தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

26 Sept 2026, 11:04 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: முதலமைச்சர் மின் வாரியத் தலைமையகத்திற்குச் சென்று ஆய்வு செய்யாமல் ரீல்ஸ் எடுத்துவிட்டு வந்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்விமர்சித்துள்ளார். அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று எஸ்பிஐ கிளைகள் இயங்கும் என அறிவிப்பு

சென்னை: பொதுத் துறை வங்கி ஊழியர்கள் செப். 28 முதல் 30 வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதால், அதற்கு முன்னதாக செப்.27 (ஞாயிறு) அன்று எஸ்பிஐ வங்கிக் கிளைகள் செயல்படும் என நிதியமைச்சகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இதை உறுதிப்படுத்தி, அன்றைய தினம் தமது கிளைகள் வழக்கம்போல் இயங்கும் என்று வங்கியும் வாடிக்கையாளர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.

நிபந்தனை முன்ஜாமீன்

சென்னை: திரைப்படத்திற்காகப் பெற்ற முன்பணத்தைத் திருப்பிக் கொடுக்காதது தொடர்பான வழக்கில், நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கிசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிராக அதிமுக புகார்

சென்னை: மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னத்தையும் தவெகவின் ‘விசில்’ சின்னத்தையும் இணைத்துப் பேசி வாக்காளர்களைக் குழப்பியதாகத் தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தவெக மீது விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பவும், கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவும் கோரப்பட்டுள்ளது.

தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

சென்னை: ஜெம் வீரமணி வழக்கை நான்கு முறை மூடி மறைக்கத் தவெக அரசு முயன்றதாகவும், நீதிபதியின் அதிரடி உத்தரவால் மட்டுமே அவர் கைது செய்யப்பட்டதாகவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் விதிமீறல்கள் குறித்துத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் புகார் மனுவும் அளிக்கப்பட்டது.

நவீனமாகும் சென்ட்ரல் ரயில் நிலையம்

சென்னை: ஆண்டுக்கு 3 கோடிக்கும் அதிகமான பயணிகளைக் கையாளும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை நவீன வசதிகளுடன் மறுசீரமைக்கத் தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது. பயணிகள் வழிமுறைகளைப் பிரிப்பது, பார்க்கிங் வசதிகளை மேம்படுத்துவது மற்றும் மெட்ரோ இணைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய ஆலோசகர்களை நியமிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சென்னை: இந்த ஆண்டு பருவமழை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். கூவம் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் தூர்வாரும் பணிகள் ரூ.42 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன; அவற்றை அக்.10-க்குள் முடிக்கத் திட்டமிட்டிருப்பதாக கூறினார்.

ஆன்லைனில் படப்பிடிப்பு அனுமதி

சென்னை: திரைப்படப் படப்பிடிப்புக்கான அனுமதி நடைமுறைகளை நவீனமயமாக்கி, தானியங்கி முறையில் ஆன்லைனில் வழங்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

வழக்கு ரத்து

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் கொரோனா தடுப்பூசி குறித்து, 2021-இல் நடிகர் விவேக் மறைவின் போது கருத்து தெரிவித்ததற்காக பதிவான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: போக்சோ வழக்கில் கைதான ஜெம் வீரமணி விவகாரத்தில், முதலமைச்சர் விஜய் தவறான தகவல் அளித்ததாகவும், அதற்கு தவெக அரசு உடந்தையாக இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இளைஞர் போக்சோவில் கைது

சென்னை: தாம்பரம் அருகே அரசுப் பள்ளி மாணவியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய முத்துசாமி (22) என்ப

வரைக் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துஉள்ளனர். இன்ஸ்டாகிராம் மூலம் 17 வயது சிறுமியுடன் தொடர்பு கொண்டு அவரை ஏமாற்றி இந்தச் செயலில் ஈடுபட்டதாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.