தீக்கதிர் விரைவு செய்திகள்
16 May 2026, 10:37 pm

200 யூனிட் இலவச மின்சாரம் மே 10 முதல் அமலுக்கு வந்தது!

சென்னை, மே 16- தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலை யில், த.வெ.க. அரசின் தேர் தல் வாக்குறுதியான 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம், மே 10 முதல் அம லுக்கு வந்துள்ளது. புதிய அர சாணைப்படி இரு மாதங்க ளுக்கான மின் பயன்பாடு 500 யூனிட்டுக்குள் இருந்தால் 200 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். 500 யூனிட்டுக்கும் அதிகமாக பயன்படுத்துவோருக்கு முந்தைய 100 யூனிட் இல வச சலுகை தொடர்ந்து வழங் கப்படும்.

மே 20-இல் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

சென்னை, மே 16 - தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11 அன்று தொடங்கி முடிவடைந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10 முதல் 20 வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற் பட்ட முகாம்களில் சுமார் 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் கள் இப்பணியில் ஈடுபட்ட னர். இந்நிலையில், மதிப் பெண் பதிவேற்றம் உள்பட அனைத்து பணிகளும் ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில், மே 20 அன்று காலை 9:30 மணிக்கு தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ மாக வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கியது!

புதுதில்லி, மே 16 - இந்தாண்டுக்கான தென்மேற்குப் பருவ மழை முன்னதாகவே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி, தெற்கு வங்கக்கடலின் சில பகுதி கள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் சனிக்கிழ மையன்று (மே 16)தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. இது மே 26-ஆம் தேதிவாக் கில் கேரள நிலப்பரப்பில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் இந்தாண்டு வழக்கத்தைவிட 6 நாட்களுக்கு முன்பாகவே சனிக்கிழமையன்று தென் மேற்குப் பருவமழை தொடங்கி உள்ளது.