தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

15 Jun 2026, 10:34 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

காவலரின் குடும்பத்துக்கு  ரூ. 30 லட்சம் நிதியுதவி

சென்னை, ஜூன் 15 - இராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் எம். மகேஷ்குமாரின் குடும்பத்துக்கு ரூ. 30 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரை உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் திங்களன்று (ஜூன் 15) கைப்பற்றினர். இந்த டிராக்டரை தேவிப்பட்டினம் காவல் நிலையத்தை நோக்கி, தலைமைக் காவலர் மகேஷ்குமார் (41) ஓட்டி வந்தார்.  அப்போது, இராமநாதபுரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் நாகர்கோவிலிலிருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து எதிர்பாராத விதமாக டிராக்டரின் பின்புறம் மோதியது. இதில் காவலர் மகேஷ்குமார் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மிகுந்த வருத்தம் தெரிவித்த முதலமைச்சர் ச. விஜய், காவலரின் குடும்பத்தினருக்கு 30 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

பரங்கிப்பேட்டை ஹைட்ரோகார்பன் கிணறுகளை தடுக்க வேண்டும் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 15 - கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கடற்பகுதியில் நான்கு ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் விவசாயிகள், பொது மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த வகை ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது என்று நினைவுபடுத்திய அவர், ஓஎன்ஜிசி நிறுவனம் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள முயன்றபோதும் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் மூலம் அனுமதி மறுக்கப்பட்டதை எடுத்துக் கூறினார். புதிதாக பதவியேற்றுள்ள அரசும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பை தொடர வேண்டும் என்றும், கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் எந்த அனுமதியும் வழங்காமல் தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும் திமுக வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.

தமிழக மாலுமி உடலை கொண்டுவர நடவடிக்கை

சென்னை, ஜூன் 15 - ஓமன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த மாலுமி நிஷாந்தின் உடலை தமிழகம் கொண்டுவர நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிஷாந்தின் மரணம் குறித்து சந்தேகம் தெரிவித்த உறவினர்களின் கோரிக்கையை ஏற்று உடற்கூறு ஆய்வுக்காக அவரது உடல் ஓமனிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சட்ட ரீதியான நடைமுறைகள் அங்கு மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும், ஆய்வு நிறைவடைந்தவுடன் இந்திய தூதரகம் மூலம் நிஷாந்த் உடல் தமிழகம் கொண்டுவரப்படும் என்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக அரசின் செலவில் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படும் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விருது பெற்ற ராணுவ வீரருக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு

சென்னை, ஜூன் 15 - இந்திய அரசின் ‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் ‘லான்ஸ் நாயக்’ மீனாட்சி சுந்தரத்திற்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 48 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புப் படை வீரர்கள் பல்வேறு விருதுகளைப் பெறும்போது, அவர்களைப் பெருமைப் படுத்தும் வகையில், விருதுகளுக்கேற்ப தமிழ்நாடு அரசு ரொக்கப் பரிசு வழங்கி சிறப்பித்து வருகிறது. அதன்படி, ‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற ‘லான்ஸ் நாயக்’ மீனாட்சி சுந்தரத்திற்கு, திங்கட்கிழமை (ஜூன் 15) அன்று சென்னை தலைமைச் செயலகத்தில், ரொக்கப் பரிசுக்கான காசோலையை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்.

இந்திய ராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவில் பணியாற்றி வரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ‘லான்ஸ் நாயக்’ மீனாட்சி சுந்தரம், கடந்த 2024 டிசம்பர் 19 அன்று ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலுள்ள குல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது, முகம் மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் அடைந்த நிலையிலும் கடமையில் தளராமல் போராடி பயங்கரவாதிகளை வீழ்த்தினார்.

அவரது வீரதீரச் செயலைப் பாராட்டி, இந்தியாவின் இரண்டாவது உயரிய அமைதிக்கால வீர விருதான ‘கீர்த்தி சக்ரா’ விருதை, மீனாட்சி சுந்தரத்திற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் கடந்த ஜூன் 8 அன்று புதுதில்லியில் நடந்த விழாவில் வழங்கி சிறப்பித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.