தீக்கதிர் முக்கிய செய்திகள்
7 May 2026, 10:10 pm

ஆளுநருடன் தலைமைச் செயலர் சந்திப்பு

சென்னை, மே 7 - கிண்டியில் உள்ள மக்கள் இல்லத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் சட்டம்-ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் ஆளுநர் அர்லேகரை சந்தித்தனர். தமிழ்நாட்டின் தற்போதைய சட்டம் - ஒழுங்கு சூழல் குறித்து டிஜிபி விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது. அவரிடம், எந்த அடிப்படையில் விஜய்க்கு கான்வாய் வழங்கப்பட்டது என்ற கேள்வியை ஆளுநர் எழுப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு கல்லூரிகளில் சேர ஆன்-லைன் விண்ணப்பம் துவங்கியது

சென்னை, மே 7 - தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், இளநிலைப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு மே 7 முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். tngasa.in என்ற இணையதளம் வழியாக மே 29 வரை விண்ணப்பிக்கலாம். 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,26,959 சேர்க்கை இடங்கள் உள்ளன. விண்ணப்பிப்பதில் சிரமம் உள்ள மாணவர்கள் தங்கள் அருகிலுள்ள அரசு கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களை நாடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தவெகவுக்கு ஆதரவு இல்லை: ஐயுஎம்எல் திட்டவட்டம்

சென்னை, மே 7 - ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை திரட்டும் முயற்சியில் தவெக தொடர்ந்து பல்வேறு கட்சிகளை அணுகி வரும் நிலையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியிடமும் ஆதரவு கோரி தவெக தரப்பினர் நேரில் சந்தித்தனர். தவெகவின் அருண்ராஜ், ஐயுஎம்எல் தேசியத் தலைவர் காதர் மொய்தீனை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். ஆனால், தங்கள் கட்சி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருப்பதால் தவெகவுக்கு ஆதரவு அளிக்க இயலாது என்று காதர் மொய்தீன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.