தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

15 Jul 2026, 10:04 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

காமராஜர் படத்திற்கு முதலமைச்சர் மலரஞ்சலி!

சென்னை: காமராஜரின் 124-ஆவது பிறந்த நாளை யொட்டி, சென்னை அண்ணா சாலையில் பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள காமராஜர் உருவச் சிலைக்கு முதல மைச்சர் விஜய் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், எளிமை, நேர்மை, தியாகம், தொலை நோக்குப் பார்வை, மக்கள் சேவை போன்ற பண்புகளால் இந்திய அரசியலில் தனி முத்திரை பதித்த காமராஜரின் அடிச்சுவட்டில் பயணித்து வளமான தமிழகத்தை உரு வாக்க உறுதியேற்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தமது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாட்டின் கல்வி, தொழில், வேளாண் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்த காமராஜ ருக்குப் புகழ்வணக்கம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

கேரள உள்துறை அமைச்சர் முதல்வர் விஜய்-யுடன் சந்திப்பு!

சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய்யை கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா புதன் கிழமை சென்னையில் நேரில் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதை ஒழிப்பு தொடர்பாகவே இந்தச் சந்திப்பு நடைபெற்ற தாகவும், கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதைப் பொருள் கும்பல் செயல்படுவதால் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முதலமைச்சர் விஜய்யை கேரளத்திற்கு வரு மாறு அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு-கேரள எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என முதல்வர் விஜய் உறுதியளித்ததாக வும், போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக விரைவில் ஐந்து மாநிலங்களின் காவல்துறை தலைவர்கள் (டிஜிபி) சந்திப்பு நடைபெற உள்ளதாகவும் சென்னிதலா குறிப்பிட்டார்.

மேகதாது அணை விவகாரம்: கன்னட அமைப்புகள் போராட்டம்

சென்னை: கர்நாடக அரசின், மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு, விவசாயிகள் சங்கங் கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்நிலையில், மேகதாது அணைத் திட்டத்தை உட னடியாக செயல்படுத்தக் கோரி கன்னட சலுவாலி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கர்நாடக - தமிழ்நாடு எல்லையில் முழு அடைப்புப் போராட்டம் அறி விக்கப்பட்டது. இதனால் பதற்றமான சூழல் ஏற்படாதவாறு இரு மாநில எல்லைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு பக்கமும் பேருந்து கள் நிறுத்தப்பட்டன. சேலம், தருமபுரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளி லிருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகள் ஓசூர் எல்லையி லேயே தடுக்கப்பட்டதுடன், கர்நாடகத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகளும் அத்திப்பள்ளி அருகில் நிறுத்தப்பட்டன. இத னால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் எ.வ. வேலு ஆஜர்!

சென்னை: நெடுஞ்சாலை துறையில் ரூ. 3.23 கோடி முறைகேடு நடந்திருப்பது தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீ சார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக, சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ. வேலு புதன்கிழமை யன்று நேரில் ஆஜரானார்.

பைக் டாக்சிக்கு அனுமதி? அரசு பதிலளிக்க உத்தரவு!

மதுரை: தமிழகத்தில் பைக் டாக்சிகளுக்கான அனுமதி தொடர்பாக தமது நிலைப்பாட்டை அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பைக் டாக்சிகளை ஒழுங்கு படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின் போது, பைக் டாக்சி கட்டண நிர்ணயம் உள்ளிட்ட விதிமுறை களை உருவாக்க நிபுணர் குழு ஒன்று ஏற்கெனவே அமைக்கப் பட்டுள்ளதாகவும், அதற்கு ஆறு மாத கால அவகாசம் தேவை எனவும் அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்திற்கு கூடுதலாக 150 எம்பிபிஎஸ் இடங்கள்!

