தீக்கதிர் முக்கிய செய்திகள்
21 May 2026, 11:13 pm

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு கனிமொழி எம்.பி. கண்டனம்

சென்னை, மே 21 - அமைச்சரவை பதவியேற்பு விழாவில், இரண்டாவது முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடுமையாக கண்டித்துள்ளார். திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.யும், “சென்ற முறை இனி நடக்காது என உறுதி அளித்த தவெக அரசு, தற்போது கண்டும் காணாமல் அமைதி காப்பது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்க வேண்டாம்! முதல்வருக்கு வைகோ வேண்டுகோள்

சென்னை, மே 21 - ஒன்றிய பாஜக அரசின் பி.எம்.ஸ்ரீ. திட்டம் மூலம் மும்மொழிக் கொள்கையும் இந்தித் திணிப்பும் தமிழ்நாட்டில் புகுத்தப்படும் என்பதால், விஜய் தலைமையிலான தவெக அரசு அத்திட்டத்தை ஒருபோதும் ஏற்கக் கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். பி.எம்.ஸ்ரீ. திட்டத்தை ஏற்க மாட்டோம் என்று அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது என்றும், இளைஞர்கள் இரத்தம் சிந்தி இந்தி எதிர்ப்புப் போரினால் கிடைத்த பலனை காத்திட வேண்டும் என்று வைகோ தன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

அதிமுகவிலிருந்து விலகி விட்டேன் தனபால் அறிவிப்பு

சென்னை, மே 21 - அதிமுக ஆட்சியின் போது, 2012 முதல் 2021 வரை இரண்டு முறை சட்டமன்றத் தலைவராக இருந்த ப. தனபால், தேர்தலில் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாலும் கட்சி புறக்கணித்த தாலும் மனம் நொந்து அதிமுக-விலிருந்து விலகி விட்டதாக தெரிவித்துள்ளார். தமது மகனும், ராசிபுரம் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினருமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் அமைச்சராக பதவியேற்றதையொட்டி, ப. தனபால் ஆளுநர் மாளிகைக்கு வந்திருந்தார். அப்போது, அதிமுக-விலிருந்து விலகி விட்டதாக அவர் தெரிவித்தார். “என்னைப் போன்றவர்களை புறக்கணித்ததால் தேர்தலில் அதிமுகவை மக்கள் புறக்கணித்துள்ளனர்” என்றும் அவர் கூறினார்.

மின்வாரியத்தில் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

சென்னை, மே 21 - தமிழ்நாடு பசுமை எரி சக்திக் கழகத்தில் வெளிப் படைத் தன்மையின்றி அவசர கதியில் ஒப்புதல்கள் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், எரி சக்தி அமைச்சர் நிர்மல்குமார் நடத்திய ஆய்வுகளில் முறை கேடுகள் கண்டுபிடிக்கப்பட் டன. இதையடுத்து தலை மை நிதிக்கட்டுப்பாட்டு அலு வலர் வி. காசி மற்றும் தலை மைப் பொறியாளர் சந்திர சேகரன் ஆகிய இருவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஓய்வுபெற்ற இயக்குநர் எஸ். மங்களநாதனின் ஓய்வூதியப் பலன்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பொன்ராஜ் முன்ஜாமீன் மனு தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை, மே 21 - தவெக பெண் தொண்டர்களை இழிவாகப் பேசியதாக- அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான விஜய் அளித்த புகாரில் பதி வான வழக்கில், அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர். சக்திவேல், “மனுதாரர் என்ன தலை மறைவாகி விட போகிறாரா?” என கேள்வி எழுப்பினார். காவல்துறை தரப்பு பொன்ராஜ் தன் பேச்சுக்கு வருத்தம் தெரி விக்க வேண்டும் என வலியுறுத்தியது.

14 நாள் வட தமிழகத்தை வெயில் சுட்டெரிக்கும்!

சென்னை, மே 21 - கோடையின் உச்சபட்ச வெப்பக் காலம் (அக்னி நட்சத்திரம்) முடிவடைந்த நிலையிலும் தமிழகத்தில் கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிர மடைந்து வருகிறது. சென்னை மீனம்பாக்கத்தில் மே 20 அன்று 42 டிகிரி செல்சி யஸ் வெப்பநிலை பதி வானது. இந்நிலையில், வட தமிழக மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அடுத்த 14 நாட்களுக்கும் வழக்கத்தை விட மிகவும் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வெப்பநிலை 39 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாக வும், சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 41 டிகிரி வரையும், வேலூர் மற்றும் திருத்தணியில் 42 டிகிரி வரையும் உயர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீர்நிலைகளில் வண்டல் மண் இலவசமாக எடுக்க அனுமதி!

சென்னை, மே 21 - தமிழகத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்துள்ள வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துச்செல்ல விவசாயிகள், மட்பாண்டம் தயாரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதன்கிழமை (மே 20) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சுமார் 40 ஆயிரம் ஏரிகளும் குளங்களும் நீர்வளத் துறை மற்றும் ஊராட்சித் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக இந்த நீர்நிலைகளைத் தூர் வாரும் நோக்கத்தில் வண்டல் மண் எடுக்க சிறப்பு அரசாணை வழங்கப்படுவது வழக்கமான நடைமுறையாகும். திமுக, அதிமுக ஆட்சிகளிலும் இந்த அனுமதி வழக்கத்தில் இருந்தது. விஜய் தலைமையிலான தவெக அரசும் இந்த நடைமுறையைத் தொடர்கிறது. அனுமதிக்கப்பட்ட அளவு வண்டல் மண்ணை எடுத்துச் செல்ல விரும்புவோர் tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் வட்டாட்சியர்களால் அனுமதி வழங்கப்படும். இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் என். ஆனந்த், வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் தலைமைச் செயலாளர் மு. சாய்குமார் உட்பட பல உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அரசு மருத்துவமனைகளில் தூய்மை முக்கியம்!

சென்னை, மே 21 - அரசு மருத்துவமனைகள் மற்றும் பொது சுகாதார மையங்களில் தூய்மையை உறுதிப்படுத்துமாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வா ழ்வுத் துறை தனது முதல்வர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு விரிவான அறிவுறுத்தல்களை வழங்கி யுள்ளது. சிகிச்சை வார்டுகளில் படுக்கை கள் சீராக அமைப்பது, விரிப்பு களும் தலையணை கவர்களும் சுழற்சி முறையில் கிருமி நீக்கம் செய்வது, கழிவறைகளை முறையாக தூய்மைப்படுத்துவது, திடக்கழிவுகளை தினசரி அகற்று வது, நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சுகாதாரமான முறையில் உணவு வழங்குவது ஆகியவை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன. மருத்துவப் பணியாளர்கள் நோயாளிகளை கண்ணியமாக நடத்துவதும் லஞ்சம் பெறுவதை தவிர்ப்பதும் கடுமையாக வலியுறு த்தப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையை புதன்கிழமை (மே 20) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.