தீக்கதிர் முக்கிய செய்திகள்
27 Oct 2026, 9:53 pm

தமிழ்நாடு இ-சேவை 2.0 திட்டம் விரைவில் அறிமுகம்

சென்னை: 200-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை விரைவாகவும் எளிதாகவும் வழங்கும் “வெற்றி தமிழ்நாடு

இ-சேவை 2.0” திட்டத்துக்கான டெண்டரைத் தமிழக அரசு

வெளியிட்டுள்ளது. தகுதியான நிறுவனங்கள் நவம்பர் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். புதிய தளம் செல்போனில் பயன்படுத்தும் வகையில் அமையும்; சர்வர் முடக்கப் பிரச்சனை இருக்காது; விண்ணப்ப நிலையை எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்ஆப் மூலம் அறியலாம்; ஆதார் உள்ளிட்ட

தனிப்பட்ட விவரங்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பும் வழங்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கட்டட விதிகளில் திருத்தம்: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள், 2019-இல் பல திருத்தங்களைச் செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கட்டட உயர வரம்பு 18.30 மீட்டரிலிருந்து 19.50 மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் 12 மீட்டர் மற்றும் அதற்கு மேல் அகலமுள்ள சாலைகளை ஒட்டிய தளங்கள் (சென்னைக்கு வெளியே 9 மீட்டர் சாலைகள்) வணிகப்பயன்பாட்டுக்கு உரியவையாகக் கருதப்படும். ஐ.டி. அலுவலகங்களில் ஒவ்வொரு 75 சதுர மீட்டருக்கும் ஒரு கார், ஒவ்வொரு 50 சதுர மீட்டருக்கும் ஓர் இருசக்கர வாகனம் நிறுத்த இடம் அவசியம். ஹோட்டல்களில் ஒவ்வொரு கார் நிறுத்துமிடத்துக்கும் ஒரு படுக்கை வசதியுடன் ஓட்டுநர் தங்குமிடம் அமைக்க வேண்டும். திறந்த சமையலறைக்கு வரையறை சேர்க்கப்பட்டுள்ளதுடன்,மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை, வாஷ் பேசின் அளவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: உதயநிதி விமர்சனம்

சென்னை: தேனி சிறையிலிருந்து சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு, 17 கைதிகள் தப்பியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்தெரிவித்துள்ளார். புழல் சிறையில் ஆய்வு செய்த முதல்வர், அதன் அடிப்படையில் எடுத்த நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பிய அவர், தப்பிய அனைவரையும் உடனடியாகப் பிடிக்கவும், அனைத்துச் சிறைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்தவும் வலியுறுத்தினார்.

அயோடின் இல்லா உப்புக்குத் தடை!அமைச்சர் எச்சரிக்கை

சென்னை: உணவுப் பயன்பாட்டுக்கு அயோடின் கலக்காத உப்பு விற்றால் உணவு பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். உலக அயோடின் குறைபாடு தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அவர், கர்ப்ப காலத்தில் அயோடின் பற்றாக்குறை கருச்சிதைவு, குழந்தையின் மூளை வளர்ச்சிப் பாதிப்பு ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் என்றார். விழுப்புரம், தஞ்சாவூர், மதுரை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறைபாடு அதிகம் உள்ளது. இரு வகை உப்புக்கும் விலை வித்தியாசம் ரூ.5 முதல் ரூ.10 மட்டுமே.

நவ.1-இல் குரூப் 2, 2ஏ தேர்வு

சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2, 2ஏ முதல்கட்டத் தேர்வு திட்டமிட்டபடி நவம்பர் 1 ஆம் தேதி காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். 846 காலிப் பணியிடங்களுக்கு (குரூப் 2-இல் 43, குரூப் 2ஏ-வில் 803) 4.89 லட்சம் பட்டதாரிகள் போட்டியிடுகின்றனர். சென்னையில் மட்டும் 51,721 பேர் எழுதுகின்றனர்.

போராடும் உரிமையைத் தடுக்கும் நோக்கமில்லை: அமைச்சர்

சென்னை: அரசு ஊழியர்கள் அரசின் கொள்கைகளை விமர்சிக்கக் கூடாது என்றே சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் போன்ற நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் உரிமையைத் தடுக்கும் நோக்கம் இல்லை என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெளிவுபடுத்தினார். மருத்துவச் சங்கங்கள் சுதந்திரமாகச் செயல்படலாம் என்றும் அவர் கூறினார்.