தீக்கதிர் விரைவு செய்திகள்
4 Nov 2026, 11:08 pm

பட்டாசு வெடிக்க 2 மணி நேரமே அனுமதி!

சென்னை, நவ. 4 –தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல்8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பசுமைப்பட்டாசுகளை மட்டுமேபயன்படுத்தவேண்டும் என் றும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளுக்கு அருகில் சரவெடிகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற கிளை நிறுவ பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை, நவ. 4 –உச்சநீதிமன்றத்தின் கிளையைச் சென்னையில் அமைக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கோரிக்கை 1980-ஆம் ஆண்டு முதலே முன்வைக்கப்பட்டு வருவதாகவும், தென்னிந்தியா வைச் சேர்ந்த வழக்காடிகள் நீதி பெறுவதற்காகத் தில்லி வரை செல்ல வேண்டி யிருப்பதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப் பிட்டுள்ளார்.

மின் கொள்முதல்: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை, நவ. 4 –கேரளம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.12.50, ரூ.14.50-க்கு வாங்கும்போது, தமிழகம் 2,100 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.41.50-க்கு வாங்கத் திட்டமிடுவது ஏன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதில்நடைபெற்றுள்ள முறைகேடு கள் குறித்து சுதந்திரமான, வெளிப்படையான ஆணையம் விசாரணை நடத்தவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆவின், டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு!

சென்னை, நவ. 4 –ஆவின் மற்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 8.33 சதவீத போனஸ், 11.67 சதவீத கருணைத் தொகை என மொத்தம் 20 சதவீத தீபாவளிபோனஸ் வழங்கப்படும் என்றுஅரசு அறிவித்துள் ளது. இதன்படி, அதிகபட்ச மாக ரூ.16,000 வரை வழங்கப்படும். டாஸ்மாக் ஊழியர்க்கான போனஸ் நிதி மாவட்ட மேலாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் ஊழியர்களில் 16 பேருக்கு போனஸ் வழங்கிப் பால்வளத்துறை அமைச்சர் சி. விஜயலட்சுமி தொடங்கிவைத்தார்.

தேனி, திண்டுக்கல், மதுரைக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

சென்னை, நவ. 4 –தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் 0.9 கி.மீ. உயரத்திலும், லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் 3.1 கி.மீ. உயரம் வரையிலும் வளி மண்டலச் சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, வியாழக்கிழ மையன்று தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் இதர தென் தமிழகப் பகுதிகளில் மிதமான மழையும், வட தமிழகப் பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6-ஆம் தேதியும் தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம்,புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னைவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை உயர்வு!

சென்னை, நவ. 4 –தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 75,032-லிருந்து 75,088 ஆகஉயர்ந்துள்ளது. மறுசீரமை ப்பின் மூலம் 56 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப் பட்டுள்ளதாகத் தேர்தல்ஆணையம் தெரிவித்துள்ளது.

சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்

தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 1.1.2027-ஐத் தகுதியேற்படு த்தும் நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் 15.10.2026முதல் 4.1.2027 வரை நடைபெறுவதாகவும், இதன்ஒரு பகுதியாக வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப் பட்டு, புதிய பிரிவுகள் உருவாக்கப்பட்டிருப்பதாக வும் தெரிவித்துள்ளார்.