சென்னை: 2026-27 கல்வியாண்டில், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர் ஆகிய மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்கள் விகிதம் கூடுதலாக 150 எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு தேசிய மருத்துவ ஆணை யம் ஒப்பதல் வழங்கியுள்ளது. இதன்மூலம், மேற்கண்ட 3 கல்லூரிகளிலும் மொத்த மாணவர் சேர்க்கை இடஙகள் 100- லிருந்து 150 ஆக உயர்ந்துள்ளது. இந்தக் கூடுதல் ஒதுக்கீட்டால் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 5,349 ஆக உயர்ந்து உள்ளது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அனைத்தையும் சேர்த்து இந்தக் கல்வியாண்டில் மொத்தம் 13,999 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அதிக எம்பிபிஎஸ் இடங்கள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் 15,395 இடங்களுடன் கர்நாடகம் முதலிடத்திலும், 14,000 இடங்களுடன் உத்தரப் பிர தேசம் இரண்டாமிடத்திலும், 13,999 இடங்களுடன் தமிழகம் மூன்றாமிடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கபடி அணி பயிற்சியாளர் கைது!

சென்னை: சென்னை அருகே கண்ணகி நகரில் கபடி பயிற்சியாளராகப் பணிபுரியும் ராஜூ (34) மீது, கண்ணகி நகர் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் வசிக்கும் கபடி வீராங்கனை ஒருவர் செம்மஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனக்குப் பாலியல் தொல்லை அளித்து மிரட்டிய தாகவும், தாய் இல்லாத நேரங்களில் மூன்று முறை வீட்டிற்கு வந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், தன்னைப் போன்று மேலும் பல மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான ராஜூவை கொடைக்கானலில் கைது செய்து, தற்போது சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லஞ்சம்: தவெக ஊராட்சி மன்றத் தலைவர் நீக்கம் செங்கல்பட்டு:

செங் கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும் தவெக நிர்வாகியுமான வீராசாமி, ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ரூ. 1.3 லட்சம் லஞ்சம் வாங்கிய காணொளி வெளியாகி வைரலான நிலையில், அவர் தவெக கட்சியி லிருந்து நீக்கப்பட்டு உள்ளார். முன்னதாக, லஞ்சம் தொடர்பாக விளக்கம் அளித்த வீரா சாமி, அது லஞ்சப் பணம் அல்ல, கைமாற்றுப் பணம் என தெரிவித்து உள்ளார்.

லஞ்சம் குறித்த புகார் அளிக்க ‘வாட்ஸ் அப்’ எண் அறிமுகம்!

சென்னை: தமிழ கத்தில் அரசு அலுவல கங்களில் லஞ்சம் கேட்கப் பட்டால், அது தொடர் பாக பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் ‘9498180936’ என்ற ‘வாட்ஸ் ஆப்’ உதவி எண்ணை அறிமுகப் படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து அரசுத் துறை களின் இணையதளங்க ளிலும் இந்த ‘வாட்ஸ் அப்’ எண் இடம்பெற வேண்டும் எனவும், அத னுடன் லஞ்ச ஒழிப்புத் துறையின் இணையதள இணைப்பும் இடம்பெற வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு பணி நீட்டிப்பு!

சென்னை: தமிழக அர சின் தலைமைச் செயலா ளரான சாய்குமார், கடந்த ஏப்ரல் 23 அன்று தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டிருந்தார். ஆகஸ்ட் 30-ஆம் தேதி யுடன் இவரது பதவிக் காலம் நிறைவடைய இருந்த நிலையில், அதை நீட்டிக்குமாறு தமி ழக அரசு ஒன்றிய அரசி டம் கோரிக்கை வைத் தது. இக்கோரிக்கையை ஏற்ற ஒன்றிய அரசு, தலைமைச் செயலாளர் சாய்குமாரின் பதவிக் காலத்தை ஆறு மாதங் களுக்கு நீட்டித்துள்ளது. இதன் விளைவாக, சாய்குமாரின் பதவிக் காலம் 2027 பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.