தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

1 Jul 2026, 10:21 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

மருத்துவர்கள் தினம்: முதலமைச்சர் வாழ்த்து

சென்னை, ஜூலை 1 - தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணி யில் இரவு - பகல் பாராது அயராது பணியாற்றும் அனைத்து மருத்துவர்களு க்கும் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்ப தாகவும், மருத்துவர்களின் தன்னலமற்ற சேவை, அர்ப்ப ணிப்பு மற்றும் மனிதநேயம் என்றும் போற்றத்தக்கது எனவும் முதல்வர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மருத்துவ சிகிச்சை பெறுபவர்களின் முகத்தில் புன்னகையையும், அவர்கள் குடும்பத்தில் நம்பிக்கை யையும் விதைக்கும் மருத்து வர்கள், மகிழ்ச்சியும் மன நிறைவும் பெற்று, தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றிட வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!

சென்னை, ஜூலை 1 - பசிபிக் பெருங்கடலில் நிலவும் வலுவான ‘எல் நினோ’ நிகழ்வுகள் காரண மாக, இந்தியப் பகுதிகளில் பருவமழைக் காற்று பல வீனமடைந்து, வறண்ட நிலப்பரப்பும் வெப்பமும் அதிகரித்து வருவதால், தமி ழகத்தில் இம்மாதம் வெப்ப நிலை இயல்பைவிட அதிக மாகப் பதிவாகும் வாய்ப்பு ள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உள் மாவட்ட ங்களில் பகல் நேர வெப்ப நிலை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும், கட லோர மாவட்டங்களில் வெப்பநிலை ஓரளவு குறை வாக இருக்க வாய்ப்புள்ள தாகவும் அதிகாரிகள் தெரி வித்தனர்.

‘வழக்குகளில் தப்பிக்கவே வெளியேறுகின்றனர்!

சென்னை, ஜூலை 1 - அதிமுகவில் இருந்து விலகுபவர்களின் பின்னணி யில், வழக்கு பயம் மட்டுமே உள்ளதாகவும், சுயநலத்துக் காகவும், சொத்துக்குவிப்பு வழக்குகள் நெருக்கடி தரு வதாலுமே அதிமுகவை விட்டு வெளியேறுகின்றனர் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள் ளார். முன்னாள் அமைச்சர் கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். பாஸ்கர், எம்.எஸ் ஆனந்தன் உள்ளிட்டோர் தவெகவுக்குச் செல்லும் நிலையில் பொள்ளாச்சி ஜெயராமன் இது தொடர் பாக வீடியோ ஒன்றை வெளி யிட்டுள்ளார்.

அமோனியா கசிவு விபத்து: பலி 17 ஆனது!

திருவள்ளூர், ஜூலை1 - திருவள்ளூரில் இறால் பதப்படுத்தும் தொழிற் சாலையில் ஏற்பட்ட அமோ னியா வாயுக் கசிவால் உயி ரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. அமோனியா வாயு கசி வால் பாதிக்கப்பட்ட அஞ்ச னா ஜூவாங்கா என்பவர் ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பல னின்றி புதனன்று அவர் உயி ரிழந்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.