தீக்கதிர் முக்கிய செய்திகள்
30 Oct 2026, 10:38 pm

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தீபாவளி சிறப்பு மளிகைத் தொகுப்பு ரூ.200-க்கு விற்பனை தொடக்கம்

சென்னை: தீபாவளியை முன்னிட்டு, கூட்டுறவுத் துறை சார்பில் 10 அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கியசிறப்புத் தொகுப்பு ரூ.200 விலையில் வெள்ளிக்கிழமை முதல் விற்பனைக்கு வந்தது. கூட்டுறவுத் துறை அமைச்சர்காந்திராஜ் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

மாநகராட்சிகள் அல்லாத பகுதிகளில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலைகள், தொடக்க கூட்டுறவுப் பண்டக சாலைகள், கூட்டுறவு விற்பனை சங்கங்களின் 128 விற்பனை நிலையங்களில் இத்தொகுப்பு கிடைக்கும். 1.450 கிலோ எடையுள்ள இத்தொகுப்பில் கடலைப்பருப்பு,பாசிப்பருப்பு, புளி தலா 250 கிராம், தனியா, பூண்டு தலா 150 கிராம், மிளகாய், கடுகு, உடைத்த உளுத்தம்பருப்பு தலா 100 கிராம், சீரகம், சோம்பு தலா 50 கிராம் இடம்பெற்றுள்ளன. அனைத்தும் சூழலுக்கு உகந்த பசுமைப் பையில் வழங்கப்படும். இந்தப் பொருட்கள் தனித்தனியாக விற்கப்பட மாட்டாது என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் காலி பாட்டில் வைப்புத் தொகையில் மாற்றம்

சென்னை: டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்குத் தனியாக வசூலிக்கப்பட்டு வந்த ரூ. 10 திரும்பப் பெறும் கட்டணம், நவம்பர் 1 முதல் பாட்டிலின் அச்சிடப்பட்ட விலையிலேயே ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணம்’ என்ற பெயரில் சேர்க்கப்படும். அச்சிடப்பட்ட விலையை விடக் கூடுதலாகப் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காலி பாட்டிலைத் திருப்பித் தரும்போது ரூ. 10 வழங்கும் நடைமுறை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை-பெங்களூரு அதிவிரைவுச் சாலை: புதிய டெண்டர்

சென்னை: சென்னை - பெங்களூரு அதிவிரைவுச் சாலைத் திட்டத்தில் தமிழக எல்லைக்குள் எஞ்சியுள்ள 14 கி.மீ. பணிக்கு ரூ. 614 கோடியில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் புதிய டெண்டர் கோரியுள்ளது. 263 கி.மீ. நீள

முள்ள இச்சாலை பயன்பாட்டுக்கு வரும்போது இரு நகரங்களுக்கு

இடையிலான பயண நேரம் 3 மணி நேரமாகக் குறையும். ஒப்பந்ததாரர் தேர்வானதும் பணிகள் 4 மாதங்களுக்குள் முடிக்கப்படும்.

‘தமிழக பேட்டரி ஸ்டோரேஜ் கொள்கை’க்கு அரசு ஒப்புதல்

சென்னை: சூரியசக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்தைச் சேமித்துத் தேவையான நேரத்தில் பயன்படுத்த வகை செய்யும் ‘தமிழக பேட்டரி ஸ்டோரேஜ் கொள்கை’க்குத் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2,500 மெகாவாட் மின்சாரத்தைச் சேமிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியான நிறுவனங்களுக்குத் திட்டம் நிறுவப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு டிரான்ஸ்மிஷன் மற்றும் வீலிங் கட்டணங்களில் 100% விலக்கு அளிக்கப்படும்.

அன்பில் மகேஸூக்கு 3 நாள் காவல்

சென்னை: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கச் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விசாரணையின் போது அவரை உடல், மன ரீதியாகத் துன்புறுத்தக் கூடாது என்றும், தினமும் அவரது வழக்கறிஞரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

ஓ. பன்னீர் செல்வத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

சென்னை: போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெற்ற வெற்றியை எதிர்த்து வாக்காளர் டி. கண்ணன் தொடர்ந்ததேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் இத்தொகுதியில் 85,206 வாக்குகள் பெற்று, 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார். அவரது வெற்றியைச் செல்லாததாக அறிவிக்கக் கோரி கண்ணனும், சென்னையைச் சேர்ந்த வாக்காளர் மிலானியும் தனித்தனியே வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். கண்ணனின் வழக்கை நிராகரிக்கக் கோரி பன்னீர்செல்வம் மனு செய்தார். முழு விசாரணை நடத்தத் தேவையான ஆதாரங்கள் இல்லை என்ற அவரது தரப்புவாதத்தை ஏற்ற நீதிபதி பி.பி. பாலாஜி, வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார். மிலானி தொடர்ந்த மற்றொரு வழக்குநிலுவையில் உள்ளது.

கொடைக்கானலில் ஆய்வு

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்தகனமழையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. குறிப்பாக, பெருமாள்மலை - அடுக்கம்

- பெரியகுளம் மலைப்பாதையில் வெள்ளத்தில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்நிலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மத்திய புவியியல் ஆய்வு மையக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

உலகப் பொருளாதார மன்றக் கூட்டம்: முதல்வர் விஜய்க்கு அழைப்பு

சென்னை: சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் அடுத்தஆண்டு ஜனவரி 18 முதல் 22 வரை நடைபெறும் உலகப்பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மன்றத் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான அலோய்ஸ் ஸ்விங்ஜி, நிர்வாக இயக்குநர் மாரோன் கைரூஸ் ஆகியோரின் அழைப்பை ஏற்றே அவர்செல்கிறார்.

முன்னேற்பாடுகளுக்காகத் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா சுவிட்சர்லாந்து செல்ல உள்ளார். தமிழகத்தை 1.5

லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்குடன் அரசு செயல்படும் நிலையில், இந்த மாநாடு சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் வாய்ப்பாகக் கருதப்படுகிறது. 57 ஆவது ஆண்டுக் கூட்டமான இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், 1,000-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், ஊடகத்தினர் பங்கேற்பர். இதுவரை தமிழகம் சார்பில் பெரும்பாலும் தொழில்துறை அமைச்சர்களே கலந்து கொண்டு வந்த நிலையில், முதலமைச்சரே நேரில் செல்வது கவனம் பெற்றுள்ளது.

தலைமை தகவல் ஆணையர் நியமனம்

சென்னை: தமிழ்நாட்டின் புதிய தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ். நடரா

ஜனை நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநில தகவல் ஆணையர்களாக மகாலட்சுமி, சபீர், மீனா, மகா

லிங்கம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அர

சாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

சென்னை: தெற்கு அந்தமான் கடலில் உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நவம்பர் 1 முதல் தமிழகத்தில் மழையைத் தீவிரப்படுத்தும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 1 முதல் திருச்சி, சேலம் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும், நவம்பர் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டங்களிலும்கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.