தீக்கதிர் விரைவு செய்திகள்
3 Nov 2026, 10:25 pm

தமிழகத்தில் மழை தொடரும் வாய்ப்பு!

சென்னை, நவ. 3 –வங்கக்கடலில் உருவான முரசு புயல், தெற்கு ஆந்திரக் கடற்கரையில் நெல்லூர் – நரசாபுரம் இடையே, ஓங்கோல் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணி முதல் 5.30 மணிக்குள் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.கனமழையால், கடலூர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

கரையைக் கடந்த முரசு புயல் தற்போது பாபட்லா அருகே நிலைகொண்டுள் ளது. இந்நிலையில், புயலின் வெளிப்புறச் சுழற்சியால் வட தமிழகம், புதுச்சேரியில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையஇயக்குநர் தெரிவித்துள் ளார். வடகிழக்குப் பருவமழை இதுவரை இயல்பைவிட 18 சதவீதம் அதிகமாகப் பெய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விலையில்லா வேட்டி – சேலை விநியோகம்!

சென்னை, நவ. 3 –தீபாவளியையொட்டி, முதியோர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா வேட்டி – சேலைகள் வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. நவம்பர் 7-ஆம் தேதி வரைவேட்டி – சேலைகள் வழங்கப்படும்.

பட்டினப்பாக்கம் கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்திவைப்பு!

சென்னை, நவ. 3 –பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நவம்பர் 5-ஆம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (நவ. 3) நடைபெறவிருந்த இக்கூட்டத்துக்கு எழுத்துப் பூர்வமான அழைப்பு வரவில்லை என மீனவர்கள் தெரிவித்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

போராடும் சங்கப் பிரதி நிதிகளை அழைக்காமல், கிராமத்துக்கு ஒருவரை மட்டும் தொலைபேசியில் அழைத்ததாகத் தென்னி ந்திய மீனவர் நலச் சங்கத் தலைவர் பாரதி குற்றம் சாட்டினார். எழுத்துப்பூர்வ மான அழைப்பு இல்லாவிட்டால் பங்கேற்கமாட்டோம் எனக் கடிதம் அளித்ததாக வும், முறைப்படியான கூட்ட த்தில் பங்கேற்று, அந்த இடம்மீனவர்களுக்கான குடியிருப்புக்குரியது என்பதை ஆதாரத்துடன் எடுத்துரைத்துத் திட்டத்தை எதிர்ப்போம் என்றும் அவர்தெரிவித்துள்ளார்.

முட்டைக் கொள்முதல் விலை உயர்வு!

நாமக்கல், நவ. 3 –முட்டையின் கொள்முதல் விலை செவ்வாய்க் கிழமை 10 காசுகள் உயர்ந்து, ரூ. 6.40 ஆனது. கடந்த 5 நாள்களில் மொத்தம் 70 காசுகள் உயர்ந்துள்ளது. புதிய விலை இன்றுகாலை முதல் அமலுக்கு வரும்.

டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் 245 பேர் பணியிடை நீக்கம்!

சென்னை, நவ. 3 –காலி மதுப்பாட்டில்களைத் திரும்பப் பெற்று ரூ. 10 வழங்கும் திட்டத்தை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாகக் கூறி,மேற்பார்வையாளர்கள் 245 பேரை டாஸ்மாக் நிறுவனம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும், 1,729 பேருக்கு விளக்கம் கோரும்நோட்டீஸும் அனுப்பியுள்ளது. டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம் காரணமாக, செவ்வாய்க்கிழமையும் பல கடைகள்மூடப்பட்டுள்ளன. திறக்கப்பட்டுள்ள சில கடைகளில் நீண்ட வரிசை காணப்படுகிறது.

அரசு விளக்கம்

ஊதியக் குறைவைக் காரணம் காட்டி, முன்பு மதுப்பாட்டில் ஒன்றுக்கு ரூ. 10 கூடுதலாக வசூலிக்கப்பட்டது. தவெக ஆட்சியில் ஊதியம் உயர்த்தப்பட்டு, போனஸ் அறிவிக்கப்பட்டு, விடுமுறைகள் ஒழுங்கு படுத்தப்பட்டன.கடைப் பராமரிப்பு நிதியும் வழங்கப் பட்டது. அதன் பிறகும் கூடுதல் வசூலைத் தடுக்கவே, அதிகபட்ச சில்லறை விற்பனைவிலையுடன் (MRP) ரூ. 10 சேர்க்கப்பட்டது. அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்ட பின்னரும் அரசை மிரட்டும் வகையில்நடந்துகொள்வதாலேயே ஊழியர்கள் அடுத்தடுத்து பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனர் என்று அரசு தெரிவித்துள்ளது.

டிரோன் தாக்குதலில் இந்திய மாலுமி பலி!

மஸ்கட், நவ. 3 -ஓமன் கடற்கரைப் பகுதியில், திங்கட்கிழமை மாலை (இந்திய நேரப்படி நள்ளிரவு) சென்று கொண்டிருந்தஇந்தியக் கொடி பொருத்தப் பட்ட ‘எம்எஸ்வி ஏஎல் ஜூஸுபி (MSV Al Jusufi)’ சரக்குக் கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், குஜராத்தைச் சேர்ந்தஇந்திய மாலுமி காந்தர் நஹீம் அஜீஜ்உயிரிழந்தார். 13 மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியது அமெரிக்காவா, ஈரானா என்பது தெரியவராத நிலையில், இந்திய மாலுமி கொல்லப்பட்டதற்கு இந்தியஅரசின் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.