தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

16 Jul 2026, 9:19 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை நீட்டிப்பு இன்றும் வெப்ப அலை வீசும்!

சென்னை, ஜூலை 16 - தமிழகத்தில், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிரு ஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர் திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஜூலை 16) வெப்ப அலை வீசியது. இந்நிலையில், வெள்ளிக்கிழமையும் (ஜூலை 17) விருதுநகர், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் வெப்ப அலை வீசக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள் உள்ளிட்ட பெரும்பா லான இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதி களில், இயல்பான வெப்பநிலையை விட 4 டிகிரி செல்சி யஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்கக் கூடும் என்றும், இதனால் உடல்நலம் சார்ந்த அசவுகரியம் ஏற்படக் கூடும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங் களில் இன்று மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திமுக எம்.பி.க்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை, ஜூலை 16 - ஜூலை 20 அன்று தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். தற்போது லண்டன் பயணத்தில் உள்ள மு.க.ஸ்டாலின், அங்கிருந்து காணொலி வாயிலாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று, கூட்டத்தொடரில் கட்சியின் நிலைப்பாடு மற்றும் மேற்கொள்ள வேண்டிய நட வடிக்கைகள் குறித்து எம்.பி.க்களுக்கு அறிவுரை வழங்கி யதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவோதயா பள்ளிகள் விவகாரம்: தமிழக அரசு விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூலை 16 - ஒன்றிய அரசின் திட்டங்கள் என்ற ஒரே காரணத் திற்காக அவற்றை நிராகரிக்கக் கூடாது எனவும், நவோத யா பள்ளிகளைத் தமிழகம் மட்டும் ஏன் புறக்கணிக்கிறது எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ கத்தில் நவோதயா பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக மூன்று வார காலத்திற்குள் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். விசாரணையின்போது நீதிபதி நாகரத்னா, தமிழக அரசுக்குப் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். மாநிலத்திற்கெனத் தனிக் கல்வி முறை இருக்கலாம்; எனினும், ஒன்றிய அரசுப் பள்ளிகளைத் தடுக்கக் கூடாது; என்றும், அவை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நிராகரிக்கும் மனப்பான்மை வேண்டாம் என்றும் குறிப்பிட்டார். 9-ஆம் வகுப்பில் மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, 6-ஆம் வகுப்பிலேயே அதைத் தொடங்கலாம் எனவும், பொதுத் தேர்வு ஆண்டான 10ஆம் வகுப்புக்கு முந்தைய 9-ஆம் வகுப்பில் புதிய மொழி அறிமுகம் நிறுத்த ப்பட வேண்டும் எனவும் நீதிபதி பி.வி. நாகரத்னா கூறினார்.

தேர்தல் வழக்குகளுக்குத் தனி அமர்வை ஏற்படுத்த கோரிக்கை!

சென்னை, ஜூலை 16- 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான 54 தேர்தல் மனுக்களை விரைந்து முடிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும்; குறிப்பாக, தனி அமர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுநல மனுதாரர் கே. வெங்கடாசலபதி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ‘இது தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும்’ எனக் கூறி, மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. எனினும், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுகலாம் என்றும் மனுதாரருக்கு அனுமதி அளித்தது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு : வீடு தேடி வரும் 33 கேள்விகள்

சென்னை, ஜூலை 16 - தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் 30 வரை முதற்கட்ட மக்கள் தொகைக் கணக் கெடுப்புப் பணிகள் நடை பெற உள்ளன. இதில் வீடு கள், குடும்பங்கள் மற்றும் வீடுகளில் உள்ள அடிப்ப டை வசதிகள் குறித்து விரி வாகப் பதிவு செய்யப்படும். இதற்கான 33 கேள்வி களை உள்ளடக்கிய அதி காரப்பூர்வ கேள்விப் பட்டிய லை, அரசின் முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர் பெயரில் தமிழ்நாடு அரசு சிறப்பு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இந்த முதற்கட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகளுக்குப் பொது மக்கள் முறையான ஒத்து ழைப்பு வழங்கி, துல்லிய மான விவரங்களைத் தந்து பதிவு செய்யுமாறு அர சுத் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கலர் அப்பளம் விற்பனைக்குத் தடை!

சென்னை, ஜூலை 16 - தமிழ்நாட்டில் கலர் அப்பளம் விற்பனைக்குத் தடை விதித்து உணவுப் பாது காப்புத் துறை உத்தர விட்டுள்ளது. செயற்கை நிறமூட்டிகள் கலந்து தயாரிக்கப்படும் கலர் அப்பளம், உயிருக்கு ஆபத்தானது என்றும், அதை உண்ணும் குழந்தை களுக்கு அலர்ஜி, சிறுநீரகக் கோளாறு, புற்றுநோய் ஏற்படக்கூடும் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது. உளுந்து, அரிசி போன்றவற்றால் இயற்கை முறையில் தயாரி க்கப்படும் அப்பளத்தையே உணவுக்குப் பயன்படுத்து மாறும் பொதுமக்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பாராசிட்டமால் : சுகாதாரத் துறை விளக்கம்

சென்னை, ஜூலை 16- குழந்தைகளுக்கான பாராசிட்டமால் மருந்து களில் ஆல்கஹால் சரியான விகிதத்திலேயே பயன்படுத்தப்படுவதாகத் தமிழக சுகாதாரத் துறை தெளிவுபடுத்தியுள்ளது. 60 மி.லி. பாராசிட்டமால் மருந்தில் 10 சதவிகிதம் அளவு, அதாவது 6 மி.லி. மட்டுமே ஆல்கஹால் கலக்கப்படுவதாகவும், 95 சதவிகிதம் ஆல்கஹால் என்பது ஆல்கஹாலின் தூய்மைத் தன்மையைக் குறிக்கும் தொழில்நுட்பச் சொல்லே தவிர மருந்தில் அவ்வளவு அளவு கலந்திருப்பதைக் குறிக்காது எனவும் துறை விளக்கமளித்துள்ளது.

ஆலோசகர்களை நியமிக்க தமிழக அரசு டெண்டர்!

சென்னை, ஜூலை 16 - தமிழ்நாட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறு வனங்களின் எதிர்கால வளர்ச்சிக்கான நீண்டகால செயல் திட்டத்தை உரு வாக்க தமிழக அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது. இதன் அடிப்படையில், தொழில்துறை ஆலோ சகரை நியமிப்பதற்கான டெண்டரை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.