்னை, அக்.5 -மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்) மற்றும் தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்) சட்டப்பேரவை இடைத்தேர்தலை யொட்டி, அந்தத் தொகுதிகளில் அக்டோபர் 6 அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும். இத்தொகுதிகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும். வாக்குச்சாவடிகளாகச் செயல்படும் அரசுப் பள்ளிகளுக்கு அக்.5 மற்றும் 6 ஆகிய இரு நாட்களும், தனியார் பள்ளிகளுக்கு அக்.6 அன்று மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.